குஷ்பூக்கு ஜோடியாகும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்.. புதிய கதையுடன் புது சீரியல் தொடக்கம்
சென்னை: 80ஸ் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகம் ஆகி இப்போது வரைக்கும் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை குஷ்பூ புதியதாக நடிக்கும் சீரியலில் அவருக்கு ஜோடியாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் இருக்கிறார். இந்த சீரியலின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஒரு காலத்தில் சினிமாவில் ஆஹா ஓஹோ என்று கலக்கிக் கொண்டிருந்த பல நடிகைகள் சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியதும் சின்னத்திரையை நோக்கி அடி எடுத்து வைத்தார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு நடிகை குஷ்பூ, சுகன்யா, ராதிகா போன்றோர் சினிமாவில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் போது சின்னத்திரையிலும் நடிக்க தொடங்கி விட்டார்கள்.

ஃபேவரைட் நடிகைகள்
சினிமாவைப் போலவே சின்னத்திரையிலும் தங்களுக்கு என்று அதிகமான ரசிகர்களை உருவாக்கி விட்டார்கள். சினிமாவில் நடிக்கும் நாயகிகளை ஆண்கள் தான் அதிகமாக ரசிப்பார்கள். ஆனால் சின்னத்திரைக்கு வரும் கதாநாயகிகள் பெண்களின் பேவரைட் ஹீரோயினியாக மாறிவிடுவார்கள். அதுபோலத்தான் நடிகை குஷ்பூ, ராதிகா போன்றோர் மாறி இருந்தனர்.
கோவில் கட்டிய ரசிகர்கள்
அதிலும் நடிகை குஷ்புவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவருடைய ஆரம்ப கால திரைப்படங்களில் இருந்து திருமணத்திற்கு பிறகு இவர் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் வரை எல்லாமே வித்தியாசமான கதை அம்சம் கொண்டதாக இருந்து வருகிறது. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்திவிடும் குஷ்புவுக்கு கோவில் கட்டிய கதை எல்லாம் உண்டு.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்
குஷ்பூ நடிகையாக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு குஷ்பூ தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். ஆனால் இப்போது அவர் சீரியலில் அதிகமாக நடிக்கவில்லை. இந்த நிலையில் தான் தற்போது அவர் சரோஜினி என்ற புதிய சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க இருக்கிறார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் நண்பராக நடித்து வரும் நடிகர் அரவிந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
குஷ்புவுக்கு ஜோடி
அரவிந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷ்புவுடன் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அரவிந்த் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் ராஜு கேரக்டரில் நடித்திருந்தார். அதற்கு பிறகு அவர் நடிக்கும் சீரியலில் அவருக்கு பெரியதாக அழுத்தமான கேரக்டர் இல்லை என்பது அவருடைய ரசிகர்களின் வருத்தமான கருத்தாக இருந்தது.

சரோஜினி சீரியல்
இந்த நிலையில் இப்போது டிடி தொலைக்காட்சியில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சரோஜினி தொடர் மூலமாக இவருக்கு மீண்டும் வலுவான ஒரு கேரக்டர் கிடைத்திருக்கிறது. அரவிந்துக்கு நம்முடைய சார்பாக வாழ்த்துக்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications