அந்த இயக்குனரை இப்போ நான் பிளாக் பண்ணிட்டேன்! மீண்டும் பழைய பிரச்சனை, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதங்கம்
ஆண்டுகளாக வெளிப்படையாக பேசிக் கொண்டிருப்பவர் நடிகையும், தொகுப்பாளினியும் ஆன லட்சுமி ராமகிருஷ்ணன். குறிப்பாக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம், பல குடும்பப் பிரச்சனைகளையும், உறவுச் சிக்கல்களையும் நேரடியாக கேள்வி கேட்டு, தீர்வு தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவருக்கு ஆதரவு கிடைத்ததோடு, எதிர்ப்புகளும் உருவானது.

அருவி திரைப்பட காட்சி
இந்த நிலையில், அருவி திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி, "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியை கிண்டல் செய்வது போல இருப்பதாக லட்சுமி ராமகிருஷ்ணன் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த படத்தை இயக்கியவர் அருண் பிரபு. படத்தில் இடம்பெற்ற அந்த காட்சி குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்த போது, லட்சுமி ராமகிருஷ்ணன் தன் மனவேதனையை வெளிப்படுத்தினார்.
நடிகை லட்சுமி தான் என்னுடைய அம்மா! என் அப்பா போலீஸ்காரர், சேலத்தில் நடந்த சம்பவம்! நடிகர் சரவணன் உருக்கம்
அந்த காட்சி தன்னை மனதளவில் பாதித்ததாகவும், பெண்களைப் பற்றிய பிரச்சனைகளை பொழுதுபோக்காக மாற்றுவது சரியா என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார். அதுமட்டும் இல்லாமல், இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குநர்கள் தைரியம் இருந்தால் நேருக்கு நேர் கேமரா முன் வந்து தன்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும் என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் சவால் விடுத்திருந்தார்.
“இது அரசு விருதா… இல்ல பேமிலி விருதா?”.. தமிழக அரசு விருது பட்டியல் குறித்து நடிகை லட்சுமி கொந்தளிப்பு
"நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும்போது பலர் தப்பிக்க முடியாமல் மௌனம் காக்கிறார்கள். அதேபோல உண்மையான விவாதம் நடந்தால் தான் விஷயம் வெளிச்சத்திற்கு வரும்" என்று அவர் அந்த நேரத்தில் போஸ்ட் எல்லாம் போட்டு இருந்தார். இதனால் இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியது.

அறுவி பட இயக்குனர் பிளாக்
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், அறுவி படத்தை இயக்கிய அருண் குறித்து ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். "அவர் நீண்ட நாட்களாக என்னை சமூக வலைதளத்தில் பின்தொடர்ந்து வந்திருக்கிறார். ஆரம்பத்தில் அது யார் என்று எனக்கு தெரியவில்லை. பிறகு அவர் அறுவி படத்தின் இயக்குநர் என்று தெரிந்ததும், உடனே அவரை நான் பிளாக் செய்து விட்டேன்" என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்பே சில இயக்குநர்கள் குறித்து தன்னுடைய ஆதங்கங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்த லட்சுமி ராமகிருஷ்ணன், தற்போது இந்த பிளாக் செய்த விவரத்தையும் வெளிப்படையாக கூறியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"என்னைப் பற்றி அல்லது என் நிகழ்ச்சி பற்றி தவறாக பேசுபவர்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என்று அவர் சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் விஜய் டிவியில் லட்சுமி ராமகிருஷ்ணனை அவ்வளவு கலாய்த்தார்களே பிறகு அங்கேயே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போய்விட்டாரே என்றும் சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமூக பார்வை குறித்த கவலை
-
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications