மகளை ஏமாற்ற விரும்பவில்லை.. மூன்று வருடங்களுக்குப் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் செய்த செயல்
சென்னை: லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய மகளுக்காக மூன்று வருடங்களுக்கு பிறகு செய்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இரவு நேரத்தில் குடும்பத்தோடு புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய கணவரை செல்லமாக கலாய்த்து பதிவு வெளியிட்டார்.
ஆறு மாதங்களாக உடல்நிலை சரியில்லாத மகளுக்காக தன்னால் முடியாமல் இருக்கும் நேரத்திலும் மூன்று வருடங்களுக்குப் பிறகு திரையரங்குக்கு சென்றதாக லட்சுமி ராமகிருஷ்ணன் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

வருத்தமான பதிவு
லட்சுமி ராமகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்பு, எங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் 6 மாதங்கள் ஆகிறது. இது ஒரு நெருக்கடி, ஆனால் அவரது அருளால் 20 மருத்துவர்கள் தங்களால் இயன்றதைச் செய்தார்கள், இறுதியாக டாக்டர் ராமசுப்பு இங்கு வரை எங்களை வழிநடத்தினார், ஸ்ரேயா முழுமையாக குணமடையவில்லை என்றாலும் சிறப்பாக செயல்படுகிறார். என்று பதிவிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவை பார்த்த இனையவாசிகள் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆறுதலை கூறி வருகின்றனர்.

மகளுக்காக செய்த செயல்
ஜீ தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பிரபலமாகி கொண்டிருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், தான் ஒரு நடிகை மற்றும் இயக்குனர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த அம்மா என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய மகள் 6 மாதங்களாக நோயோடு போராடி தற்போது அதிலிருந்து சரியாகிக்கொண்டிருக்கிறார் என்ற தகவலை ஏற்கனவே சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இப்போது தன்னுடைய மகளுக்காக மூன்று வருடங்களுக்குப் பிறகு திரையரங்குக்கு சென்றுள்ளாராம்.

கணவனை கலாய் த்து போஸ்ட்
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தூக்கம் வருவதாகவும் தன்னுடைய மகள் ஸ்ரேயாவை ஏமாற்ற விரும்பவில்லை அதனால் தான் அவருக்காக மூன்று வருடங்களுக்குப் பிறகு திரைப்படத்திற்கு செல்கிறேன் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவருடைய கணவர் இவர் வெளியே செல்ல வில்லை என்றால் வீட்டிலேயே இருக்க விரும்புவாராம். வெளியே செல்ல சோம்பேறி என்று தன்னுடைய கணவரை இந்த பதிவில் செல்லமாக கலாய்த்து இருக்கிறார்.

ரசிகர்கள் கருத்து
லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் மகளுக்காக நாங்கள் எவ்வளவோ கஷ்டங்களை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், நீங்கள் ஒரு திரைப்படத்திற்கு செல்வதற்கு இவ்வளவு அலட்டிக் கொள்கிறீர்களே என்று கலாய்த்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் நீங்கள் உங்கள் மகளுக்காக செய்யும் ஒவ்வொரு செயலும் அவரை விரைவில் நோயில் இருந்து குணப்படுத்தி கொண்டு வந்து விடும் அதனால் மகிழ்ச்சியோடு வைத்திருங்கள் என்று வாழ்த்துக்களையும் ஊருக்கே நாட்டாமை செய்பவருக்கு அறிவுரைகளையும் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications