"இது நடிப்பு மேடம்" டயலாக் புகழ் லாரன்ஸ் பற்றி.. முதல் முறை ரகசியம் உடைத்த லட்சுமி ராமகிருஷ்ணன்!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த லாரன்ஸ் பற்றி தான் தற்போது அதிகமாக பலரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் லாரன்ஸ் பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதோடு லாரன்ஸ் அந்த நிகழ்ச்சியில் அப்படி நடந்து கொள்ள காரணம் என்ன என்பதும் லாரன்ஸ் கேரக்டர் குறித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த நிகழ்ச்சியில் குடும்ப சண்டை, காதல் தோல்வி, விவாகரத்து, உறவினர்கள் சண்டை, அடிதடி போன்ற பல பிரச்சனைகளோடு வரும் நபர்களை பேசி உட்கார வைத்து அவர்களுக்கு தீர்வு காணும் வகையில் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் இந்த நிகழ்ச்சி இப்போது நிறுத்தி விட்டார்கள். ஆனால இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமாகி இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் லாரன்ஸ். இவர் இந்த நிகழ்ச்சியில் "மேடம் இது ஆக்சன் மேடம்... இது நடிப்பு மேடம்..." என்றெல்லாம் பேசிய வார்த்தைதான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
எந்த ஒரு வீடியோவில் யாரை கலாய்க்க வேண்டும் என்றாலும் இவருடைய புகைப்படம் தான் அங்கு இடம் பெற்று விடுகிறது. இதை பார்த்த பலரும் இப்போது லாரன்ஸ் என்ன செய்கிறார் எங்கு எப்படி இருக்கிறார் என்றெல்லாம் அவரை தேடிக் கொண்டிருந்த நிலையில் பிரபல youtuber ஒருவர் லாரன்ஸை தேடி அவர் வேலை செய்த இடத்திற்கு சென்று இருக்கிறார்.
லாரன்ஸ் கோயம்பேட்டில் உள்ள ஒரு காய்கறி மண்டியில் தான் வேலை செய்தேன், அங்கு மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன் என்று சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பேசி இருந்தார். இதனால் அவரை அங்கு போய் விசாரித்ததில் அங்கு பலரும் அதிர்ச்சிகரமான பல உண்மைகளை உடைத்திருக்கின்றனர். அதாவது லாரன்ஸ் என்பது அவருடைய உண்மையான பெயர் கிடையாதாம்.

அவருடைய உண்மையான பெயர் விருமாண்டி தானாம். ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் லாரன்ஸ் என்று மாற்றிக் கொண்டாராம். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்குப் பிறகும் கோயம்பேட்டில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம். மூட்டை தூக்கி சம்பாதிக்கும் பணத்தில் நன்றாக சாப்பிடுவாராம், நிறைய குடிப்பாராம், வேலை செய்யும் இடத்திலேயே தூங்கிக் கொள்வாராம். கொரோனாவுக்கு பிறகு அவரை அவரோடு வேலை பார்த்தவர்கள் பார்க்கவே இல்லையாம்.
எங்கே சென்றார் என்று கூட தெரியவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியவில்லை ஒருவேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக வேலைக்கு வந்து இருப்பார். ஆனால் இப்போது அவருக்கு என்ன ஆனது என்று எங்கள் யாருக்கும் தெரிவதில்லை என்று அங்கு இருந்த அனைவருமே அந்த வீடியோவில் கூறி இருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் லாரன்ஸ் குறித்து சொல்வதெல்லாம் நிகழ்ச்சியை அப்போது தொகுத்து வழங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் எத்தனை எத்தனையோ குற்றவாளிகளை உட்கார வைத்து சொல்வதெல்லாம் நிகழ்ச்சி மூலம் அவர்களிடம் பேசுகிறோம். படித்தவர்களை விட படிக்காதவர்களிடம் தான் நிறைய திறமை இருக்கும். சில பேரு நான்கு கொலைகள் செய்து விட்டு வந்து என் எதிரே உட்கார்ந்து எதார்த்தமாக பேசுவார்கள்.
அவர்களிடமும் ஹியூமர் சென்சும் இருக்கும். ஒருத்தவங்களை ஒரு கோணத்தில் மட்டுமே காண்பிக்காமல் அவர்களுடன் மற்றொரு குணத்தையும் வெளிப்படுத்துவோம். அதோட வெளிப்பாடு தான் லாரன்ஸ்... மாதிரியான ஆட்கள் அன்னைக்கு நிகழ்ச்சிக்கு லாரன்ஸ் வந்தது இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
அவருக்குள்ள அப்படி ஒரு காமெடி சென்ஸ் அதனால்தான் அவர் பேசியபோதும், ஆக்சன் பண்ணுன போதும் அமைதியாக இருந்தோம். அந்த திறமை மக்களுக்கு தெரியணும் தான் அப்படியே ஒளிபரப்பினோம். நாங்கள் நினைத்திருந்தால் எடிட் பண்ணி இருக்கலாம் இல்லையா? ஆனால் அப்படி செய்யவில்லை. அவர் தப்பு பண்ணிட்டு வந்திருந்தா கூட அவருடைய திறமையை ரசித்தோம்.

அதே நேரத்தில் அவருடைய தப்பை நியாயப்படுத்தவில்லை. அவருக்கு நாங்கள் சப்போர்ட்டும் பண்ணவில்லை. லாரன்ஸுக்கு இருக்கிற திறமைக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருந்தால் அவரும் பெரிய காமெடியனாக வந்திருப்பார். நாங்கள் இந்த நிகழ்ச்சியை வெறும் ஷோக்காக மட்டும் நடத்திட்டு அவங்கள அப்படியே அனுப்பப்படுவது கிடையாது. பல பெண்களுக்கு நாங்கள் எங்களால் முடிந்த அளவிற்கு சுய தொழிலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கோம்.
ஆனால் லாரன்ஸுக்கு எங்களோட பண உதவி தேவைப்படவில்லை. அவர் தெரிந்து குடும்பத்தோட வாழனும் என்று ஆசைப்பட்டார். அவரை திருந்தி குடும்பத்தை ஒன்று சேர்த்தது எங்களுக்கும் அப்போ ஒரு ஆறுதலாக இருந்தது. கண்ணனுக்கு லாரன்ஸாலோ இல்லனா லாரன்ஸ்க்கு கண்ணனாலோ உயிருக்கு ஆபத்தா முடிந்திருக்கும். நாங்க ரெண்டு பேரையும் அழைத்து எதிர்காலத்தில் நடக்க இருந்த ஆபத்தை தடுத்திருக்கிறோம்.
இரண்டு குடும்பங்களும் மன நிம்மதியோடு வாழ்வதற்கான வாய்ப்பை வாங்கி கொடுத்தோம். ஆனால் அதற்குப் பிறகு லாரன்ஸ் எங்கு இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது. லாரன்ஸோடு எங்களுக்கு தொடர்பு இல்லை. இப்ப அவர் எங்க எங்கே என்ன பண்ணுறார் என்று தெரியவில்லை என்று அந்த பேட்டியில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியிருக்கிறார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications