ஆஹா..ஆஹா.. இப்படியும் செய்யலாம்... அருமை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில். லட்சுமி ஸ்டோர்ஸ் நொடிச்சு போகும் நிலைமை .காரணம் யாருன்னு பார்த்தா நம்ம சகுந்தலா தேவி மத்திய இணை அமைச்சருங்க.

முன்பகை காரணமாக லட்சுமி ஸ்டோர்ஸ் மகாலட்சுமி அதாங்க குஷ்பூவுக்கு கஷ்டம் குடுக்க நினைக்கறாங்க சகுந்தலா தேவி. இந்த நஷ்டத்தையே காரணம் காமிச்சு லட்சுமி ஸ்டோர்ஸை எழுதித் தர கேட்கறாங்க.

இந்த சமயத்துலதான் 10 ஆயிரம் பட்டுப் புடவைகளை சகுந்தலா தேவி பொண்ணு மாப்பிள்ளை பேரை போட்டு நெய்து தர, தான்னு தெரியாதபடிக்கு மறைமுகமா ஆர்டர் தர்றங்க. ஆனா, விலை உயர்ந்த 10 ஆயிரம் பட்டு புடவையையும் ஆர்டர் குடுத்தவங்க வாங்கலை.

ஆஸ்பத்திரியில்

ஆஸ்பத்திரியில்

குஷ்பூ ஆஸ்பத்திரியில் கோமாவுல இருக்காங்க.. என்ன செய்யறதுன்னு மொத்த குடும்பமும் கவலையில் இருக்காங்க. அப்போதான் கடையில வேலை செய்யற லட்சுமி, குஷ்பூவைப் பார்க்க வர்றாங்க.குஷ்பூ சைகையில் எதோ சொல்ல அதை புரிந்துகொண்டு சகுந்தலா தேவியின் மோதிரத்தையும் எடுத்துக்கிட்டு ராத்திரியோட ராத்திரியா கடைக்கு போறா.

கட்சி சின்னம்

கட்சி சின்னம்

சகுந்தலா தேவியின் மோதிரத்தில் அவரது கட்சி சின்னமான பட்டாம் பூச்சி இருக்கு. இராவோடு இரவாக வேலையாட்களை வரவழைத்து, கம்பியூட்டரில் மோதிரத்தில் இருக்கும் அதே பட்டாம்பூச்சி சின்னத்தை டிசைன் ஆக்கி மணமகள் பெயர் இருந்த இடத்தில் பட்டாம் பூச்சியை எம்ராய்டரி செய்ய வைக்கறா லட்சுமி.

இலவச சேலை

இலவச சேலை

சமூக வலைத் தளத்தில் சகுந்தலா தேவி மத்திய இணை அமைச்சருக்கு நாளைக்கு பொறந்த நாள். சோ, அவங்களோட டுவிட்டர், முகநூல், இன்ஸ்டா கிராம் என அனைத்திலும், சகுந்தலா தேவி தனது பிறந்த நாளை முன்னிட்டு, 10 ஆயிரம் ஜோடிகளுக்கு இலவச பட்டுப்புடவை, வேட்டி இலவசமாக கொடுப்பதா அவங்களே பதிவிட்ட மாதிரி செய்தி வந்திருக்கு.

வாழ்த்து

வாழ்த்து

காலையில் வாழ்த்து பெற்ற பின்னர், பரபரப்பாக இருந்த லட்சுமி ஸ்டோர்ஸுக்கு போலாமா வாங்கன்னு உதவி ஆள் கூப்பிட, லட்சுமி ஸ்டோர்ஸுக்கு போக இன்னும் நேரமிருக்குன்னு சொல்றாங்க சகுந்தலா தேவி. அவங்க போட்ட கணக்கு, லட்சுமி ஸ்டோர்ஸை எழுதி வாங்குவது. ஆனா, உதவி ஆள் சொல்றான், இல்லைம்மா.. லட்சுமி ஸ்டோர்ஸ்ல 10 ஆயிரம் சேலைகள், வேட்டிகள் வாங்கி மக்களுக்கு உங்க பொறந்த நாளுக்கு இலவசமா தரேன்னு அறிவிச்சு இருக்கீங்க.. கூட்டம் அலை மோதுதும்மா..வாங்க போலாம்னு சொல்றார்.

சகுந்தலா அதிர்ச்சி

சகுந்தலா அதிர்ச்சி

அம்மா, உங்க டுவிட்டர், முகநூல் எல்லாத்துலயும் உங்க கையால பதிவிட்டு இருக்காங்கம்மா... எப்படி குடுக்காம இருப்பீங்கன்னு பொண்ணுகேட்கறா. நான் பதிவு போடலமா.. என் அக்கவுண்ட்டை யாரோ ஹேக் பண்ணி இருக்காங்கன்னு சகுந்தலா தேவி சொல்றாங்க..

உடலில் பெயரை பச்சை குத்தினாலே ...அதை மறைச்சு வேற பச்சை குத்தற காலம் இது...புடவையில் முடியாதா என்ன... நல்லா யோசிச்சு இருக்காங்க..சபாஷ்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+