Lakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸில் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் இரவு ஒன்பதரை மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் லட்சுமி ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத, சம்பந்தம் இல்லாத சில காட்சிகள் அவ்வப்போது ஒளிபரப்பாகும்.

இதை கண்டு கொள்ளாமல் பார்ப்பவர்களுக்கு, சீரியல் ஆர்வலர்களுக்கு இதில் எந்த குறையும் தெரியாது. சீரியலும் ஓகேவாகவோ,அல்லது ரொம்பவும் பிடித்தோ இருக்கலாம். பல தரப்பட்ட மக்கள் எல்லாருக்கும் ஒரே ரசனை இருக்கும் என்று சொல்லிவிட முடியுமா?

என்ன இருந்தாலும் மத்திய இணை அமைச்சரை இவ்வளவு கேவலமாக காமிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது. எடுத்த உடனே வீட்டுக்குள் போயி ஒரு மினிஸ்டரை பார்ப்பது என்பதே அபூர்வம்.இங்கு மகாலட்சுமி ரொம்ப சுலபமா அவங்களை பொளேர் பொளேர்னு அடிக்கறாங்க.

பதிவுத் திருமணம்

பதிவுத் திருமணம்

ரவியும் பாக்கிய லட்சுமியும் ரிஜிஸ்டர் ஆஃபீசில் பதிவுத் திருமணம் செய்துக்க, பாக்கிய லட்சுமி தாத்தா,தங்கை இவர்களுடன் போறாங்க.அங்கே ரவியின் நண்பர்கள் வந்து இருக்காங்க. தாத்தாவுக்கு பீச்சில் ரவுடிகளால் கல்யாணம் நடந்துருது. ஆனா, யாருக்கும் தெரியாத திருட்டு கல்யாணம். பாக்கியலட்சுமி தாத்தாவிடம் மட்டும் சொல்றா. தாத்தா மகாலட்சுமி அம்மாவிடம் நடந்ததை ரவி மாப்பிள்ளைக்கிட்ட சொல்ல சொல்லிடுமான்னு சொல்ல, சொல்லிடறேன் தாத்தான்னு சொன்ன அவள் கடைசி வரை சொல்லலை.

அங்கே என்ன?

அங்கே என்ன?

ரிஜிஸ்டர் ஆஃபீசில் கல்யாணம் நடப்பது தெரிஞ்சு உமா,தேவராஜ் மாமாவை அழைச்சுட்டு வர, அங்கு வந்த அவர் ஆத்திரத்ல் ஏதோ பேசி, பாக்கிய லட்சுமியைத் தள்ளிவிட இதைப் பார்த்த பாக்கிய லட்சுமியின் தங்கை தேவராஜை எதிர்த்து பேச, தேவராஜ் பாக்யலட்சுமியின் தங்கையை அடிக்கப் போக, அவள் தள்ளிக்கொள்ள, அந்த அடி தாத்தாவின் மீது .விழா, உடனே பாய்ந்து போன பாக்கியலட்சுமி, தேவராஜின் சட்டையைப் பிடித்து உலுக்கி கன்னத்தில் அடித்தும் விடுகிறாள்.

பக்கம் காணாமல்

பக்கம் காணாமல்

தம்பி மனைவி உமாவிடம் தேவராஜ், இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லாதேன்னு அதாவது தான் அடி வாங்கியதை யாரிடமும் சொல்லாதே என்று எச்சரிக்கிறார். ஆனால், இதை மகாலட்சுமி அக்காவிடம் சொல்லியே ஆக வேண்டும் என்று கடைக்கு போகிறாள் உமா.அங்கு பாக்கியலட்சுமி அருகில் போயி, அங்கே தேவராஜ் மாமாவை நீ அடிச்சியே..அதை மகாக்காகிட்ட சொல்லாம விடமாட்டேன்னு சொல்லிட்டு மகாலட்சுமிகிட்ட போறா. அங்கே சொல்லலாம்னு போனா, நேசமணி தலையில சுத்தி விழுந்த மாதிரி உமா தலையில் நங்கென்று விழுந்து, நடுவுல கொஞ்சம் பக்கம் காணாமல் போயிருந்து.

நேசமணி சுத்தியல்

நேசமணி சுத்தியல்

கமலாவுக்கு நிச்சயதார்த்த பட்டுப் புடவை எடுக்க கிளம்பும் போது, மறுபடியும் அக்கா உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்னு ஆரம்பிக்க, பொன்னம்மா உடனடியாக மேலே ஓடிப்போய் சுத்தியலை உமா தலையில் நங்கென்று போட..மறுபடியும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் காட்சிதான்.

ஏம்ப்பா உதவி இயக்குநர்களே... ஃபிரஷா யோசிங்கப்பா!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+