நேற்று கூட நான் அவ்வளவு அழுதேன்.. இப்படி எல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்கல! லட்சுமி ராமகிருஷ்ணன் வருத்தம்
சென்னை: பல திறமைகளை கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அதேபோல அவர் சில வருடங்களுக்கு முன்பு பத்து வருடங்களாக சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். இப்போது அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கலைஞர் டிவியிலும் புது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத பல சம்பவங்கள் குறித்து பேசி இருந்தார்.
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அறிமுகமே தேவையில்லை. நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல திறமைகளை கொண்டுள்ள இவர் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பெயர் வாங்கி இருந்தார். சின்னத்திரையில் இந்த நிகழ்ச்சிக்கு அதிகமானோர் ரசிகர்களாக இருந்தனர். சிலர் தங்களுடைய குடும்ப பிரச்சனைகளை இந்த நிகழ்ச்சியில் வந்து சொல்லி இருந்தனர்.

ட்ரோல் நிகழ்ச்சி
ஆனால் அடுத்தவர்களின் குடும்ப கஷ்டத்தை வைத்து இவர்கள் டிஆர்பிக்காக பல பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சில வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு பிறகு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டார். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இப்போது தன்னுடைய வழக்கமான பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி
விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நீங்கள் இதற்கு முன்பு தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் மறக்க முடியாத சம்பவங்கள் இருக்கிறதா? அந்த நிகழ்ச்சியின் தாக்கம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு நான் நேற்று கூட இதே போல ஒரு சம்பவத்தையே கேள்விப்பட்டு அழுது கொண்டே இருந்தேன். என்னால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விகள்தான் இருந்தது.
குடும்ப பிரச்சனை
நான் இதற்கு முன்பு தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று தான் நினைத்தேன். அந்த நிகழ்ச்சியில் எங்களிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு இப்ப வரைக்கும் நாங்கள் தொடர்ந்து உதவி செய்து கொண்டு இருக்கிறோம். அதேபோல இப்போது நான் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன். அந்த நிகழ்ச்சிக்கு ஒரு குடும்பத்தினர் வந்திருந்தனர். அந்த குடும்பத்தில் இருக்கும் ஆணின் தலை பெரியதாக இருந்தது.
வருத்தமடைய வைத்த காட்சி
அந்த ஆணின் கண்கள், கையெல்லாம் ஒட்டி போய் இருந்தது. ஆனால் அவர் கஷ்டப்பட்டு இப்போதும் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து தன்னுடைய குழந்தைகளை கவனித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறது மூன்று குழந்தைகளும் அப்பாவை போலவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும்போது எனக்கு அவ்வளவு வருத்தமாக இருந்தது. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கணும் என்று நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்.

பெண்ணுக்கு நடந்த பிரச்சனை
அதுபோல இன்னொரு குடும்பத்திலிருந்து வந்து இருந்தனர். அதில் ஒரு பெண் தன்னுடைய மகளை ரொம்பவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்திருந்தார். ஆனால் அவருக்கு இப்போது கல்யாணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கிறது. அம்மாவும் குழந்தைகளும் ரயில் முன்பு விழுந்துட்டாங்க. இதை பார்த்த அந்த பெண்ணின் அம்மாவுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? அவங்க கதையை சொல்லும்போது என்னால் தாங்கிக்கவே முடியல. அதைக் கேட்டு நான் நேற்று கூட ரொம்ப அழுதுட்டே இருந்தேன். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு அந்த பெண்ணை தள்ளியது யார்? அந்த பெண் இவ்வளவு மோசமாக முடிவெடுப்பதற்கு எவ்வளவு கஷ்டங்களை அனுபவிப்பார்? போன்ற சம்பவங்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம் என்று அந்த பேட்டியில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசி இருக்கிறார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications