அழகில் போட்டிபோடும் அம்மா, மகள்...போட்டோவை வைரலாக்கும் ரசிகர்கள்
சென்னை: தொகுப்பாளர் அர்ச்சனா தன்னுடைய மகளுடன் எடுத்த போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அழகில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரல்ல என்று அர்ச்சனாவும் அவருடைய மகளும் போட்டி போட்டு வருகிறார்கள்.
இவர்களுடைய க்யூட்டான போட்டோவிருக்கு ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

க்யூட்டான அம்மா, மகள்
வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தொகுப்பாளராக கலக்கிக் கொண்டிருக்கும் அர்ச்சனா தற்போது தன்னுடைய மகளோடு சேர்ந்து கியூட்டான போட்டோவை வெளியிட்டிருக்கிறார். பாவாடை தாவணியில் இருக்கும் அவருடைய மகள் சாரா அழகா??அல்லது புடவையில் இருக்கும் அர்ச்சனா அழகா?? என்று ரசிகர்கள் பட்டிமன்றத்தை தொடங்கி விட்டார்கள். என்ன தான் இவர்கள் இருவரும் சினிமா துறையில் ஜொலித்துக் கொண்டிருந்தாலும் நிஜவாழ்க்கையில் பாசம் மாறாத அம்மா, மகளை பார்த்து பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அம்மாவுக்கு சளைத்தவரல்ல மகள்
அம்மா எட்டு அடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என்று சொல்வது போல அர்ச்சனாவிற்கு சளைத்தவரல்ல என்று அவருடைய மகளும் திறமையால் அசத்திக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் ஜீ தமிழில் சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தனர். தற்போது திரைப்படங்களிலும் இருவரும் ஒன்றாக காலடி எடுத்து வைத்து இருக்கின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளத்திலும் இவர்கள் இருவருக்கும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

மீண்டும் பிஸியான அர்ச்சனா
அர்ச்சனாவின் ரசிகர்கள் பலர் இவர்களுடைய குடும்ப படங்களை பகிர்ந்து அதிகமாக லைக்குகளை கொடுத்துக் கொண்டிருக்கும் போது, ஒரு சில கலாய்த்துக் கொண்டு வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் பற்றி கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத அர்ச்சனா தன்னுடைய ரசிகர்கள் சப்போர்ட் எனக்கு இருக்கும் வரைக்கும் எப்போதும் கவலை இல்லை என்று ஒவ்வொரு முறையிலும் இவர் நிரூபித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் உடல்நிலையில் சிறிது பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்துகொண்டு தற்போது மீண்டும் தனது வேலையை தொடங்கி இருக்கிறார்.

ரசிகர்களுக்கு கூறிய பொன்மொழி
சாராவின் பாத்ரூம் யூடியூப் வீடியோவிற்க்காக பல நெகட்டிவ் கமெண்டுகளை சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், அதையெல்லாம் சிறிது கூட கேர் பண்ணாத இவர்கள் தங்களுடைய வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் நபர்களை மட்டும்தான் ஏற்றுக் கொள்கிறார்களாம். அதைத்தான் தங்களுடைய ரசிகர்களுக்கும் கூறுகிறார்கள். தங்களைப் பற்றி கருத்துக்களை கூறும் நபர்களுக்கு விளக்கங்களை கொடுத்துக்கொண்டு இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது இருக்காது. அதனால் அந்த மாதிரி முயற்சிகள் எடுக்காமல் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை எடுத்தால் போதும் என்று பொன்மொழிகளை அவ்வப்போது கூறி வருகிறார்.
-
சரிகமபா திவினேஷுக்கு நெப்போலியன் கொடுத்த சர்ப்ரைஸ்.. அமெரிக்காவில் நெகிழ்ந்த குடும்பம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications