நீங்க நினைக்கிற மாதிரி கமல்ஹாசன் கிடையாது.. நான் தப்பு பண்ணிட்டேன்.. நடிகர் லிவிங்ஸ்டன் எமோஷனல்
சென்னை: நடிகர் லிவிங்ஸ்டன் இப்போது அதிகமான திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும், சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் குறித்து உருக்கமாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனின் கேரக்டர் குறித்து அவர் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்தும் லிவிங்ஸ்டன் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அத்தோடு லிவிங்ஸ்டன் முதல் முறையாக கமல்ஹாசனிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். அப்படி என்னதான் நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் நடிகர் லிவிங்ஸ்டன் ஆரம்பத்தில் தான் ஒரு இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு இயக்குனர் பாக்யராஜிடம் பல போராட்டங்களுக்குப் பிறகு உதவி இயக்குனராக சேர்ந்து ஒரு சில திரைப்படங்களில் அவரோடு வேலை செய்து இருக்கிறார். அதற்குப் பிறகு இயக்குனராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நடிகர் விஜயகாந்திடம் கதை சொல்ல போய் அவர் நடித்த பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலமாக லிவிங்ஸ்டன் ஒரு நடிகராக மாற்றி இருந்தார்.
ஆரம்பத்தில் நடிகராக விருப்பமே இல்லாமல் இருந்த லிவிங்ஸ்டன் வேறு வழியில்லாமல் பண பிரச்சனையாலும், அதோடு நடிகர் விஜயகாந்த் சொன்ன வார்த்தைக்காக திரைப்படத்தில் நடிகராக அறிமுகம் ஆகி அதற்குப் பிறகு அந்த திரைப்படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அடுத்தடுத்து வந்த திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தாராம்.
அந்த நேரத்தில் தான் அவருக்கு விஜயகாந்த் மூலமாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்து அந்த திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து சுந்தர புருஷன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான லிவிங்ஸ்டன் அதற்குப் பிறகு சொல்லாமலே என்று அடுத்தடுத்த ஒரு சில வெற்றி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
ஹீரோவாக இருந்தாலும் இவர் காமெடி நடிகர் போன்று இவருடைய நடிப்பு பலரையும் கவர்ந்திருந்தது. அதைத்தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களிலும், குணச்சித்திர கேரக்டரிலும் நடித்திருந்தார். வானத்தைப்போல திரைப்படத்தில் மீண்டும் நடிகர் விஜயகாந்தோடு இவர் நடித்திருந்தது பலராலும் பாராட்டப்பட்டது.
இப்படி சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது இவர் சமீப காலமாக எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருக்கிறார். அது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் என்னை இப்போது யாரும் நடிக்க கூப்பிடவில்லை. ஒரு சில சீரியல்களில் மட்டும் தான் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் கூட ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலிலும் நடித்திருந்தேன். பெரியதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன். அது விரைவில் வெளியாகும் என்று கூறியிருந்தார். அதோடு அந்த பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் குறித்தும் பேசி இருந்தார்.
அதில் நடிகர் கமல் தன்னோடு நட்பாக பழகினார். ஆனால் அதை நான் என்னுடைய நடவடிக்கையால் கெடுத்துக் கொண்டேன் என்று கூறி இருக்கிறார். நான் சினிமாவில் நண்பர்களை அடிக்கடி சந்திப்பது கிடையாது. பார்க்கும்போது பேசுவதோடு சரி. இப்படி நான் ஒதுங்கி இருந்ததாலேயே நான் வாய்ப்பை இழந்து விட்டேன்.

குறிப்பாக கமல் சாரின் நட்பு எனக்கு கிடைத்தது, ஆனால் நான் அவரோடு நடிக்கவில்லை என்றாலும் எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவருக்கும் என்னை பிடிக்கும். அவர் வீட்டில் எந்த விழா என்றாலும் என்னை அழைப்பார். தொலைபேசியில் அடிக்கடி என்னிடம் பேசி நலம் விசாரித்து இருக்கிறார்.
ஆனால் நான் என்னுடைய பொறுப்பற்ற தனத்தால் அவருடைய நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் கமல்ஹாசன் எப்போதுமே நட்புக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கும் நபர். அது மட்டுமல்லாமல் அவர் ஏதாவது காரியமாக வேண்டும் என்று அடுத்தவர்களோடு பழகுற ஆட்கள் கிடையாது.
சில நாட்கள் பழகுனாலும் உண்மையாக பழகுறவர். ஆனால் நான் என்னுடைய முட்டாள்தனத்தால் கமல் சாரின் நட்பை தவற விட்டு விட்டேன். அதனால் இப்போது நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த வீடியோவில் லிவிங்ஸ்டன் பேசியிருக்கிறார். தற்போது அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications