லொள்ளு சபா ஆண்டனி காலமானார்.. அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ஆண்டனி இன்று (ஏப்ரல் 9, 2025) அதிகாலை காலமாகி இருக்கிறார். இந்த தகவலை அவருடன் லொள்ளுசபா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறக்கடிக்க ஆசை சீரியல் நடிகர் பழனியப்பன் சமூக வலைத்தளம் மூலமாக ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

விஜய் டிவியில் பிரபலமான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடிகர் சந்தானத்துடன் பல எபிசோடில் கலந்து கொண்ட நடிகர் ஆண்டனி சில வருடங்களாகவே உடல்நிலை குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலை காலமானார். இது பற்றி நடிகரும் லொள்ளு சபா பிரபலமுமான பழனியப்பன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் "லொள்ளு சபா ஆண்டனி இன்று அதிகாலை கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்ற வருத்தமான தகவலை அனைவருடமும் பகிர்ந்து கொள்கிறேன்.. சென்று வா நண்பா" என்று போஸ்ட் போட்டு இருக்கிறார்.
லொள்ளு சபா பிரபலங்கள்
விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சி 2003 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியில் திரைப்படங்கள் பலவற்றை ட்ரோல் செய்து நடித்துக் கொண்டிருந்தனர். இதில் நடிகர் சந்தானம், ஜீவா, லொள்ளு சபா மனோகர், பாலாஜி, சுவாமிநாதன், ஜாங்கிரி மதுமிதா, மனோகர், பழனியப்பன், சேசு உட்பட பல முன்னணி நடிகர்கள் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
காணாமல் போன பிரபலம்
இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தால் தற்போது பலர் முன்னணி நடிகர்களாக மாறி இருக்கிறார்கள். இப்போது கூட லொள்ளு சபா வீடியோக்கள் இணையத்தில் ட்ரண்ட் ஆகி கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு லொள்ளு சபா நிகழ்ச்சியின் ரீ யூனியன் நடந்தது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அப்போது ஆண்டனி அதில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பி ஆண்டனி பற்றி தேட தொடங்கி இருந்தனர்.
தவறான நட்பு
அந்த நேரத்தில் தான் அவர் பிரபல youtube சேனல் மூலமாக பேட்டி கொடுத்திருந்தார். அவரின் பரிதாப நிலையை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எப்படி இருந்த ஆண்டனி இப்படி மாறிவிட்டாரே என்று கருத்து தெரிவித்து வந்தனர். அது குறித்து ஆண்டனி விளக்கம் கொடுக்கும்போது எனக்கு லொள்ளுசபா நிகழ்ச்சி பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது.
ஆஸ்துமா பிரச்சனை
அந்த நிகழ்ச்சி மூலமாக சினிமாவில் பிரபலமாகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் அந்த நேரத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. முதலில் நெஞ்சு சளி ஏற்பட்டு ஆஸ்துமா பிரச்சனை வந்தது. பிறகு இடுப்புக்கு கீழ் முழுவதும் நீர் கோர்த்து நடக்க முடியாமல் போய்விட்டது. சாதாரண மனிதர்கள் போல என்னால் இப்போது படுத்து தூங்க முடியாது.
தூங்க கூட முடியல
படுத்தால் மூச்சு திணறல் ஏற்படும். அதனால் சிறிது நேரம் உட்கார்ந்து கொண்டும் சிறிது நேரம் நின்று கொண்டும் தான் நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு முன்பே என்னுடைய மனைவி குழந்தைகள் என்னை விட்டு பிரிந்து போய்விட்டார்கள். இதனால் என்னை பார்த்துக் கொள்வதற்கு யாரும் கிடையாது.
சந்தானம் செய்த உதவி
சந்தானம் என்னிடம் அப்போதே சொன்னார் ஆனால் அவர் பேச்சை நான் கேட்கவில்லை. தீய நண்பர்களால் என்னுடைய வாழ்க்கையே மாறிவிட்டது என்று நான் சம்பாதித்த பணம் வீடு எல்லாம் போய்விட்டது. கஷ்டப்படும் நேரத்தில் யாரும் எனக்கு உதவவில்லை. சந்தானம் தான் உதவுகிறார் என்று அந்த பேட்டியில் பேசியிருந்தார்.

உதவி செய்த நடிகர்
அதுபோல லொள்ளுசபா ஆண்டனிக்காக நடிகர் பழனியப்பன் பலரிடம் உதவி வாங்கியும் தன்னுடைய சொந்த பணத்திலும் அவ்வப்போது உதவிகள் செய்து வந்தார். வாழ்க்கையில் பல கஷ்டங்களை தினம் தினம் பட்டு அவதிப்பட்டு கொண்டிருந்த ஆண்டனியின் உயிர் இன்று இந்த உலகத்தை விட்டு பிரிந்து இருக்கிறது. லொள்ளு சபா நிகழ்ச்சியில் ஆண்டனியின் நடிப்பு உங்களுக்கு பிடிக்குமா? அவருடைய இந்த பரிதாப நிலைக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் நண்பர்களே.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications