சாகுற வயசா? சூர்யா படத்துல அந்த கேரக்டர்.. தோளில் சாய்ஞ்சிட்டு! லொள்ளு சபா ஷோபனா பற்றி ஸ்ரீமதி ஓப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமாக பலர் தங்களுடைய காமெடி திறமையை காட்டி வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களாக மாறி இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் சந்தானம். அந்த வரிசையில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் பிரபலமான நடிகை ஷோபனா. சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷோபனா கடந்த 2011ம் ஆண்டு தற்கொலை செய்து இருந்த நிலையில் அவரோடு லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த நடிகை ஸ்ரீமதி பேட்டி ஒன்றில் ஷோபனா குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அந்த வகையில் ஷோபனா இறப்பதற்கு முன்பு தன்னோடு நிகழ்ச்சியில் ஒன்றாக நடித்துக் கொண்டிருக்கும் போது கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார். இரவு நேரத்தில் கூட எனக்கு போன் பண்ணி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் என்று ஸ்ரீமதி கூறியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Lollu Sabha actress Shrimathi about Shobana good character

அந்த வகையில் விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சி ஐந்து வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் இப்போது வெள்ளி திரையிலும் சின்னத்திரையிலும் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். லொள்ளு சபா நிகழ்ச்சியில் பல வெற்றி பெற்ற திரைப்படங்களை ரீகிரியேட் செய்து ரசிகர்களின் மனதை கவரும் வகையில் காமெடியாக கொண்டு போய் இருப்பார்கள்.

அதிலும் திரைப்படங்களின் கிளைமாக்ஸ் காட்சிகளை அப்படியே வைக்காமல் புதியதாக மாற்றி வைத்திருப்பார்கள். அதை பார்த்த ரசிகர்கள் இந்த கிளைமேக்ஸ் கூட நன்றாக இருக்கிறதே என்று சொல்லி சர்ச்சை கிளம்பிய செய்திகளும் கூட நடந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் வெற்றியை தொடர்ந்து தான் கொரோனா காலகட்டத்தில் கூட புதியதாக எந்த நிகழ்ச்சிகளையும் சூட்டிங் எடுக்க முடியாமல் இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதுவும் ரசிகர்களின் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்று இருந்தது. இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகை ஸ்ரீமதி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் லொள்ளு சபா நிகழ்ச்சியை எங்களால் மறக்கவே முடியாது. இந்த நிகழ்ச்சியில் நாங்கள் ஒவ்வொரு திரைப்படத்தையும் ரீகிரியேட் செய்து நடித்துக் கொண்டிருப்போம்.

அதனால் சில பிரச்சனைகள் வரத்தான் செய்தது. ஆனாலும் மக்கள் நாங்கள் நடிப்பதை பார்த்து சந்தோஷப்பட்டதை பார்க்கும்போது எங்களுக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் தான் ஏற்பட்டது. எப்போதும் என்னோடு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரோடு நான் பேசிக் கொண்டிருக்கிறேன். நடிகர் சந்தானம் எனக்கு போன் பண்ணி அடிக்கடி பேசுவார் என்னுடைய உடல் நலத்தை பற்றி கேட்பார்.

மீண்டும் நீங்க லொள்ளு சபாவில் பிஸியாக இருந்தது போல இப்போதும் இருக்க வேண்டாம் என்றும் கூட எனக்கு என்னோடு அந்த நிகழ்ச்சியில் நடித்த நண்பர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியில் எங்களோடு இருந்த ஷோபனாவை தான் நாங்கள் ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம். ஷோபனா லொள்ளு சபா நிகழ்ச்சியில் இருக்கும்போது ரொம்பவும் கலகலப்பான பொண்ணு. ஏற்கனவே எனக்கு அவருடைய அம்மாவை தெரியும். ஆனால் அவருடைய பொண்ணு தான் ஷோபா என்பது எனக்கு தெரியாது.

ஒருமுறை அவருடைய அம்மா சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த பிறகு தான் எனக்கு ஷோபா என்னுடைய பிரண்டோட பொண்ணுங்கறது எனக்கு தெரிஞ்சது. அதற்கு பிறகு மேலும் எங்களுக்குள் நெருக்கம் வந்துவிட்டது ஷோபனா இரவு நேரத்தில் நேரம் போகவில்லை என்றால் எனக்கு ஃபோன் பண்ணி மணிக்கணக்கா பேசிக்கிட்டு இருப்பா. ஆனா அவளுடைய இறப்பு எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியல. சூட்டிங் ஸ்பாட்டில் கூட ரொம்ப டயர்டா இருக்கும்போது என்னுடைய முதுகில் தலை சாய்த்து படுத்துக்கொள்வாள்.

Lollu Sabha actress Shrimathi about Shobana good character

எப்போதும் படபடவென பேசிக் கொண்டே இருக்கும் பெண் என்று ஷோபனாவை குறித்து ஸ்ரீமதி கண்கலங்கி பேசியிருக்கிறார். அதோடு ஷோபனா லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பலருடைய மனதை கவர்ந்திருந்தார். அதிலும் வெண்ணிறாடை மூர்த்திக்கு ஜோடியாக அவர் செய்த அட்ராசிட்டி வேற லெவலில் இருந்தது. அதை தொடர்ந்து தான் அவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த நேரத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதிலும் அந்தப் படத்தில் ஷோபனாவின் அப்பா, என்னமா அங்க சத்தம் என்று கேட்கும் போது இல்லப்பா பேசிகிட்டு இருக்கோம் என்று இவர் பேசும் டயலாக் வேற லெவலில் வைரல் ஆனது. அதிலும் வடிவேலுவிடம் நீ என் பிள்ளைகளுக்கு அப்பன் எனக்கு புருஷன் என்று இவர் பேசும் டயலாக்கும் அதிகமாக பிரபலம் அடைந்திருந்தது.

அதை தொடர்ந்து சிறுத்தை திரைப்படத்திலும் ஷோபனாவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. அதிலும் நடிகர் கார்த்தியும் சோபனாவும் சண்டை போடும் காட்சிகள் அந்த திரைப்படத்தில் காமெடியாக இடம் பெற்று பிடித்திருக்கும். ஆனால் ஷோபனா யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று தற்கொலை செய்திருந்தார்.

அந்த நேரத்தில் ஷோபனாவுக்கு 32 வயதாகி இருந்தது. ஆனால் அவருக்கு திருமணம் முடியவில்லை. அதே நேரத்தில் தன்னுடைய அம்மாவோடு வாழ்ந்து வந்த ஷோபனாவிற்கு உடல்நிலை பிரச்சனை இருந்து வந்ததாகவும் அதனால் விரக்தியில் ஷோபனா தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த நேரத்தில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ஷோபனா குறித்து ஸ்ரீமதி கண்கலஙக பேசியிருக்கும் நிலையில் இந்த வீடியோவிற்கு பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+