சந்தானம் நன்றி மறக்காதவர்.. எவ்வளவு உதவி செஞ்சிருக்காரு தெரியுமா? ரகசியங்களை உடைத்த சுவாமிநாதன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் நடிகர் சந்தானம், சுவாமிநாதன், யோகி பாபு போன்ற பலர் பிரபலமாகி இப்போது வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சந்தானம் பற்றி நடிகர் சுவாமிநாதன் பல விஷயங்களை பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதில் சந்தானம் வெளியே தெரிகிற மாதிரி ஜாலியான ஆளு கிடையாது, அவருடைய உண்மையான முகமே வேறு என்று சுவாமிநாதன் கூறி இருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.
90ஸ் கிட்ஸ்கள் பல விஷயங்களை இப்போது மறக்க முடியாது என்று புலம்பிக் கொண்டிருப்பதை கேட்டு இருப்போம். அதில் லொள்ளு சபா நிகழ்ச்சியும் ஒன்று. அந்த காலகட்டத்தில் பலருடைய வீட்டில் டிவிகள் இல்லை என்றாலும் பக்கத்து வீட்டில் எட்டி எட்டிப் பார்த்த நிகழ்ச்சிகளில் லொள்ளு சபா நிகழ்ச்சியும் இருக்கும். இப்போது எல்லா வீட்டிலும் டிவி இருக்கிறது. அதோடு கையில் மொபைல் போன் மூலமாக எல்லா சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் இருந்த இடத்தில் இருந்து பார்க்க முடிகிறது.

ஆனால் அந்த காலகட்டத்தில் அப்படி கிடையாது. ஆனாலும் லொள்ளு சபா நிகழ்ச்சி பலருடைய ஃபேவரைட் ஆக இருக்கும். டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் நேரத்தில் மட்டும்தான் அதைப் பார்க்க முடியும். அதற்காகவே அந்த நிகழ்ச்சிக்காக பலர் டிவி முன்பு காத்திருப்பார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் இப்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாக மாறி இருக்கிறார்கள். அதில் முக்கியமாக யோகி பாபு, சந்தானம் போன்றோரை சொல்லலாம்.
இவர்களோடு நடித்த பலரும் இப்போது திரைப்படங்கள் சினிமா சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் சுவாமிநாதன், சந்தானம் பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் சுவாமிநாதன் பேசுகையில், நானும் சந்தானமும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறோம்.
நாங்கள் எதார்த்தமாக பேசும் விஷயங்கள் கூட பலரும் ஆஹா ஓஹோ என்று பாராட்டுவார்கள். நாங்கள் திரைப்படங்களில் சில இடங்களில் பேசியது எல்லாம் எங்களுடைய சூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் பேசிய விஷயமாக கூட இருக்கும். அந்த அளவிற்கு எங்கள் இருவருக்கும் நல்ல காம்பினேஷன் உண்டு. லொள்ளு சபா நிகழ்ச்சியிலும் நாங்கள் இருவரும் சேர்ந்து பெர்பார்மன்ஸ் பண்ணி இருக்கிறோம். அது மக்களுக்கு பிடித்திருக்கிறது.
அதனால் இப்ப கூட என்னிடம் பார்க்கும் பலரும் நீங்கள் சந்தானத்தோடு நடித்த படங்கள் நன்றாக இருந்தது ஏன் அவரோடு தொடர்ந்து நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள். சந்தானம் பழசை மறக்காதவர் தான். ஆனால் அதற்காக நான் அவரிடம் சென்று வாய்ப்பு கேட்டால் அது சரியாக இருக்காது. அவர் இன்று இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்கிறார் என்றால் அது அவருடைய சொந்த உழைப்பில் அவர் மேலே வந்திருக்கிறார்.

அவருடைய திறமையால் அவர் வந்திருக்கும் இடத்தில் எனக்கும் அது போல வாய்ப்பு தாங்கள் என்று நான் போய் கேட்கக்கூடாது. அது நன்றாகவும் இருக்காது. ஒரு முறை நான் சந்தானம் நடித்த ஒரு படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் என்னுடைய கேரக்டர் சின்னதாக இருந்தது. அதனால் எனக்கு கேரவன் எல்லாம் கிடையாது. நான் சும்மா ஒரு இடத்தில் இருந்தபோது சந்தானத்தின் அசிஸ்டன்ட் வந்து என்னிடம் உங்களை சார் வந்து கேரவனில் பார்க்க சொன்னார் என்று சொல்ல, நானும் சரி என்று கேரவனுக்கு போனேன்.
ஆனால் சந்தானத்தோடு இருந்த அவர் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. யாராயிருந்தாலும் கீழே இறங்குங்க. சந்தானம் வெளியே வந்த பிறகு அவரை பார்த்தா போதும் யாரையும் உள்ளே விடமாட்டேன் என்று என்னை திட்டிட்டாரு. நானும் சரி என்று வந்து விட்டேன். பிறகு கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் சந்தானத்தின் அசிஸ்டன்ட் வந்து என்னிடம் நீங்க ஏன் பார்க்க வரல என்று கேட்டார். நான் வந்தேன் ஆனால் சந்தானத்தோடு இருந்தவர்தான் என்னை திட்டி அனுப்பிட்டாரு என்று சொன்னேன்.
அதற்குப் பிறகு அவர் வாங்க என்று என்னை கூட்டிக்கொண்டு உள்ளே போனார். பிறகு சந்தானம் என்னை திட்டிய நபரை பிடித்து திட்டிவிட்டார். எனக்கு வாழ்க்கை தந்ததே இவர்தான். இவரு எனக்கு லொள்ளு சபா நிகழ்ச்சியில் இல்லை என்றால் நான் இன்று இவ்வளவு பிரபலம் அடைந்திருப்பேனா? என்று அந்த நபரை திட்டினார். எனக்கு அப்போ வியப்பாக இருந்தது. அதுபோல சந்தானத்தின் உண்மை குணம் பலருக்கும் தெரிந்திருக்காது.
அவர் ஜாலியான ஆள் என்று நினைப்பார்கள். ஆனால் சந்தானம் சென்டிமென்ட்டானவர். யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அவர் அவங்களுக்கு ரொம்பவே உதவி பண்ணி இருக்கிறார்கள். அவரோடு இருந்த ஒருவருக்கு ஒரு வீடு கட்டி கொடுத்திருக்காரு. சேசு போன்ற பலருக்கு மருத்துவமனையில் இருக்கும்போது பல உதவிகள் செய்து இருக்காரு. அதுவும் லட்சக்கணக்கில் கூட செய்திருக்கிறார். அது வெளியே ரொம்ப தெரியாது என்று அந்த பேட்டியில் சுவாமிநாதன் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications