லப்பர் பந்து தந்த மாஸ் ஹிட்.. பொசுக்னு சைலண்ட்டாகி போன ஹீரோ அட்டகத்தி தினேஷ்.. உடைத்து சொன்ன பிரபலம்
சென்னை: லப்பர் பந்து படத்தின் வெற்றிக்கு பிறகு குழப்பம் வந்தது. எந்த படத்தில் நடிப்பது, எந்த மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிப்பது என்பதை பற்றித்தான் அதிகம் யோசித்தேன்... லப்பர் பந்து படத்திற்கு பிறகு 100 கதைகளை கேட்டிருக்கிறேன். எதுவும் சரியாக அமையவில்லை என்று நடிகர் தினேஷ் செய்தியாளர்களுக்கு தந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.. இந்நிலையில், இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருக்கிறார்.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியான படம் 'லப்பர் பந்து'. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடித்திருந்தனர்..

கெத்து தினேஷ்
சவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படம் தியேட்டரில் ஓடி ரூ.50 கோடி வசூலை குவித்தது.. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் என்பது ஹாட் ஸ்டார் நிறுவனம் வாங்கி, ஓடிடியிலும் சக்கை போடு போட்டது.. வெளிநாட்டில் வெளியிடுவதற்கான உரிமையை சிம்பிளி சவுத் என்ற ஓடிடி தளம் வாங்கி, அங்கேயும் ரசிகர்களின் ஆதரவை பெற்றது.
லப்பர் பந்து படத்தை பார்த்து ரசித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அந்த கதையை இந்தியில் ரீமேக் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளாராம்.. அவருக்கு ஜோடியாக லப்பர் பந்தில் நடித்த சுவாசிகா தான் நடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறாராம். அந்த தகவலை நடிகை சுவாசிகா பேட்டி ஒன்றில் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
லப்பர் பந்து பட ஹிட்
இந்த படத்தில் அட்டகத்தி தினேஷின் கேரக்டர் பலராலும் ஈர்க்கப்பட்டது.. கர்சீப்பை சுற்றிவிட்டு கிரிக்கெட்டில் அமர்க்களப்படுத்துவது, மனைவிக்கு அஞ்சி பம்முவது, ஈகோவால் கோபத்தின் எல்லைக்குச் செல்வது என நடிப்பில் மிளிர்ந்திருப்பதாக செய்தித்தாள்களில் விமர்சனங்களும் குவிந்திருந்தன. ஆனால், இந்த படத்துக்கு பிறகு தினேஷூக்கு வேறு எந்த படங்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில், King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், "கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் லப்பர் பந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று அட்டகாசமான வசூலை பெற்றது.. இந்த படத்தின் கதாநாயகன் அட்டகத்தி தினேஷ்.. அவர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..
அட்டகத்தி தினேஷ்
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், லப்பர் பந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது, நீங்கள் அதற்கு பிறகு 13 படங்களில் அட்வான்ஸ் வாங்கி, அதில் நான்கைந்து படங்களில் இந்நேரம் நடித்து முடித்திருக்க வேண்டுமே? ஏன் என்னாச்சு? என்று கேள்வி எழுப்பினார்கள்..
அதற்கு அட்டகத்தி தினேஷ், நான் கல்லூரியில் படிக்கும்போதே கூச்ச சுபாவம் உள்ளவன்.. யாரிடமும் சரியாக பேச மாட்டேன்.. கல்லூரி முடித்தபிறகும்கூட, எந்த வேலைக்கும் போனதில்லை.. ஆபீசுக்கு போய் வேலை செய்யும் அளவுக்கு, கூச்ச சுபாவத்திலிருந்து நான் இன்னும் மீளவில்லை..
அந்தநேரத்தில்தான் அட்டகத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.. அப்போதுகூட, அந்த இயக்குனரை நான் ரொம்ப சிரமப்படுத்திவிட்டேன்.. சிரின்னு சொல்வார், எனக்கு சிரிக்கவே தெரியாது.. அதிலும் கேமரா முன்னாடி சிரிக்கவே வராது.. அழுவதும் கஷ்டப்பட்டுதான் அழுவேன்..
தோதான வேடங்கள்
எனவே எனக்கு தோதான வேடங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது என்ற முடிவில் இருக்கிறேன்.. அட்டக்கத்தி பட வெற்றிக்குபிறகு, 100 இயக்குனர்கள் என்னிடம் வந்தார்கள்.. 100 கதைகளை சொன்னார்கள்.. 100 கதைகளுமே எனக்கு பிடிக்கவில்லை.. அதாவது அந்த பாத்திரங்களில் என்னால் நடிக்க முடியவில்லை.. அதனால், அப்படங்களை நான் மறுத்துவிட்டேன்..
எனக்கு தோதான வேடங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன்.. அதனால்தான், எனக்கேற்ற கதைக்காக காத்து கொண்டிருப்பதாக சொல்கிறார் அட்டகத்தி தினேஷ்" என்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications