அடேங்கப்பா! சினேகன் மனைவி கன்னிகா கம்பெனி ஹேர் ஆயில் விலை இவ்வளவா? அதற்கு காரணம் இதுதானாம்!
சென்னை: பாடல் ஆசிரியராக இருக்கும் சினேகனின் மனைவியான கன்னிகா "சினேகம் ஹர்பல்ஸ்" என்ற பெயரில் தலைமுடிக்கு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதில் 200 ml எண்ணெய் 999 விற்கப்பட்டு வருகிறது. இது விலை அதிகமாக இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதனால் தங்களின் எண்ணெய் விலை அதிகமாக இருக்கிறது என்று கன்னிகா முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் பல நடிகர் நடிகைகள் சைட் பிசினஸ் ஆக பல பிசினஸ் தொடங்கி கொண்டிருக்கின்றனர். நடிகை நயன்தாரா டாப் கதாநாயகியாக இருந்தாலும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் பிசினஸை தொடங்கியிருக்கிறார். நடிகை சினேகா புடவை கடை பிசினஸ் தொடங்கி இருக்கிறார். இப்படியாக பலர் பல பிசினஸ் தொடங்கி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடிகை கன்னிகா தன்னுடைய நீண்ட தலைமுடிக்கு காரணமான எண்ணெயை தன்னுடைய பிசினஸ் ஆக மாற்றி இருக்கிறார்.

இது குறித்து சில மாதங்களுக்கு முன்பே கன்னிகா அறிவித்து இருந்தார். இந்த நிலையில் இப்போது மே ஒன்றாம் தேதி முதல் சினேகம் ஹெர்பல்ஸ் சென்ற பெயரில் பிசினஸை தொடங்கி இருக்கிறார். இதுகுறித்து கன்னிகா பேசுகையில் நாங்க ஒரு வருடமாகவே ஹெர்பல் கேர் ஆயில் தயாரிக்கும் முயற்சியை தொடங்கி இருக்கிறோம். என்னுடைய சொந்த ஊர் அருப்புக்கோட்டை எங்க குடும்பமே பிசினஸ் குடும்பம் தான்.
சினிமாங்குறது நிலையான வருமானம் கிடையாதுங்கறது எல்லாருக்குமே தெரியும். மாற்று வழியா ஒரு பிசினஸ் தொடங்கலாம்னு யோசிச்சு தான் நான் ஹேர் ஆயில் பிசினஸ் தொடங்குற ஐடியா வந்துச்சு. என்னை பார்க்கிற எல்லாருமே என்னோட முடி இவ்வளவு நீளமா இருக்கேன்னு ஆச்சரியமா கேட்பாங்க. எங்க வீட்டில் எனக்கு மட்டுமல்ல என்னுடைய தங்கச்சி, அம்மா சித்தி எல்லாருக்குமே நீண்ட தலைமுடி தான்.
அதற்கு எங்க பாட்டி ஹேர் ஆயில் ரெடி பண்ணி எங்களுக்கு கொடுப்பாங்க. அதை தான் நாங்க பயன்படுத்துவோம். அதே நேரத்தில் மூலிகை ஹேர் ஆயிலால் மட்டும் முடி நிச்சயமா வளரும்னு சொல்ல முடியாது. ஆனா அந்த ஹேர் ஆயில் நம்முடைய உடம்பை குளிர்ச்சியாக்கி முடி வளர உதவி பண்ணும். அதனால்தான் நாங்க யூஸ் பண்ணுற ஹேர் ஆயிலையே தயாரிக்கலாம் என்று ஆரம்பிச்சோம்.

நாம மூலிகைகளை கலந்து தயாரிக்கும் போது கெமிக்கல் ரியாக்ஷன் ஏற்படும் அதனால் சித்த மருத்துவர் கிட்ட கன்சல் பண்ணினோம். பிறகு அரசுடைய லேபுக்கு எங்களுடைய ஆயில் மாதிரிகளை அனுப்பினோம். அங்கு முதல் டெஸ்டிலேயே இதை பயன்படுத்தலாம் என்று ரிசல்ட் வந்துடுச்சு. இது எங்களுக்கு சந்தோசம். என்னுடைய நீண்ட முடியை பார்த்து பல நிறுவனங்கள் அவர்களுடைய கம்பெனி விளம்பரத்திற்கு என்னை நடிக்க கூப்பிட்டு இருக்கிறார்கள்.
ஆனால் நான் உண்மை என்ன என்று தெரியாமல் அதில் நடிக்க கூடாது என்று எதிலுமே நடிக்கவில்லை. ஆனால் இப்போது எங்களுடைய கம்பெனிக்கு நான்தான் மாடல். அதுபோல இந்த எண்ணெய் நாங்கள் தயாரிக்க தொடங்கி சில மாதங்கள் ஆகிவிட்டாலும் அதை பலரிடம் டெஸ்ட் செய்து தான் இப்போது நாங்கள் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறோம்.
ஆனால் விற்பனைக்கு வந்தபோது எல்லோரும் இதற்கு விலை அதிகமாக இருக்கிறது நயன்தாரா கம்பெனி பொருட்களை விடவும் இங்கே விலை அதிகமாக இருக்கிறது என்று பலர் கமாண்ட் செய்கிறார்கள். அதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அதற்கு காரணம் நாங்கள் அதிகமான ஜிஎஸ்டி கட்ட வேண்டும். அதுபோல பிற நிறுவனங்களை காட்டிலும் நாங்கள் எல்லா பொருள்களையும் உலர வைக்காமல் பிரஷ் ஆகவே பயன்படுத்துகிறோம்.
அதனால் எண்ணெய் குறைவாக தான் கிடைக்கும். அது போல ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது. அதனால் தான் பொருள்களுக்கு விலை அதிகமாக இருக்கிறது. ஆனால் நாங்கள் ஆரம்பத்தில் இதைவிட அதிகமாக தான் விலையை பிக்ஸ் செய்தோம். ஆனால் அது மக்களுக்கு கட்டுப்படி ஆகாது என்று தான் குறைத்து இப்போது விலையை உறுதி செய்து இருக்கிறோம்.
அதையும் சிலர் அதிகம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல இந்த எண்ணையை தினமும் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. வாரத்தில் இரண்டு நாட்கள் தலையின் மயிர் கால்களில் மசாஜ் செய்வது போல் செய்து இரவு தடவி படுத்துவிட்டு காலை குளித்து விட்டால் போதும் முடி கொட்டுவது நின்றுவிடும் என்று தன்னுடைய ஹேர் ஆயிலுக்கு கன்னிகா விளக்கம் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications