நான் என்ன பாவம் செஞ்சேன்னு தெரியல.. ஏன் இப்படி பண்ணுறாங்க.. கவிஞர் சினேகன் எமோஷனல்
சென்னை: கவிஞர் சினேகன் 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருந்தாலும் தன்னுடைய பாடல்கள் மூலமாக பாடகர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் தேசிய விருது கிடைத்தாலும் தனக்கு மட்டும் அந்த விருது மறுக்கப்படுவது குறித்து எமோஷனலாக பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
பல ஹிட்டான பாடல்களை சினேகன் எழுதியிருந்தாலும் அவருடைய முகமும் பெயரும் சாதாரண மக்கள் மத்தியில் பரீட்சையமானது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகத்தான். இந்த நிகழ்ச்சியில் நூலிலையில் வெற்றி வாய்ப்பை இழந்த சினேகன் கவிஞர் மட்டுமல்ல பத்திரிக்கையாளர், நடிகர், அரசியல்வாதி என்று பல முகங்களை கொண்டவர்.

இப்போது சின்னத்திரையையும் விட்டு வைக்காமல் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். கலைஞர் டிவியில் விரைவில் பவித்ரா என்ற சீரியல் மூலமாக கதாநாயகனாக நடிக்கிறார். வைரமுத்துவின் பயிற்சி பட்டறையில் இருந்து வந்த சினேகன் கவிப்பேரரசு வைரமுத்து மட்டும் இன்றி, கவிஞர் வாலியின் தாக்கத்தையும் கலந்து பல பாடல்களை எழுதி இருக்கிறார்.
அவருடைய பாடல்களில் காதல், பாசம், நட்பு, துரோகம் என்று எந்த உணர்வாக இருந்தாலும் அதை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக எழுதி உள்ளார். அதிலும் சினேகன் எழுதிய பல பாடல்கள் தேசிய விருதுகள் பெற்றிருக்கிறது. இவரது பாடல்கள் தேசிய விருதுபெறும் அளவிற்கு தரமானதாக இருந்தாலும் அவருக்கு மட்டும் அது எட்டாத கனியாகவே இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற "பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை" என்ற பாடல் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் பலரும் முணுமுணுக்கும் பாடல்களில் ஒன்று.

அதுபோல பாண்டவர் பூமி படத்தில் அவர் எழுதிய "அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்", "தோழா தோழா" பாடல் தேசிய அளவில் கவனம் பெற்றது. அந்த வரிசையில் ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற "ஞாபகம் வருதே" பாடல்களையும் குறிப்பிடலாம். இந்த பாடலை கேட்பவர்களை தங்களுடைய கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும் பசுமையான நினைவுகள் பலரையும் வியக்க வைக்கும்.
அதுபோல சினேகனுக்கு செண்டிமெண்ட் மட்டுமல்ல காதல் பாடல்களும் கைதேர்ந்த கலை தான். ஆடுகளம் படத்தில் "வெள்ளாவி வைத்து தான் வெளுத்தாங்களா", சூரரைப் போற்று படத்தில் "காட்டுப் பயலே" போன்ற பாடல்கள் தேசிய விருது பெற்ற படங்களுக்கு இவர் எழுதி தந்த பாடல்கள் தான். அம்மா பாசம் எப்போதும் மாறாது அதில் சில பாடல்களைக் கேட்கும்போது நம்மை அறியாமல் கண்ணீர் சிந்த வைக்கும். அந்த வகையில் தான் ராம் படத்தில் இவர் எழுதி இருந்த "ஆராரிராரோ நான் இங்கு பாட" என்ற பாடல் இப்போதும் பெயர் சொல்லும்.
இத்தனை ஹிட்டான பாடல்களை எழுதி இருந்தாலும் சிலருடைய சூழ்ச்சியால் எனக்கு தேசிய விருது தடுக்கப்படுகிறது என்று பேட்டி ஒன்றில் கவிஞர் சினேகன் எமோஷனலாக பேசியிருக்கிறார். நான் எழுதிய பல பாடல்களை பாடிய பாடகர்களுக்கும் மியூசிக் டைரக்டர்களுக்கும் கூட தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது. ஆனால் எனக்கு அது கிடைக்கவில்லை. இது நான் பொறாமையில் சொல்லவில்லை. இதை வருத்தத்தில் தான் சொல்கிறேன்.
ஒரு பாடலுக்காக என்னுடைய பெயரும் நாமினேஷனில் இடம் பெற்று இருந்தது. ஆனால் கடைசியில் சிலருடைய சதியால் என்னுடைய பெயர் நீக்கப்பட்டு விட்டது. நான் என்ன பாவம் செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று அந்த பேட்டியில் சினேகன் எமோஷனலாக பேசியிருப்பது பாடல் ரசிகர்களையும் வருத்தம் அடைய வைத்திருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications