பரவி வரும் சர்ச்சைகளுக்கு மாதம் பட்டி ரங்கராஜ் கொடுத்த பதில்.. மனைவி போட்ட போஸ்ட்.. குவியும் கமெண்ட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகராகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி டிசைனர் ஒருவர் போட்ட போஸ்டால் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி பல்வேறு சர்ச்சைகள் பரவி வருகிறது. இதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் அவருடைய மனைவியான ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவு இணையத்தில் அதிக கமெண்ட்களை பெற்று வருகிறது.

சோஷியல் மீடியாவை பயன்படுத்தும் பலருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் பழக்கமானவர்தான். இவருடைய சமையல் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகிறது. வித்தியாசமாக சமையல் செய்யும் இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது. பாரம்பரிய சமையல் முதல் வெளிநாட்டு சமையல் வரை எளிமையாக youtube சேனலில் இவர் செய்து காட்டி இருக்கிறார். அதுபோல தமிழ் சினிமா நடிகர்கள், பிரபலங்கள் வீட்டில் மாதம்பட்டி ரங்கராஜின் சமையல்தான் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

Vijay TV Madhampatti Rangarajan

சமையல் கலைஞர்

தன்னுடைய அப்பாவை போல சமையலில் தனித்து நிற்க வேண்டும் என்று கடின உழைப்பை போட்ட மாதம்பட்டி ரங்கராஜ் ஆரம்பத்தில் சின்னதாக தொழில் தொடங்கியிருந்தாலும் இன்று பலருக்கும் பரீட்சயமான முகமாக மாறி இருக்கிறார். அதேபோல மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருந்தார். இவருக்கு முதல் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.

கோடி அருவி கொட்டுதே பாடல்

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தை விடவும் அந்த படத்தில் இடம் பெற்ற "கோடி அருவி கொட்டுதே" பாடல் தான் பிரபலமாகி இப்ப வரைக்கும் பலருடைய ரிங்டோனாக இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்திற்குப் பிறகு விஜய் டிவியில் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் நடுவராகவும் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளோடு இவரும் அட்ராசிட்டியில் ஈடுபட்டு இருப்பார்.

Vijay TV Madhampatti Rangarajan

குக் வித் கோமாளி நடுவர்

தன்னை கிண்டல் செய்தாலும் அவர்களைச் செல்லமாக கண்டிப்பது, பிறகு அவர்களை கிண்டல் செய்வது போன்று இவரும் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு போய்க் கொண்டிருந்தார். அதுபோல மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் சில வாரங்களாக மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி பல சர்ச்சையான கருத்துக்கள் பரவி வருகிறது.

மாதம்பட்டி ரங்கராஜ் பற்றிய வதந்தி

காஸ்ட்யூம் டிசைனராக இருக்கும் பெண் ஒருவர் மாதம்பட்டி ரங்கராஜை காதலிக்கிறாரா? என்று கேள்விகள் இணையத்தில் வலம் வருகிறது. அதற்கு வலுகொடுக்கும் வகையில் அந்தப் பெண் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுவும் காதலர் தினத்தில் அவர் தனக்கு கொடுத்த கிப்ட் என்று சில புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்.

Vijay TV Madhampatti Rangarajan

அதுபோல தன்னுடைய பெயருக்கு பின்னால் அந்தப் பெண் ரங்கராஜ் என்பதையும் சேர்த்து இருக்கிறார். அதோடு ரங்கராஜ் தான் தன்னுடைய உயிர் என்றும் சில போஸ்ட்களில் பகிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் தான் ரங்கராஜ் அவருடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா என்ற கேள்விகள் எழுந்து வந்தது.

ரங்கராஜின் மனைவி போஸ்ட்

இந்த நேரத்தில் ரங்கராஜின் மனைவி தன்னுடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து நான் தான் ரங்கராஜின் மனைவி என்று கமெண்ட் கொடுத்து இருக்கிறார். ரங்கராஜின் மனைவி பிரபல வழக்கறிஞராக இருக்கும் நிலையில் சோஷியல் மீடியாவில் வழக்கறிஞராக தான் செய்யும் செயல்கள் பலவற்றையும் பகிர்ந்து வருகிறார்.

ரங்கராஜின் விளக்கம்

இந்த நிலையில் இந்த வதந்தி குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல வார இதழில் பேசுகையில், "என்னுடைய குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. ரொம்ப பர்சனலான விஷயங்களை பற்றி இப்போ நான் எதுவும் பேச விரும்பவில்லை. அதே நேரம் பேசியே ஆகணும் என்கிற ஒரு காலகட்டம் வந்தால் அதை நானே டீடைலா பொதுவெளியில் சொல்லுவேன்" என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Vijay TV Madhampatti Rangarajan

தன்னம்பிக்கை போஸ்ட்

இந்த நிலையில் ரங்கராஜின் மனைவி ஸ்ருதி இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதற்கு "பொறுமை கண்ணியத்தை நிலை நிறுத்துகிறது" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதற்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஸ்ருதிக்கு கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+