ஜாய்க்கு 2024ல் தான் முதல் விவாகரத்து! 2023ல் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் கல்யாணம்? இது எப்படி? கோர்ட் கேள்வி
சென்னை: பிரபல சமையல் நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சுமத்திய திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் என்ற புகார் விவகாரம், நீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய திருப்பத்தை சந்தித்திருக்கிறது. ரங்கராஜ் தாக்கல் செய்த அவதூறு வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார், "முதல் விவாகரத்துக்கு முன்பாக நடந்த இரண்டாவது திருமணம் எப்படி சட்டப்படி செல்லும்?" என்று கேள்வி எழுப்பியது வழக்கில் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.

நீதிமன்றத்தை குழப்பிய திருமண தேதி
ஜாய் தன்னை பற்றி சோசியல் மீடியாவில் அவதூறு பரப்புவதை தடுக்கக் கோரி மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். தான் பெற்றெடுத்த ஆண் குழந்தைக்கு ரங்கராஜ் தான் அப்பா என்றும், அவர் முறைப்படித் தாலி கட்டிய கணவர் என்றும் ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
நீதிபதி கேள்வி
அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாய் கிறிஸில்டாவுக்கு 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி தான் விவாகரத்து கிடைத்திருக்கிறது. ஆனால், தனக்கும், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி, இந்து முறைப்படி திருவீதி அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது என்று ஜாய் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதைக் கேட்ட நீதிபதி என். செந்தில்குமார், முதல் விவாகரத்து கிடைப்பதற்கு முன்பாக நடந்த இந்தத் திருமணம் சட்டப்படி எப்படி செல்லும்? என்று ஜாய் தரப்பிற்குக் கேள்வி எழுப்பினார்.
ஜாய் குற்றச்சாட்டு
நீதிமன்றத்தில் ஜாய் கிரிஸில்டா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வாதங்களில், ரங்கராஜ் மீது பலக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஜாய் கிரிஸில்டாவுக்கு முதல் திருமணம் 2018ஆம் ஆண்டு நடந்தது. 2020ஆம் ஆண்டில் இருந்தே அவர் முதல் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாதம்பட்டி ரங்கராஜுடன் பழக்கம் ஏற்பட்டபோது, அவர் தனது முதல் மனைவி ஸ்ருதி பிரியாவிடம் இருந்து பிரிந்து வாழ்வதாகப் பொய் சொல்லியிருக்கிறார்.
"நீ உன் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு என்னை திருமணம் செய்து கொள்" என்று மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டதாக ஜாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருமணம் நடந்த பிறகு, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாய் கர்ப்பமாகியுள்ளார். ஆனால், ரங்கராஜ் மிரட்டி, கட்டாயப்படுத்தி அந்தக் கருவைக் கலைக்க வைத்துள்ளார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் கர்ப்பமான போது, அதையும் கட்டாயப்படுத்தி அபார்ஷன் செய்ய வைத்தார். 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாவது முறையாகக் கர்ப்பமான போது, "இந்த முறையும் கருவைக் கலைக்க மாட்டேன்" என்று ஜாய் உறுதியாகச் சொல்லிவிட்டார். இதனால் ரங்கராஜுக்கும், ஜாய்க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, அவர் ஜாயைத் தாக்கியிருக்கிறார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
டி.என்.ஏ. பரிசோதனை செய்ய கோரிக்கை
மாதம்பட்டி ரங்கராஜ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாய் கிறிஸில்டாவிற்கு குழந்தை பிறந்திருந்த நிலையில், மீண்டும் டி.என்.ஏ. பரிசோதனை செய்யக் கோரிக்கை விடுத்தார். பரிசோதனையில் அது மாதம்பட்டி ரங்கராஜின் குழந்தை என்பது உறுதியானால், அதை வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்ள ரங்கராஜ் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாய் கிரிஸில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் வரும் 14ஆம் தேதிக்குள் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாகச் சமர்பிக்குமாறு உத்தரவிட்டார். சட்டச் சிக்கல்கள் நிறைந்த இந்த வழக்கில், நீதிபதியின் அடுத்தக் கட்டத் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்புத் திரையுலகில் நிலவி வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications