Rangaraj: விசாரணையில் நடந்தது? அம்பலப்படுத்திய ஜாய் கிரிஸில்டா! ஆனால் மாதம்பட்டி ரங்கராஜன் பதிவை பாருங்க!
சென்னை: தமிழ் திரையுலகில் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி வந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் நடிகை ஜாய் கிரிஸில்டா விவகாரத்தில், தற்போது ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகக் குழப்பத்தில் இருந்த ரசிகர்கள் மத்தியில், நடிகை ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்புப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவருடைய முதல் மனைவி ஸ்ருதி இருவரும் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ்
நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்க்கஸ் மூலம் சூப்பரா ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். அவருக்கும் டிசைனர் ஜாய் கிரிஸில்டா இருவருக்கும் இடையிலான உறவு குறித்தச் சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் நீண்ட காலமாக நீடித்து வந்தது. இந்தச் சலசலப்புகளுக்கு மத்தியில், ஜாய் கிரிஸில்டாவுக்குச் சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

உறுதிப்படுத்திய பதிவு
குழந்தைப் பிறந்த பின்னர், ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்து, அதனுடன் மாதம்பட்டி ரங்கராஜின் படத்தையும் இணைத்து, "carboncopyofhisfatherface" (அப்பாவின் முகத்தின் கார்பன் காப்பி) மற்றும் "#junior madhampattyrangaraj" என்றுப் பதிவிட்டிருந்தார். அதோடு குழந்தைக்கு "RaghaRangaraj" (ரகா ரங்கராஜ்) என்று பெயரிட்டிருப்பதையும் அவர் அறிவித்திருந்தார். இதன் மூலம், ரங்கராஜ்தான் குழந்தையின் தந்தை என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மகளிர் ஆணையத்தில் ஒப்புதல்
இந்த விவகாரம் குறித்து ஆரம்பத்திலேயே மாதம்பட்டி ரங்கராஜன் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக கம்பளைண்ட் கொடுத்திருந்தார். அதன் காரணமாக, மகளிர் ஆணையம் (Women's Commission) விசாரணையை மேற்கொண்டது. இந்த விசாரணையின் முடிவை ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், "மகளிர் ஆணையம் நடத்தியச் சமீபத்திய விசாரணையில், எனது முன்னாள் கணவர் மாதம்பட்டி ரங்கராஜ், என்னைக் காதலித்துத் திருமணம் செய்ததையும், இந்தக் குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக்கொண்டார்" என்றுத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ரங்கராஜ், ஆணையத்தின் முன் "குழந்தையின் தந்தை நான் தான்" என்று ஒப்புக்கொண்டதால், "இதையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்; நீதி நிலைநாட்டப்படும்" என்ற நம்பிக்கையுடன் "#justice will prevail" என்ற ஹேஷ்டேக்கையும் ஜாய் கிரிஸில்டா இணைத்துள்ளார்.
நீண்ட நாட்களாகக் கணவர் மறுப்பால் தனித்துப் போராடிய ஜாய் கிரிஸில்டாவுக்கு, இந்த ஒப்புதல் ஒரு பெரிய திருப்புமுனையையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது.

கூலாக வலம் வரும் மாதம்பட்டி ரங்கராஜ்
மனைவியின் இந்த அதிர்ச்சி அறிவிப்புக்குப் பிறகு, நடிகர் மாதம்பட்டி ரங்கராஜின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட ஒரு பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது. தனதுப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், "A place where love is served just like food... That is our journey." (அன்பு உணவு போலப் பரிமாறப்படும் ஒரு இடம்... அதுவே எங்கள் பயணம்) என்று மிகவும் கூலாக ஒரு கேப்ஷனைப் பதிவிட்டுள்ளார். இந்த இடுகையில் அவர் இயக்குனர் அமீருடன் நின்றிருக்கிறார்.

மறுபடியும் சமையல்
மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் கலைஞர் என்பதாலும், அவர் பெரும்பாலும் உணவும், அன்பும் சார்ந்தே பேசுவதாலும், இந்தச் சிக்கலான நேரத்திலும் அவர் தொழில் சார்ந்த பதிவையே வெளியிட்டு, இந்தக் காதல் சர்ச்சை தனக்குப் பெரிதல்ல என்பதுபோலக் கடந்து செல்வதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
கணவரின் ஒப்புதலுக்குப் பிறகு, ஜாய் கிரிஸில்டாவுக்கு என்ன மாதிரியான நீதி கிடைக்கும், இந்தப் பிரச்சனை இனி சினிமா மற்றும் சின்னத்திரைத் துறையில் என்ன மாதிரியானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதே நேரத்தில் ஜாய் கிரிஸில்டா பதிவு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் மாதம்பட்டி ரங்கராஜனின் முதல் மனைவி ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார் அதில் "Sail your Dreams" என்று கேப்டன் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications