முதல் மனைவியுடன் வந்த மாதம்பட்டி ரங்கராஜனுக்கு சோதனை! சோசியல் மீடியாவில் இரண்டாவது மனைவி செய்த மாற்றம்
கோவை: பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக ஜாய் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்தச் செய்தி, சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிரிசில்டா, தான் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறியது, இந்த சர்ச்சையை மேலும் அதிகரித்தது. இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ், தனது முதல் மனைவி ஸ்ருதியுடன், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சம்பவம், பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இரண்டு மனைவிகளுடன் மாதம்பட்டி ரங்கராஜ்?
மாதம்பட்டி ரங்கராஜ், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞரான ஸ்ருதியை, ஏற்கனவே திருமணம் செய்து, அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து செய்யாமலேயே, இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா என்பது குறித்து, ரங்கராஜ் எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை.
அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படம்
சமீபத்தில், கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மாதம்பட்டி ரங்கராஜும், அவரது முதல் மனைவி ஸ்ருதியும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துக்கூட பேசிக்கொள்ளவில்லையாம். இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள். திடீரென்று ஒரு நபரை பார்க்கும்போது ஒரே பக்கமாக அந்த நபரை பார்த்து சிரிக்கிறார்களே தவிர இருவரும் முகம் கொடுத்து ஒரு இடத்திலும் பேசவில்லை இந்த நிகழ்ச்சிக்கு மாதம்பட்டி ரங்கராஜன் தனியாக ஒரு காரில் வந்ததாக கூறப்படுகிறது. இந்தப் புகைப்படம், இந்த விவகாரம், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருப்பதை உணர்த்துகிறது.
ஜாய் கிரிசில்டா - சமூக வலைத்தளங்களில் மௌனம்
மாதம்பட்டி ரங்கராஜனின் இரண்டாவது மனைவி என்று சொல்லிக் கொள்ளும் ஜாய் கிரிசில்டா, சமூக வலைத்தளங்களில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர். ஆனால், ரங்கராஜ், தனது முதல் மனைவியுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செய்தி வெளியான பிறகு, ஜாய், எந்தவிதப் பதிவுகளையும் வெளியிடவில்லை. "இதனால், குடும்பத்திற்குள் குழப்பம் வந்துவிட்டதா?" என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜாய் கிரிசில்டா, ரங்கராஜுடன் எடுத்த திருமணப் புகைப்படங்களை, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட நிலையில், தற்போது ரங்கராஜ், தனது முதல் மனைவியுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, ஒரு பெரிய மர்மமாகவே உள்ளது.
ரங்கராஜின் பிரபலத்தன்மை
மாதம்பட்டி ரங்கராஜ், 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம், உலக அளவில் பிரபலமானார். சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் வீடுகளில் சமையல் செய்து, அனைவரையும் அசத்தியவர். மாதம்பட்டி ரங்கராஜன் தன் மனைவியுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த வீடியோ பதிவு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள், இது குறித்துப் பல கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
மாதம்பட்டி ரங்கராஜின் இந்த இரட்டை வாழ்க்கை, ஒரு பெரிய மர்மமாகவே உள்ளது. இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது, ரங்கராஜ் வெளிப்படையாகப் பேசினால் மட்டுமே தெரியவரும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications