MadhaRasi Review: மதராஸி கதை இதுதானா? ஓபனாக பேசிய பயில்வான் ரங்கநாதன்! இவரே இப்படி சொல்லி இருக்காரே!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான 'மதராஸி' திரைப்படம், இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படம் உருவான விதம், இதில் நடித்த நட்சத்திரங்கள், மற்றும் அதன் விமர்சனம் என அனைத்தும் இப்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

படம் உருவான விதம் மற்றும் கதை
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தை, ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சிவகார்த்திகேயனுடன், நடிகை ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூ ஜமால், பிஜு மேனன் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
படத்தின் கதை, ஆயுதங்களை வெளிநாடுகளுக்குக் கடத்தும் ஒரு வில்லன் கும்பலுக்கும், அதைத் தடுக்க முயலும் தேசிய பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடக்கும் மோதலைப் பற்றியதுதான். இந்த மோதலில், கதாநாயகி ருக்மினி வசந்தின் குடும்பம் மாட்டிக்கொள்ள, அவர்களைக் காப்பாற்ற சிவகார்த்திகேயன் போராடுவதுதான் படத்தின் முக்கியக் கதை.
பயில்வான் ரங்கநாதனின் முழு விமர்சனம்
பொதுவாக, எந்தப் படத்தையும் விட்டு வைக்காமல் விமர்சனம் செய்யும் பயில்வான் ரங்கநாதன், 'மதராஸி' படத்தைப் பார்த்துவிட்டு, ஒரு முழுமையான பாசிட்டிவ் விமர்சனத்தைப் பகிர்ந்துள்ளார்.
நடிப்பு: சிவகார்த்திகேயன் வழக்கமாகப் பண்ணும் காமெடி படங்களை விட்டுட்டு, இந்தப் படத்தில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும், மனநிலை சற்று மாறுபட்டவராகவும் நடிச்சிருக்கிறார். அவரிடம் இருந்து சிறப்பான நடிப்பை முருகதாஸ் வெளியே கொண்டு வந்திருக்கிறார். பிஜு மேனன், விக்ராந்த், வித்யூ ஜமால், டான்சிங் ரோஸ் என அனைவரும் அவர்களுடைய கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தி நடித்துள்ளனர். நாயகி ருக்மினி வசந்த் மிக அருமையாக நடித்திருப்பதாகவும், அவர் கூடிய விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்றும் பயில்வான் பாராட்டியுள்ளார்.
ஆக்ஷன்:
இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கிறது. 'ரமணா' படத்தில் இருப்பது போலவே, இந்தப் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயனும் வில்லனும் பேசிக்கொள்ளும் வசனங்கள் சிறப்பாக உள்ளதாம். இனிவரும் காலங்களில், சிவகார்த்திகேயன் படங்களில் அதிக சண்டைக் காட்சிகள் இருக்கும் என்றும் பயில்வான் எதிர்பார்க்கிறார். இந்தப் படம் குழந்தைகளை மையப்படுத்திய படம் இல்லை என்றாலும், ஒரு குடும்பம் அமர்ந்து பார்க்கும் படியான ஆக்ஷன் மசாலா படமாக இது இருக்குமாம்.
இசை, ஒளிப்பதிவு:
படத்துக்கு இசையமைத்த அனிருத் சிறப்பாக உழைத்திருக்கிறார். மற்ற படங்களைப் போல இல்லாமல், இந்தப் படத்தில் பாடல்களை காப்பி அடிக்காமல் புதிதாக உருவாக்கியுள்ளதாகவும், பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்குப் பக்கபலமாக அமைந்துள்ளதாகவும் பயில்வான் கூறியிருக்கிறார். ஒளிப்பதிவும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறதாம்.
Madarasi: சிவகார்த்திகேயனின் 'மதராஸி’ - முன்பதிவில் புதிய சாதனை! - முதல் நாளிலேயே இத்தனை கோடியாமே!
ஏ.ஆர். முருகதாஸ் தன்னுடைய தோல்விகளில் இருந்து மீண்டு வந்து, ஒரு தரமான அரசியல் கருத்துள்ள படத்தைக் கொடுத்திருக்கிறார். இது ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாம். பொதுவாக, விமர்சனத்தில் கடுமை காட்டும் பயில்வான், 'மதராஸி' படம் தனக்கு முழுமையாகப் பிடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications