காதலி பேசலைனு வருத்தமா இருந்தேன்! என்னை சிரிக்க வச்சதுக்கு நன்றி! அப்படி என்ன செய்தார் மதுரை முத்து?
சென்னை: 90 கிட்ஸ்களின் பேவரைட் காமெடியன் மதுரை முத்து செய்த காமெடி வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
சன் டிவியில் அசத்தப் போவது யாரு எனும் நிகழ்ச்சி கடந்த 2006 அல்லது 2007 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில்தான் இத்தனை பேருக்கு காமெடியும், இத்தனை பேரும் மிமிக்ரியும் செய்யத் தெரியுமா என்பதே அப்போதுதான் தெரிந்தது.
அதிலும் மதுரையை சேர்ந்த முத்து, ஸ்டாண்ட் அப் காமெடி செய்வார். இதை பார்த்து வயிறு குலுங்க சிரித்து சிரித்து புண்ணாகும். அந்த அளவுக்கு காமெடியில் கலக்குவார். தற்போது அவர் நிறைய காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கிறார்.

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் இவர் நடுவராக இருந்து அவ்வப்போது கடிஜோக்ஸ்களையும் காமெடிகளையும் எடுத்து விடுகிறார். இவர் குக் வித் கோமாளியில் ஒரு சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அத்துடன் அந்த நிகழ்ச்சியில் சில நேரம் வந்து போட்டியாளர்களை காமெடி சொல்லி கலாட்டாவும் செய்வார்.
இத்தனை கோடி மக்களை சிரிக்க வைக்கும் மதுரை முத்துவின் வாழ்வில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூகம்பம் ஏற்பட்டது. மதுரை முத்துவின் மனைவி கார் விபத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து கைக்குழந்தையுடன் கஷ்டப்பட்டு வந்த அவர் வேறு ஒரு பெண்ணை அதாவது முதல் மனைவியின் தோழியை திருமணம் செய்து கொண்டார்.
மதுரை முத்து சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். ஒரு முறை தமிழ்காரரை இந்திக்காரர்கள் தாக்கியதாக வெளியான வீடியோவால் மனமுடைந்து வேதனை வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வகையல் தற்போது அவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சன்டிவியில் செய்த காமெடியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சிக்கு விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் வந்திருந்தார். இவர் அடிக்கும் காமெடிக்கு அவர் விழுந்து விழுந்து சிரிக்கிறார். அவர் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில் மனிதன் பிறக்கும் போதும் அழுகிறான், இறக்கும் போதும் பிறரை அழ வைக்கிறான். சார்லி சாப்லின் சொல்வார் என்னை அழ வைத்த இந்த உலகத்தை நான் சிரிக்க வைக்கிறேன் என்பார்.
ஆனால் இன்று நாம் சந்தோஷமாக இருக்கிறோமோ இல்லையோ அடுத்தவன் சந்தோஷமாக இருக்கவே கூடாது. ஊரே பஞ்சத்தில் இருந்தது. அப்போது ஊர் மக்கள் எல்லாம் மீன் பிடிக்க சென்றார்கள். அப்போது தேவதை தோன்றி, ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள், எதையாவது கேட்டு சந்தோஷப்படுறதுதானேனு கேட்டாங்க! ஒருத்தரை அழைத்த தேவதை உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டது.

அதற்கு அந்த நபர் நான் அமெரிக்காவில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றார். சரி அப்படியே ஆகட்டும் என்றது தேவதை. இன்னொருத்தரை அழைத்து என்ன வேண்டும் என தேவதை கேட்டது . அதற்கு அவர் நான் ஜப்பானுக்கு போய் நிறைய தொழிற்சாலைகள் கட்டி நிறைய பேருக்கு வேலை தர வேண்டும் என்றார். சரி அப்படியே ஆகட்டும் என்றார். மூன்றாவது ஒரு ஆளிடம் உனக்கு என்ன வேண்டும் என கேட்டது, போன ரெண்டு பேரும் திரும்பி வர வேண்டும் என்றான், உடனே வந்துவிட்டார்கள். அதாவது இவன் ஒன்றை கேட்டு இவன் போய் சந்தோஷமாக இருக்கிறதை விட்டுவிட்டு அடுத்தவன் சந்தோஷத்தை கெடுப்பது.
இதே போல் ஒரு சம்பவத்தில் கடவுள் என்ன வரம் வேண்டும் என அமெரிக்கா நாட்டவரிடம் கேட்டார். அதற்கு உடனே எனக்கு தங்கம் வேண்டும் என்றார், உடனே கடவுள் ஆள்காட்டி விரலை நீட்டி ஒரு பாராங்கல்லை தங்கமாக்கினார். ரஷ்யா நாட்டுக்காரரிடம் கேட்ட போது வைரம் வேண்டும் என கேட்டார். கடவுள் ஆள்காட்டி விரலை நீட்டியவுடன் அங்கிருந்த சேர் , டேபிள் எல்லாம் வைரமாக மாறிவிட்டது. உடனே நம் நாட்டுக்காரரிடம் கேட்ட போது உங்க ஆள்காட்டி விரல்தான் வேண்டும் என கூறிவிட்டான்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications