மனைவியை நினைத்து உருக்கமாக பதிவிட்ட மதுரை முத்து...ஆறுதல் கூறும் ரசிகர்கள்
சென்னை: மதுரை முத்து தன்னுடைய மனைவியின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலியை கண்ணீரோடு பதிவிட்டுள்ளார்.
மதுரை முத்துவின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

மதுரை முத்துவின் சோகமான கதை
பொதுவாக எப்போதும் அடுத்தவர்களை சிரிக்க வைப்பவர்கள் எல்லாம் மனதிற்குள்ளே அதிகமாக சோகங்களையும், துயரங்களையும் சுமந்து கொண்டிருப்பவர்கள் ஆகத்தான் இருக்க முடியும் என்று பலரும் கூறுவார்கள். அந்த வகையில்தான் பல காமெடி நடிகர்களின் வாழ்க்கை இருந்து வருகிறது. அது சின்னத்திரையாக இருந்தாலும் சரி, வெள்ளி திரையாக இருந்தாலும் சரி யாரும் அதில் விதிவிலக்கல்ல என்று பலருடைய வாழ்க்கை அனைவருக்கும் உணர்த்தி வருகிறது. அந்த வகையில்தான் திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் அனைவரையும் சிரிக்க வைக்கும் மதுரை முத்துவின் வாழ்க்கையும் இருந்து வருகிறது.

வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய இழப்பு
மதுரை முத்துவின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார் ஆக்சிடெண்டில் இறந்துவிட்டார். சம்பவ இடத்திலேயே இவர் இறந்து விட்டது மதுரை முத்துக்கு மட்டுமல்லாமல் அவருடைய இரு குழந்தைகளுக்கும் பெரிய அதிர்ச்சி தான். மதுரை முத்துக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் திடீரென்று அவருடைய மனைவியின் இழப்பு அவருடைய வாழ்க்கையில் பெரிய அளவில் சோகத்தையும் துயரத்தையும் கொடுத்துள்ளது. சில மாதங்களுக்குப் பிறகு மதுரை முத்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டு இருந்தாலும் தற்போது வரைக்கும் தன்னுடைய குழந்தைகளை பாசமாகவும் ஜாலியாகவும் வளர்த்து வருகிறார்.

வலைத்தள பதிவு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக இவருடைய காமெடியை ரசிகர்கள் பலர் ரசித்து வந்தாலும் தன்னுடைய பட்டிமன்ற பேச்சாள் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார். பல நேரங்களில் இவர் பேசும் பேச்சுகள் டைமிங் காமெடி ஆக இருப்பதால் ரசிகர்கள் தங்களுடைய மனக் கவலையை மறந்து வாய் விட்டு சிரித்து வருகிறார்கள். என்னதான் இவர் அடுத்தவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தாலும் இவருடைய சொந்த வாழ்க்கையில் சொல்லப்படாத சோகங்கள் இருந்து வருகிறது என்பதை தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரியப்படுத்தி இருக்கிறார்.

உருக்கமான பதிவு
மதுரை முத்துவின் மனைவியின் இறப்புக்குப் பிறகு குழந்தைகளோடு இவர் பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தாலும் தற்போது தன்னுடைய மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டு எங்கள் வீட்டின் தெய்வத்திற்கு ஆறாம் ஆண்டு அஞ்சலி என்று பதிவிட்டு, என்றும் நினைவுகளுடன் மதுரை முத்து மற்றும் யாழினி ஸ்,ரீ முத்துரா ஸ்ரீ மற்றும் குடும்பத்தினர் என்று உருக்கமாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர். எங்களை சிரிக்க வைத்த நீங்கள் கண்கலங்கிய நாள் என்று உருக்கமான ஆறுகளை ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications