எங்க வீட்டு தெய்வம்.. இறந்த மனைவிக்காக கண்ணீரோடு மதுரை முத்து.. 8 வருஷம் ஆகிடுச்சு.. ஆனால்! ஐயோ பாவம்
சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலமாகவும், பட்டிமன்றங்கள் மூலமாகவும் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் மதுரை முத்து இன்று கண்கலங்கியபடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய இறந்து போன மனைவிக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பகிர்ந்திருக்கிறார்.
சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் நகைச்சுவை பேச்சாளராக அதிகமான பிரபலமான மதுரை முத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பொதுவாக எப்போதும் அடுத்தவர்களை சிரிக்க வைப்பவர்கள் எல்லாம் மனதிற்குள்ளே அதிகமாக சோகங்களையும், துயரங்களையும் சுமந்து கொண்டிருப்பவர்கள் ஆகத்தான் இருக்க முடியும் என்று பலரும் கூறுவார்கள். அந்த வகையில்தான் பல காமெடி நடிகர்களின் வாழ்க்கை இருந்து வருகிறது.
அது சின்னத்திரையாக இருந்தாலும் சரி, வெள்ளி திரையாக இருந்தாலும் சரி யாரும் அதில் விதிவிலக்கல்ல என்று பலருடைய வாழ்க்கை அனைவருக்கும் உணர்த்தி வருகிறது. அந்த வகையில்தான் திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் அனைவரையும் சிரிக்க வைக்கும் மதுரை முத்துவின் வாழ்க்கையும் இருந்து வருகிறது.
மதுரை முத்துவின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார் ஆக்சிடெண்டில் இறந்துவிட்டார். சம்பவ இடத்திலேயே இவர் இறந்து விட்டது மதுரை முத்துக்கு மட்டுமல்லாமல் அவருடைய இரு குழந்தைகளுக்கும் பெரிய அதிர்ச்சி தான். மதுரை முத்துக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் திடீரென்று அவருடைய மனைவியின் இழப்பு அவருடைய வாழ்க்கையில் பெரிய அளவில் சோகத்தையும் துயரத்தையும் கொடுத்துள்ளது.
சில மாதங்களுக்குப் பிறகு மதுரை முத்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டு இருந்தாலும் தற்போது வரைக்கும் தன்னுடைய குழந்தைகளை பாசமாகவும் ஜாலியாகவும் வளர்த்து வருகிறார். மதுரை முத்து இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கும் பெண் அவருடைய முதல் மனைவியின் தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று அதாவது பிப்ரவரி 4ஆம் தேதி முதல் மனைவி லேகாவின் எட்டாவது நினைவு நாள். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் மூலமாக பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications