Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் டாப் சீரியல்.. இதுதான் காரணமா? வருத்தத்தில் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் கடந்த ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட ஒரு புது சீரியல், இன்னும் ஒரு வருடம் கூட நிறைவு செய்யாத நிலையில் திடீரென முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த சீரியல் இவ்வளவு சீக்கிரம் நிறுத்தப்படுகிறது? அதற்கு பின்னால் என்ன காரணம்? என்னென்ன சம்பவங்கள் நடந்தன? என்பதைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

Vijay TV serial Reshma Pasupuleti

விஜய் டிவி சீரியல்கள்

விஜய் டிவியில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து ஒளிபரப்பாகும் சீரியல்கள் பல்வேறு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் புதுப் புதுக் கதைகளுடன் புதிய சீரியல்கள் அறிமுகமாகும் நிலையில், சில சீரியல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற, சில சீரியல்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறாமல் தடுமாறுவது வழக்கமாகி விட்டது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட தொடர்களில் சில நல்ல டி.ஆர்.பி பெற்றும் வெற்றி நடை போட்டு வரும் நிலையில், மற்றொரு புது சீரியல் துவங்கிய ஏழே மாதத்தில் முடிவுக்கு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முடிவுக்கு வரும் சீரியல்

அந்த சீரியல் தான் "மகளே என் மருமகளே". கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதியம் 3 மணிக்கான ஸ்லாட்டில் இந்த சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கியது. அதற்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த "தங்கமயில்" முடிவுக்கு வந்ததால் அதன் இடத்தை இந்த சீரியல் பிடித்தது. தெலுங்கில் ஒளிபரப்பான "மகுவா ஓ மகுவா" என்ற ஹிட் தொடரின் தமிழ் ரீமேக் ஆக இது உருவாக்கப்பட்டது. குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட இந்த கதை ஆரம்பத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

சீரியல் இயக்குனர்

இந்த தொடரை முதலில் இயக்கி வந்தவர் இயக்குனர் நாராயணமூர்த்தி. ஆனால் தொடங்கிய ஒரே மாதத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தது படக்குழுவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ஒரு தொடரின் திசையே மாறக் கூடிய இந்த இழப்பு, கதையின் முன்னேற்றத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் "தங்கமகள்" தொடரின் இயக்குனர் ஹரிஷ் ஆதித்யா இந்த தொடரை பொறுப்பேற்று இயக்கத் தொடங்கினார். இருந்தாலும் ஆரம்பத்தில் கிடைத்த அந்த ஓட்டம் தொடர்ந்து செல்லவில்லை.

இதற்கிடையில் சீரியலின் நேரம் மதியம் 3 மணியில் இருந்து மாலை 6 மணிக்குத் திடீரென மாற்றப்பட்டது. இந்த நேரமாற்றம் தான் தொடருக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்ததாக கூறப்படுகிறது. குடும்ப பெண்கள் அதிகமாக பார்க்கும் நேரமான 3 மணியில் இருந்த சீரியல், போட்டி கடுமையாக இருக்கும் 6 மணிக்கு மாற்றப்பட்டதும் டி.ஆர்.பி சரிவை சந்தித்தது. கடந்த வாரம் வெளியான டி.ஆர்.பி பட்டியலில் இந்த தொடர் வெறும் 1.5 ரேட்டிங் மட்டுமே பெற்றது.

பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா

இந்த சீரியலில் ஹீரோவாக அவினாஷ் நடித்திருந்தார். இளம் வயதில் கணவரை இழந்த பெண்ணாக வர்ஷினி சுரேஷ் நடித்திருந்தார். மகனை இழந்தாலும் மருமகளை மகளாக பார்க்கும் வலிமையான மாமியார் கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்தது பெரிதும் பேசப்பட்டது. "பாக்கியலட்சுமி" சீரியலில் வில்லியாக மிரட்டிய ரேஷ்மா, இதில் முழுக்க முழுக்க பாசமான தாயாக மாறியிருப்பது இந்த தொடரின் முக்கிய ஹைலைட்டாக இருந்தது.

கதையும் வித்தியாசமாகவே இருந்தது. திருமணம் ஆன சில நாட்களிலேயே மகன் இறந்துவிட, அவனின் ஆசைகளை எல்லாம் நிறைவேற்ற மருமகளை தன் மகளைப் போல வளர்க்கும் ஒரு தாயின் உணர்ச்சி பயணம் - இதுதான் இந்த தொடரின் மையக்கரு. உணர்ச்சிபூர்வமான இந்த கதை நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டாலும், சீரியல் சந்தித்த சிக்கல்கள் அதை முன்னேற விடவில்லை.

இயக்குனரின் திடீர் மரணம், நேரமாற்றம், டி.ஆர்.பி சரிவு - இந்த மூன்று காரணங்களும் சேர்ந்து "மகளே என் மருமகளே" இல்லை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் வேகமாக எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த மாதத்திற்குள் இறுதி எபிசோடு ஒளிபரப்பாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு நல்ல கதைக்களம் இருந்தும் பல காரணங்களால் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வரும் இந்த தொடர், ரசிகர்களிடம் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் பாராட்டப்பட்ட இந்த சீரியல் இவ்வளவு சீக்கிரம் நிறுத்தப்படுவது விஜய் டிவி ரசிகர்களுக்கே ஒரு சர்ப்ரைஸ் ஆக மாறியுள்ளது.

மேலும் இது போன்ற டிவி அப்டேட்டை தெரிந்து கொள்ள எங்களை பின் தொடருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+