Mahabaratham Serial: இங்கே கண்ணன்..அங்கே கர்ணன்...மகாபாரதம்!
சென்னை: புராண கதைகள்.. இதிகாச கதைகள் கேட்பதே ஒரு இனிமை என்றால், அதை பார்ப்பது என்பது ஒரு அலாதி பிரியம்தான். அந்த பிரியத்தை அனுபவிக்க நமது விஜய் தொலைக்காட்சி தினமும் 2 மணி நேரம் மகாபாரதம் சீரியலை ஒளிபரப்பி வருகிறது.
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தினமும் 2 மணி நேரம் மகாபாரதம் ஒளிபரப்பாகி வருகிறது.இதே மகாபாரத தொடரை விஜய் டிவி, கடந்த பல வருடங்களுக்கு முன்னர் தினமும் மாலை அரைமணி நேரம் மட்டுமே ஒளிபரப்பி வந்தது.
அப்போது...தொடர்ந்து பார்க்க முடியாமல் சட்டென்று முடிந்து போகிறதே என்கிற ஏக்கம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உண்டாகும். இப்போது நிறைவுடன் பார்க்கும் வகையில் 2 மணி நேரம் மகாபாரதம் ஒளிபரப்பாகி வருகிறது.

சூப்பர் ஹிட் மகாபாரதம்
டிடி நேஷனல் சானலில் ஆரம்ப காலத்தில் அதாவது 25 வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பாகிய மகாபாரதம் சீரியலுக்குப் பின்னர் சூப்பர் ஹிட்டான மகாபாரதம் என்றால், விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மகாபாரதம் மொழி மாற்று சீரியல்தான்.எந்த சானல்களில் எப்பேர்ப்பட்ட நிகழ்ச்சிகள் என்றாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் விஜய் டிவியில் இந்த நேரத்தில் மகாபாரதம் பார்த்தார்கள்.

மகாபாரதம் மறு ஒளிபரப்பு
இப்போது விஜய் டிவி மகாபாரதம் சீரியலை மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. இரண்டு மணி நேரம் உட்கார்ந்த இடத்தில் இருந்து பலரும் இதை பார்க்கத் துவங்கி இருக்கின்றனர்.அதிக பொருட்செலவில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த மகாபாரதம் பார்க்க பார்க்க கண்களுக்கு இதமாக இருக்கிறது.

கர்ணன் இன்று
மகாபாரத்தத்தில் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரம் என்றால், கண்ணனுக்கு அடுத்து கர்ணன்தான். குறும்புக்கார கண்ணன் தனது மாய செயல்களால் மக்களை வசப்படுத்தியவன் என்றால், கர்ணன் குணத்தால் மக்களின் மனதை தன் வசம் ஈர்த்தவன். இன்றைய காட்சியில் கர்ணன் குந்திக்கு மகனாக பிறந்ததும். குந்தி தேவி கண்ணீர் வடித்து குழந்தையை ஆற்றில் விடும் காட்சியும் மனதை உலுக்கியது.

விஜய் டிவி அறிக்கை
மகாபாரதம் போன்ற தொடர்கள் மற்றும் பல நிக்ழ்ச்சிகளை விஜய் டிவி மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. இதனால், ஸ்க்ரோலிங்கில் லாக்டவுன் காரணத்தினால், ஷூட்டிங் செய்ய முடியாமல், உங்கள் அபிமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய முடியவில்லை. எனவேதான்...இது போன்ற நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு செய்கிறோம். தங்களுக்கு இதில் சிரமம் இருப்பின் பொறுத்துக் கொண்டு, தொடர்ந்து எங்களுக்கு ஆதரவைத் தர வேண்டுகிறோம். நிலைமை சரியானவுடன் மீண்டும் உங்கள் அபிமான நிகழ்ச்சிகளை விஜய் டிவி உங்களுக்கு வழங்கும் என்று அறிவித்து வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications