6 மாசம் ஆகிடுச்சி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட ரவீந்தர்.. வெட்கத்தில் மகாலட்சுமி கூறிய பதில்
தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்களுடைய ஆறாவது மாத திருமண கொண்டாட்டத்தை கொண்டாடி இருக்கின்றனர்.
சென்னை: தயாரிப்பாளர் ரவீந்தர் தன்னுடைய மனைவி மகாலட்சுமியை குறித்து சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
மகாலட்சுமியோடு தனக்கு திருமணம் நடந்து ஆறு மாதம் ஆகிவிட்டது என்று ரவீந்தர் நெகிழ்ச்சியாக பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
ரவீந்தர் வெளியிட்ட பதிவுக்கு மகாலட்சுமி என் குழந்தை என எல்லாம் நீங்கள் தான் என்று பதில் கமெண்ட் கொடுத்து இருக்கிறார்.

ரசிகர்கள் வியந்து போன திருமணம்
சின்னத்திரை பிரபலமான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்றாலும் சமூக வலைத்தளத்தில் இவர்களுடைய திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எந்த பக்கம் திருப்பினாலும் இவர்களுடைய புகைப்படம் தான் வந்து கொண்டிருந்தது .90ஸ் கிட்ஸ்களின் பலருடைய மோட்டிவேஷன் ஆகவும் ஆறுதலாகவும் ரவீந்திரருடைய திருமணம் இருந்து வந்ததாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

மோட்டிவேஷன் ஆன திருமணம்
பலர் வயதாகி விட்டதே நமக்கு திருமணமாகவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் ரவீந்தர்க்கு மகாலட்சுமி கிடைத்தது போல தங்களுக்கும் ஒருநாள் திருமணம் முடியும் என்று இவர்களுடைய திருமண புகைப்படங்கள் மீம்ஸ்களில் கருத்து தெரிவித்து வந்தனர். மகாலட்சுமிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் இவருடைய திடீர் திருமணம் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் மட்டும் குறைந்தபாடில்லை. சமூக வலைத்தளத்தில் இவர்களுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பல சேனல்கள் இவர்களை வலம் வந்தது.

நெகட்டிவ்வர்களை கண்டு கொள்வதே கிடையாது
தயாரிப்பாளர் ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவ்யூ செய்து வருவதால் அவர் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரீட்சையமானவர்தான். ஆரம்பம் முதலே அவரைப் பற்றி அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் வலம் வந்து கொண்டிருக்குமாம். அது எல்லாம் அவர் கண்டு கொண்டதே கிடையாது. தற்போது கூட இவர் உடலளவில் தனக்கு சம்பந்தம் இல்லாத பெண்ணை திருமணம் செய்து விட்டார் என்று பலரும் காண்டாகி கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அதை எல்லாம் ஒரு துளி அளவு கூட இவரை பாதிக்கவில்லை என்று இவர் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் நீங்கள் கலாய்ப்பவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அதை கண்டு கொள்ளாமல் எங்களுடைய பணியில் நாங்கள் சிறப்பாக இருப்போம் என்பதை இவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.

ஆறாவது மாத கொண்டாட்டம்
இந்த நிலையில் மகாலட்சுமி மற்றும் ரவீந்தருக்கு திருமணம் முடிந்து ஆறு மாதம் ஆகிவிட்டது என்று தங்களுடைய ஆறாவது மாத கொண்டாட்டத்தை ஹார்டின் முன்பு இவர்களுடைய புகைப்படம் இருப்பது போன்று, நீயும் நானும் என கலக்கலான ஒரு புகைப்படத்தை ரவீந்தர் வெளியிட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த புகைப்படத்திற்கு ஆறாவது மாத திருமண வாழ்த்துக்கள் மகாலட்சுமி, நீதான் என்னுடைய வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் என் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் மாற்றியது என்று திருமதி ரவி தான் என்னுடைய உலகம் என ரவீந்தர் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதற்கு இனிய ஆண்டு விழா என் குழந்தை மற்றும் என் உலகம் அனைத்தும் நீங்கள்தான் என்று ரவீந்தர் மகாலட்சுமி கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications