கர்ப்பத்தை அறிவித்த ‘மகாநதி’ சீரியல் நடிகை.. அடுத்தடுத்து வாழ்க்கையில் வெற்றி.. குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் வெண்ணிலா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை வைஷாலி தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சி செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். வைஷாலி சில வாரங்களுக்கு முன்புதான் தன்னுடைய கணவருக்கு புதிய கார் வாங்கி கொடுத்திருந்தார். அது போல சில மாதங்களுக்கு முன்பு புதியதாக டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றும் திறந்து வைத்திருந்தார். அடுத்தடுத்து வைஷாலி வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
மகாநதி சீரியலில் பலருடைய கோபத்தை சம்பாதித்து கொண்டிருக்கும் வைஷாலி சீரியலில் நடிக்க தொடங்குவதற்கு முன்பு திரைப்படங்கள் மூலமாகத்தான் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார். நடிகர் விஷால் நடிப்பில் வெளியான கதக்களி திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து காதல் கசக்குதையா, கடுகு, சர்க்கார், பைரவா, ரெமோ, சீமராஜா போன்ற படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார்.

திரைப்படங்களில் நடிப்பு
அந்த நேரத்தில் தான் இவர் சீரியல் பக்கமும் திரும்பி இருக்கிறார். ஆரம்பத்தில் ராஜா ராணி சீரியலில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் முதலில் இவர்தான் நடிக்க கமிட்டாகி இருந்தார். பிறகு சீரியலில் இருந்து திடீரென்று விலகிவிட்டார். இப்போது முழு நேரமாக சீரியல் நடிகையாகவே மாறி இருக்கிறார். விஜய் டிவியில் முத்தழகு சீரியலில் வில்லியாக நடித்து வந்தார்.
சீரியல் நடிகை
அதுபோல சன் டிவியில் ஆனந்த ராகம், விஜய் டிவியில் மகாநதி உட்பட பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிகமாக இவர் வில்லி கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் எந்த ஒரு மகிழ்ச்சியான செய்தியையும் அதை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் தான் புதிய கார் வாங்கிய விஷயத்தை தன்னுடைய சோசியல் மீடியாக்கள் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
மகிழ்ச்சி செய்தி
அதில் தன்னுடைய கணவர் ஆசைப்பட்ட மகேந்திராவின் புதிய பிராண்ட் காரை தான் வாங்கியதாக கூறியிருந்தார். அதுபோல அதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றையும் திறந்து வைத்திருந்தார். சீரியலில் இவர் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் அப்படியே பிசினஸ் தொடங்கி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
வைஷாலி வெளியிட்ட பதிவு
அது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "கொஞ்ச நாளாக ஒரு ரகசியத்தை வச்சிட்டு இருந்தோம். ஆனா இப்ப நாங்க கர்ப்பமாக இருக்கிறோம் என்று சொல்லுறதில் ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்க குடும்பத்திற்கு குட்டி குழந்தை சீக்கிரமாகவே வரப்போகுது. சீக்கிரமே மூணு பேர் சேர்ந்து குடும்பம் நடத்துவோம். நாங்கள் எங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அடி எடுத்து வைக்கிறோம். மிகவும் சிலிர்ப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. எங்கள் சிறிய உலகத்திற்கு உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் அன்பும் தேவை" என்று கூறியிருக்கிறார்.
குவியும் வாழ்த்து
வைஷாலி மற்றும் அவருடைய கணவர் இருவரும் விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டனர். இப்போது இந்த தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் இவருக்கு இப்போது வயிறு தெரிய இருப்பதால் இனி மகாநதி சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா இல்லையா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இப்போதைக்கு அந்த சீரியலில் விலகுவது பற்றி எந்த தகவலையும் வைஷாலி கூறவில்லை.












Click it and Unblock the Notifications