பிரபல நடிகர் கார் விபத்தில் பரிதாபமாக பலி.. கண்கலங்க பதிவு வெளியிட்ட நடிகர் ரகுமான்.. உருக்கமான தகவல்
சென்னை: மலையாள திரையுலகில் நடிகர் சந்தோஷ் நாயர் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகினி ஆட்டம் என்ற படத்தில் நடித்திருந்த அவர், இன்று அதிகாலை ஏற்பட்ட கார் விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து பத்தனம்திட்டா மாவட்டம் எனத்தூ பகுதியில் நடந்துள்ளது. காரில் அவருடன் பயணித்த அவரது மனைவி சுபாஷ்ரீவும் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து 2026 மே 5 காலை சுமார் 6.30 மணியளவில் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம் எனத்தூ (Enathu) பகுதியில் நடந்துள்ளது. நடிகர் சந்தோஷ் நாயர் பயணம் செய்த இன்னோவா கார், எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது அதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாந்தோஷ் நாயர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் உயிரை காப்பாற்ற முடியவில்லை. லாரி ஓட்டுநரும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளார்.

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அனுபவம்
1950களின் இறுதியில் பிறந்த சாந்தோஷ் நாயர், 1982 ஆம் ஆண்டு வெளியான இது நுங்களோட கதை( Ithu Njangalude Katha) என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு 100-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். வில்லன், நகைச்சுவை, துணை நடிகர் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த அவர், மலையாள சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.
திருவனந்தபுரத்தில் பிறந்த அவர், கல்வி வாழ்க்கையில் கணிதம் பயின்ற பின்னர், ஆரம்பத்தில் சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பின்னர் முழுமையாக நடிப்பு துறையில் நுழைந்து பல தலைமுறை நடிகர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
இறுதி படம்
அவரின் இறுதி திரைப்படமாக தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் மோகினி ஆட்டம் (Mohiniyattam) படம் அமைந்துள்ளது. இதுவே அவரது கடைசி திரை தோற்றமாக மாறியுள்ளது ரசிகர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் ரகுமான் உருக்கமான இரங்கல் பதிவு
நடிகர் ரகுமான் தனது நண்பர் சாந்தோஷ் நாயர் மறைவு குறித்து எமோஷனலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், "என் அன்பான நண்பர் சாந்தோஷ் நாயர் திடீர் விபத்தில் உயிரிழந்த செய்தியை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். நாங்கள் இருவரும் சினிமா துறையில் ஒன்றாக வளர்ந்தவர்கள். பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறோம். பெரும்பாலும் நான் அவருக்கு எதிராக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், நிஜ வாழ்க்கையில் அவர் மிகவும் நல்ல மனம் கொண்ட, அன்பான மனிதர் மற்றும் நெருங்கிய நண்பர்.
எப்போதும் நேரில் அதிகமாக தொடர்பில் இல்லாவிட்டாலும், அவ்வப்போது தொலைபேசியில் பேசிக் கொண்டு பழைய நாட்களை நினைவுகூர்வோம். அவர்மீது எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட பாசம் இருந்தது.
படப்பிடிப்பு முடிந்த பிறகு ஹோட்டல் அறைகளில் ஒன்றாக அமர்ந்து உணவு பகிர்ந்து, தொலைக்காட்சி பார்த்து சிரித்து மகிழ்ந்த அந்த நாட்கள் மிகவும் இனிமையானவை. அந்த எளிய, மகிழ்ச்சியான காலங்களை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்.
இந்த செய்தி என்னை மிகவும் ஆழமாக பாதித்துள்ளது. இவ்வளவு வலியுடன் நான் அரிதாகவே உணர்ந்திருக்கிறேன். அவரின் ஆன்மா அமைதியாக இருக்கட்டும். என் அன்பான நண்பருக்கு இது என் இறுதி வணக்கம். அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்" என்று தெரிவித்துள்ளார்.
திரையுலகின் பெரும் இழப்பு
சாந்தோஷ் நாயரின் மறைவு மலையாள திரையுலகிற்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. பல நடிகர்களுடன் பணியாற்றிய அனுபவம், அவரின் இயல்பான நடிப்பு மற்றும் நட்பு குணம் ஆகியவை அவரை அனைவரிடமும் மரியாதைக்குரியவராக மாற்றியது. திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications