பிரியங்கா VS மணிமேகலை சண்டை உருவான இடம்.. திவ்யா துரைசாமி எலிமினேசன் போது வெடித்த பிரச்சனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரும் பரபரப்பாக பேசப்படும் நிலையில் எதற்காக மணிமேகலை விலகினார்? பிரியங்காவோடு எந்த இடத்தில் அவருக்கு சண்டை ஏற்பட்டது என்று சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.

சமூக வலைத்தளத்தை திறந்தாலே அங்கு மணிமேகலை vs பிரியங்கா சண்டை பிரச்சனைதான் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. மணிமேகலையின் ரசிகர்கள் பிரியங்கா செய்த எல்லா நிகழ்ச்சிகளிலும் டாமினேட் செய்கிறார். அவரோடு அந்த செட்டில் இருப்பவர்களை விட அவர்தான் முக்கியமாக தெரிய வேண்டும் என்று எல்லாருடைய வேலைகளையும் கெடுக்கிறார் என்று பேசி வருகிறார்கள்.

vijay tv manimegalai

அதோடு மணிமேகலை எனக்கு தன்மானம் தான் முக்கியம். வேலை, வாய்ப்பு, பணம் எல்லாம் அதற்குப் பிறகுதான் என்னுடைய தன்மானம் குறைகிற மாதிரி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த நிலையில் நான் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து விட்டேன் என்று சொல்லி இருக்கும் நிலையில் மணிமேகலைக்கு அமோகமான ஆதரவு இருக்கிறது.

அதே நேரத்தில் என்ன பிரச்சனை நடந்தது என்று வெளியே யாருக்கும் தெரியாமல் இருக்கும் நிலையில் செட்டுக்குள் இருந்த சில பிரபலங்கள் அங்கு நடந்தது பற்றி பேசி இருக்கிறார்கள். அதாவது கடந்த செப்டம்பர், 8ஆம் தேதி எலிமினேஷன் ரவுண்டு நடைபெற்றது. இது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பாலோ பண்ணி பார்க்கும் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். அப்போது இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இரண்டு எலிமினேஷன் நடைபெற்றது.

முதலில் திவ்யா துரைசாமி வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து விடிவி கணேசன் வெளியேற்றப்பட்டார். அதில் திவ்யா துரைசாமி வெளியேற்றப்படும் போது அவர் பேசும் இடத்தில்தான் மணிமேகலை மற்றும் பிரியங்காவிற்கு இடையே சண்டை வெடித்திருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கிறது.

மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருமே பல வருடங்களாக தொகுப்பாளராக இருக்கிறார்கள். இப்ப வரைக்கும் தொகுப்பாளராக இருக்கும் பிரியங்கா இந்த சீசனில் குக்காக வந்திருக்கிறார். அதுபோல நான்கு சீசன்களாக கோமாளியாக இருந்த மணிமேகலை நான்காவது சீசனில் பாதிக்குப் பிறகு தொகுப்பாளராக வந்து ஐந்தாவது சீசனிலும் தொடர்கிறார்.

இவர்கள் இருவருக்கும் தொகுப்பாளராக பல வருடங்களாக அனுபவம் இருக்கும் நிலையில் சின்ன சின்ன வார்த்தைகள் கூட இருவரிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் இருந்திருக்கிறது. அதிலும் கடந்த வாரத்தில் திவ்யா துரைசாமி எலிமினேஷன் என்று அறிவிக்கப்பட்டதும் அவர் குக் வித் கோமாளியில் தனக்கு உதவி செய்தவர்கள் பலர் பற்றி பேசியிருக்கிறார்.

அதிலும் பிரியங்கா பற்றி அதிகமாக பேசியிருக்கிறார். பிரியங்காவை பாராட்டி பேசியதும் பிரியங்கா திவ்யா துரைசாமி குறித்து பேசி இருக்கிறார். அப்போது தான் மணிமேகலை பேச வேண்டிய இடத்திலும் கூட அதை பிரியங்காவே பேசி இருக்கிறார். இது மணிமேகலைக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நான் சொல்ல வேண்டிய விஷயங்களை நீங்களே சொல்லிவிட்டால் அப்போ நான் இங்கே எதற்கு? நீங்கள் மட்டும்தான் இங்கே பேச வேண்டும் என்று வந்திருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

திடீரென்று மணிமேகலை கத்தி பேசியதை ஷெட்டில் இருந்த யாரும் எதிர்பார்க்கவில்லையாம். அனைவர் முன்பும் தன்னை மணிமேகலை பேசிவிட்டார் என்று பிரியங்காவும் கோபப்பட்டு கேரவனுக்கு சென்று அழுது கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது குக் வித் கோமாளி ப்ரொடக்ஷன் டீம் எல்லோரும் மணிமேகலை மற்றும் பிரியங்காவை சமாதானம் செய்திருக்கிறார்கள்.

அன்றைய எபிசோடு ஒரு வழியாக முடிவடைந்ததும் அடுத்த நாள் எபிசோடில் பிரச்சனை இருக்காது என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் பிரியங்கா என்னை இத்தனை பேரு முன்பு மணிமேகலை திட்டிவிட்டார் அதற்கு அவர் காரணம் சொல்ல வேண்டும்!? ஒரு போட்டியாளர் என்னை பற்றி பெருமையாக பேசினால் நான் அவரைப் பற்றி பேச வேண்டும் என்பது தானே முறை. அப்படி நான் பேசக்கூடாது என்று மணிமேகலை எப்படி சொல்லலாம்? என்று தொடர்ந்து பிரச்சனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதனால் சேனல் தரப்பினர் மற்றும் குக் வித் கோமாளி குழுவினர்கள் மணிமேகலையிடம் நீங்கள் நிகழ்ச்சியில் பிரியங்காவிடம் உங்களிடம் கோபப்பட்டதுக்கு சாரி என்று ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு பிறகு மணிமேகலை எனக்கு தன்மானம் தான் முக்கியம், நான் எந்த தப்பும் செய்யவில்லை நான் என்னுடைய வேலையைவிட்டு செல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

சூட்டிங் தொடங்கியபோது மணிமேகலை மறுத்து இருந்தாலும் விளம்பர இடைவேளையில் அவரை சொல்ல வைத்து விடலாம் என்று சேனல் தரப்பும் முடிவு எடுத்திருக்கிறார்கள். ஆனால் அப்போதும் மன்னிப்பு கேட்க முடியாது என்று மணிமேகலை நிகழ்ச்சியை விட்டே வந்து விட்டாராம். அதனால் தான் கடந்த சனிக்கிழமை 14ஆம் தேதிக்கான எபிசோடில் பாதிக்குப் பிறகு மணிமேகலை இல்லாமலேயே தர்ஷன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

17 ஆம் தேதியான சனிக்கிழமை மணிமேகலை பாதிக்கு பிறகு இல்லை என்று ரசிகர்கள் அதைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வந்த நிலையில் மணிமேகலை சனிக்கிழமை மாலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் முதலில் போஸ்ட் போட்டுவிட்டு பிறகு தன்னுடைய youtube சேனலில் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதுதான் பிரச்சனை நடந்ததற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால் பிரியங்கா இது பற்றி இன்னும் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. பிரியங்கா என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் பிரியங்காவை அதிகமானோர் திட்டி தீர்த்து வருகிறார்கள். ஆனால் அவர் சுற்றுலாவுக்கு சென்று இருக்கிறார். மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனையில் யார் மீது தவறு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீங்க? உங்க கருத்தை தெளிவா சொல்லுங்க பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+