Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த வார்த்தை சொல்லி மிரட்டுனாங்க.. பிடிச்ச வேலையே வேண்டாம்னு சொல்ல வைத்தாங்க! கண்ணீரோடு மணிமேகலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் இருந்து அதிரடியாக வெளியேறினார். இப்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருக்கிறார். இந்த நிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது மணிமேகலை தனக்கு பிடித்த வேலையை வேண்டாம் என்று சிலர் சொல்ல வச்சாங்க என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

சோசியல் மீடியா பக்கத்தில் பலருக்கும் பரிச்சயமான மணிமேகலைக்கு பெரியதாக அறிமுகமே தேவை இல்லை. ஆரம்பத்தில் கல்லூரி படிக்கும் போது ஸ்டார் மியூசிக்கில் தொகுப்பாளினியாக வேலைக்கு சேர்ந்து எட்டு வருடங்களுக்கும் மேலாக அதே சேனலில் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அந்த நேரத்தில் டான்ஸ் மாஸ்டர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

sarigamapa zee tamil VJ Archana 4

காதல் திருமணம்

இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் இருவருடைய வீட்டிலும் இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதம் சொல்லவில்லை. இதனால் ஆரம்பத்தில் திருமண வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்ட மணிமேகலை அந்த நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியில் கணவரோடு சேர்ந்து போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்குப் பிறகு விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

மணிமேகலைக்கு கிடைத்த பிரபலம்

அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக மணிமேகலை நடந்து கொண்டது பலராலும் பாராட்டப்பட்டது. ஒவ்வொரு வாரமும் இவருடைய பெர்பார்மன்ஸ்க்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. ஆனால் கடந்த ஐந்தாவது சீசனில் தொகுப்பாளினியாக மணிமேகலை கலந்து கொண்டு நிகழ்ச்சி முடிவடைவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு அதிரடியாக அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார்.

மணிமேகலை விலகல்

அப்போது தான் விலகுவதற்கு காரணம் பிரியங்கா தான் என்று மறைமுகமாக போஸ்ட் போட்டிருந்தார். பிரியங்கா பெயரை மணிமேகலை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ஆனால் அவரை தான் மணிமேகலை சொல்கிறார் என்று அனைவருக்குமே தெரிந்திருந்தது. இதனால் மணிமேகலைக்கு சப்போர்ட்டாக பலர் குரல் கொடுத்தனர். ஆனால் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்திருந்தனர்.

காணாமல் போன மணிமேகலை

மணிமேகலை விஜய் டிவியை விட்டு விலகிய பிறகு சில மாதங்களாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இப்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலந்து கொண்டிருக்கிறார். மீண்டும் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அவர் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவருக்கு விருதுகள் கிடைத்தது. அப்போது எனக்கு சப்போர்ட் என்னுடைய கணவர் உசேன் மட்டும்தான், உசேன் இல்லை என்றால் நான் இல்லை என்று உருக்கமாக பேசியிருந்தார்.

பயங்கரமான மிரட்டல்

மணிமேகலை மேடை கிடைக்கும் இடமெல்லாம் தன்னுடைய கணவர் குறித்து பேசி இருக்கிறார். ஆனால் இப்போது அவர் பேசும்போது நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவு எடுத்தேன், எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த வேலையை என் வாயாலேயே வேண்டாம்னு சொல்ல வச்சாங்க. அப்பகூட சிலர் நீ இந்த இடத்திலிருந்து வேலையை விட்டு வெளியே போனால் அதற்குப் பிறகு நீ தொகுப்பாளினியாக முடியாதுன்னு சொன்னாங்க.

ரசிகர்கள் கேள்வி

உன்னுடைய கேரியர் முடிஞ்சிடும்னு சொன்னாங்க ஆனாலும் நான் என்னுடைய சுய கௌரவத்திற்காக எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வெளியே வந்தேன். அதற்குப் பிறகு நான் எடுத்த முடிவு சரி என்று முதலில் சொன்னது என்னுடைய உசேன் தான். இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்கு பிறகு நான் ஒரு பொங்கல் பங்க்ஷனில் கலந்து கொண்டேன். அப்போ பார்க்கும் ரசிகர்கள் எல்லாரும் என்னிடம் கேட்டது நீங்க அடுத்து எந்த சேனலுக்கு வருவீங்க? அடுத்து எந்த ஷோ பண்ண போறீங்க என்று தான் கேட்டாங்க.

sarigamapa zee tamil VJ Archana 4

கதறி அழுத மணிமேகலை

அப்போதான் நான் ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். நேரா வீட்டுக்கு வந்து அவ்ளோ அழுதேன். இதற்கு முன்னாடி நான் எல்லாத்தையும் தூக்கி போடணும்னு முடிவு எடுத்த போது கூட அழவில்லை. ஆனால் பிறகு தான் ரொம்பவும் அழுதேன். ஆனால் அடுத்த நாளே எனக்கு இப்போ நான் இருக்கும் ஷோ வாய்ப்பு கிடைத்தது. அதனால் இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை இங்க எல்லாம் கடந்து போகும் என்று மணிமேகலை பேசிக்கொண்டு இருந்தார்.

மாகாபா ரியாக்ஷன்

அந்த நிகழ்ச்சியில் மாகாபாவும் கலந்து கொண்டிருக்கிறார். மாகாபா பிரியங்காவிற்கு சப்போர்ட்டாக மணிமேகலைக்கு செருப்பு, சொம்பு காட்டுவது போன்று இன்ஸ்ட்டாவில் ஸ்டோரி வைத்திருந்தார். ஆனால் இப்போது மணிமேகலை பேசப்பேச மாகாபா எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க அவருடைய முகத்துக்கும் க்ளோசப் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடியோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+