போயும் போயும் சொத்துக்காக? பிரியங்கா கிட்ட இல்லாத கோடியா? மணிமேகலைக்கு போன மெசேஜ்? இது எப்போ? செமல்ல
சென்னை: பிரியங்காவை உச்சத்தில் வைத்துதான் விஜய் டிவி பார்க்கிறது. விஜய் டிவி மீது மிகப்பெரிய நம்பிக்கையை பிரியங்காவும் வைத்திருக்கிறார். அதனால் பிரியங்கா லண்டன் போனாலும்கூட, மாதம் 10 நாள் சென்னையில் ஷூட்டிங் நடத்தி தந்துவிட்டு செல்லலாம். ஆனால் அவர் லண்டன் போவதற்கான வாய்ப்பு குறைவுதான் என்று மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "சர்ச்சை என்றாலே பிரியங்கா என்றாகிவிட்டது.. வயசில் மூத்தவரை திருமணம் செய்தாரா? பணத்துக்காக திருமணம் செய்தாரா? இது கட்டாய திருமணமா? திருமணத்துக்கு பிறகு லண்டனில் செட்டில் ஆகிவிடுவாரா? என்றெல்லாம் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்..

பிரியங்காவை பொறுத்தவரை, கலகலவென்று இருப்பவர்.. படிப்படியாக உயர்ந்து காம்பியரிங் பணிக்கு வந்தார்.. பல சேனலில் பணியாற்றினாலும் அவர் பிரபலமானது விஜய் டிவியில்தான்.. பிரியங்காவின் காமெடி, அவர் பேசும் தோரணை, மகாபாவுடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டி, இதெல்லாம் மக்களிடம் பிரபலமானது. எனவே, விஜய் டிவி பிரியங்காவை நிரந்தர தொகுப்பாளினியாக வைத்து கொண்டது.
மன அழுத்தம் அதிகமானது
2016-ல் விஜய் டிவியில் பணியாற்றிய பிரவீன் என்பவரை திருமணம் செய்தார்.. ஆனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்தது.. அந்த நேரத்தில்தான் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகமானது.. பலருக்கும் வேலைவாய்ப்புகள் போனது..
அப்போது பிரியங்கா சோர்ந்து காணப்பட்டார்.. மனஅழுத்தத்திலும் இருந்தார்.. முன்புபோல் பிரியங்கா கலகலப்பாக இல்லாததை கண்டு, அவரது நட்பு வட்டாரம் என்ன ஏதென்று விசாரித்து, ஊக்கம் தந்துள்ளது.. அப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுவருமாறு விஜய் டிவியே பிரியங்காவுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது..
பிக்பாஸ் நிரூப்புடன் காதல்
பிக்பாஸ் வீட்டில் பலருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும், மன அழுத்தத்திலிருந்தும் விடுபட முடியும் என்று நட்பு வட்டாரம் பிரியங்காவுக்கு அறிவுறுத்தியது.. அதன்படியே பிக்பாஸ் வீட்டில் பாவனி, அமீர், நிரூப் எல்லாம் என பலரும் பிரியங்காவுக்கு நட்பானார்கள். அப்போது அமீர் பாவனி காதலுக்கு உதவியிருக்கிறாராம்.
பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது பிரியங்காவுக்கு பாசிட்டிவ் மோடு ஏற்படுத்தி தந்தது என்றாலும், குரூப்பிசம் செய்வதாக பிரியங்கா மீதான விமர்சனங்களும் அதிகமானது.. இதனால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சென்றது.
பிரியங்கா இயல்பாகவே எல்லோருடனும் ஜாலியாக பேசக்கூடியவர். அந்தவகையில் நிரூப்பிடம் நட்பாக பேசினார். உடனே நிரூப்புடன் பிரியங்காவுக்கு காதலா? என்று சிலர் கொளுத்தி போட்டார்கள். ஆனால், நிரூப்பே உடனடியாக இதனை மறுத்து, தங்கள் நட்பை தெளிவுபடுத்தியிருந்தார்.
மகளுக்கென ஒரு வாழ்க்கை
இதற்கு பிறகுதான் பிரவீனுடன் விவாகரத்து ஆகிவிட்டது என்பதே வெளியே தெரிந்தது.. அப்போதிருந்தே மகளின் நிலைமையை நினைத்து பிரியங்கா அம்மா கவலைப்பட்டார்.. மகளுக்கென்ற ஒரு வாழ்க்கை வேண்டும் என்று அழுத்தம் தர துவங்கினார். ஏற்கனவே திருமணமாகி நொந்து போனதால், இன்னொரு கல்யாணம் வேண்டாம் என்று பிரியங்கா தவிர்த்தார்.. மாறாக, வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க துவங்கினார். அப்போதுதான் வசியுடன் நட்பு கிடைத்தது..
வீட்டில் இருக்கும்போதெல்லாம் தன்னுடைய தம்பி குழந்தையே தனக்கு உலகம் என்று வாழ்ந்தார்.. அப்போதுதான், தானும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பிரியங்காவுக்கு வந்துள்ளது.. ஒருபக்கம் அம்மாவின் அட்வைஸ், மறுபக்கம் குழந்தை ஏக்கம் சேர்ந்து, திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்.. தன்னுடன் 6 வருட காலம் நட்பாக பழகிவரும் வசி குறித்து வீட்டில் சொல்லி சம்மதம் பெற்றார்.
பணத்துக்காக நடந்த திருமணமா
வயது மூத்தவர், பணத்துக்காக வசியை திருமணம் செய்து கொண்டதாக பலரும் சொல்கிறார்கள்.. அது தவறு.. பிரியங்காவிடம் இல்லாத பணமா? வயது என்பதே இப்போது யாரும் பார்ப்பதில்லை.. சம வயதில் திருமணம் செய்தால், அடிச்சிக்கிட்டு உருள வேண்டியதுதான்.. இரு தரப்பிலுமே ஈகோ இருக்கும்.. புரிதலும் இருக்காது.
ஆனால், வசியுடன் 6 வருட நட்பு என்பதால், நல்ல புரிதல் இருவருக்குள்ளும் இருந்துள்ளது.. அன்புதான் இருவருக்குள்ளும் பிரதானமாக இருந்துள்ளது. இரு வீட்டினரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்துள்ளது.
பிரியங்காவை உச்சத்தில் வைத்துதான் விஜய் டிவி பார்க்கிறது. விஜய் டிவி மீது மிகப்பெரிய நம்பிக்கையை பிரியங்காவும் வைத்திருக்கிறார். அதனால் பிரியங்கா லண்டன் போனாலும்கூட, மாதம் 10 நாள் சென்னையில் ஷூட்டிங் நடத்தி தந்துவிட்டு செல்லலாம். ஆனால் அவர் லண்டன் போவதற்கான வாய்ப்பு குறைவுதான்.. பிரியங்காவுக்கு முழு சுதந்திரம் தந்துள்ளதால், எதுவானாலும் பிரியங்காவின் சாய்ஸ் என்று வசியும் சொல்லிவிட்டார்.
மணிமேகலை - பிரியங்கா
தன்னுடைய திருமணம் குறித்து மணிமேகலைக்கும் பிரியங்கா தகவல் அனுப்பியதாக சொல்கிறார்கள்.. எதையுமே மனதில் வைத்துக் கொள்ளாதவர் பிரியங்கா.. அதனால் மற்றவர்களை போலவே, மணிமேகலையையும் இன்வைட் செய்ததாக தெரிகிறது.. எப்படியும் மணிமேகலையும் பழைய விவகாரங்களை மறந்துவிட்டு, பிரியங்காவுடன் நட்பாவார் என்றே நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications