பாரதிராஜா வீட்டில் ஒரு மாதமாக நடந்த சம்பவம்.. மனோஜ் மனைவியால அழ முடியல! பிரபலம் வருத்தம்
சென்னை: இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் கடந்த வாரத்தில் காலமானார். அவர் குறித்து அவருடைய நெருங்கிய தோழி பல தகவல்களை பேசி இருக்கிறார். ஒரு மாதமாக மனோஜ் வீட்டில் என்ன நடந்தது என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
கடந்த வாரத்தில் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி ஒன்று வந்தது. இயக்குனர் பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் பாரதிராஜா இறந்து விட்டார் என்று செய்திகள் வந்தபோது பலர் நம்ப மறுத்தனர். ஆனால் அது உண்மையான செய்தி என்று பிறகு நிரூபணம் செய்யப்பட்டதும் ரசிகர்கள் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வந்தனர்.

மனோஜின் வருத்தம்
பாரதிராஜாவின் ஒரே மகன் 48 வயதில் இறந்தது பலரையும் வருத்தம் அடைய வைத்தது. தன்னுடைய மகனின் உடலை பார்த்து பாரதிராஜா கதறி அழுதது பார்ப்போரையும் கண்கலங்க வைத்தது. மனோஜ் பாரதிராஜா தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் போன்ற ஒரு சில ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தார்.
ஆனால் தான் இயக்குனராக வேண்டும் என்பதுதான் கனவு என பல பேட்டிகளில் பேசி இருந்தார்.
உறவினர்கள் மறுப்பு
இந்த நிலையில் அவருடைய கனவு நிறைவேறுவதற்கு முன்பு அவருடைய வாழ்க்கை முடிவடைந்து விட்டது. ஆனாலும் அவருடைய இறப்பு குறித்து பல்வேறு வதந்திகளும் சர்ச்சைகளும் பரவி வருகிறது. மனோஜ் தான் சிறந்த இயக்குனராக முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்ததாகவும் அதனால் அவருக்கு இதய நோய் வந்துவிட்டது என்றும் சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் அவருடைய நெருங்கிய உறவினர்கள் இதை மறுத்திருக்கிறார்கள்.
ஒரு மாதமாக பிரச்சனை
அதுபோல மனோஜிற்க்கு நெருங்கிய தோழியான வைஷ்ணவி என்பவர் பேசுகையில் மனோஜ் வீட்டில் அவருடைய இறப்புக்கு நாங்கள் போயிருந்த போது அவருடைய குடும்பத்தினரை எங்களால் பார்க்கவே முடியவில்லை. அவருடைய மனைவியின் கண்ணில் இருந்து கண்ணீரே வரவில்லை. அவரால் அழ கூட முடியாத நிலையில் தான் இருந்தார்.
பாசமான தந்தை
காரணம் மனோஜ்க்கு ஒரு மாதமாக உடல்நிலை பிரச்சனை இருந்து வந்தது. அவருக்கு திடீரென ஹார்ட் அட்டாக் வந்ததும் அவரை ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்திருந்தார்கள். ஆனால் அவர் எப்படியும் மீண்டு வந்து விடுவார் என்ற நம்பிக்கை அவருடைய குடும்பத்திற்கு இருந்தது. அவருடைய குழந்தைகள் இப்போதுதான் டீன் ஏஜில் இருக்கிறார்கள். இந்த வயதில் தந்தையின் அரவணைப்பும் அவருடைய துணையும் கண்டிப்பாக பெண் பிள்ளைகளுக்கு தேவை.
எதிர்பாராத இழப்பு
அதனால் அவருடைய மனைவி அவர் எப்படியும் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையோடு இருந்தார். கடைசியில் அவருடைய இழப்பை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த அதிர்ச்சியில் தான் அவர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்க்கும்போது எங்களுக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. மனைவி மீது மனோஜ்க்கு அவ்வளவு பாசம் உண்டு. அதுபோல மனோஜின் குழந்தைகள் மற்றும் மனைவியும் அவர் மீது அதிகமான பாசம் வைத்திருந்தார்கள்.
தாங்க முடியாத வலி
அவர்கள் இனி இந்த இழப்பில் இருந்து எப்படி வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு மாத காலமாக ஹாஸ்பிடலுக்கும் வீட்டிற்கும் தான் அலைந்து கொண்டிருந்தார்கள். ஆனால் எல்லாம் சரியாகி விட்டது என்று நினைத்திருந்த நேரத்தில் கடைசியில் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாக போய்விட்டது என்று மனோஜின் தோழி உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications