சூர்யா, ஆர்ஜே பாலாஜியை மோசமாக திட்டிய மன்சூர் அலிகான்.. ரவுண்ட் கட்டும் நெட்டிசன்கள்
சென்னை: சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற கருப்பு படத்தை சுற்றி இப்போது ஒரு புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது. படத்தில் தான் நடித்த காட்சிகள் வரவில்லை என்று மன்சூர் அலிகான் சூர்யா மற்றும் ஆர் ஜே பாலாஜி நேரடியாக விமர்சித்து பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சென்னையில் நடைபெற்ற ஆல் பாஸ் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மன்சூர் அலிகான் கருப்பு படத்தில் தன்னை ஏமாற்றியதாக கூறி இருக்கிறார். அதில் பேசும்போது, ஆர் ஜே பாலாஜி உடன் நான் கருப்பு படத்தில் நடிக்கும் போது உங்களுடைய காட்சி அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று சொன்னாரு. அந்த படத்தில் இடம் பெற்ற "நாங்க நாலு பேரு எங்களுக்கு பயம் கிடையாது" பாடலுக்கு வில்லன் நடிகர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிருந்தேன். அந்த பாட்டுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டு தான் ஆடி இருந்தேன்.

மகன்கள் கேட்ட கேள்வி
அந்த சூட்டிங் பார்ப்பதற்கு என்னுடைய மகன்களை கூட கூட்டிட்டு போயிருந்தேன். ஆனால் படம் வெளியான போது அந்த காட்சிகள் எல்லாம் இல்ல. அதை பார்த்துட்டு என்னுடைய பசங்க கூட என்னப்பா நீங்க நடிச்ச காட்சிகள் எல்லாம் வரல என்று கேட்கிறார்கள். அதற்கு நாம என்னப்பா பண்ண முடியும்? என்று சொல்லிட்டேன். படத்தில் அந்த காட்சிகள் இல்லை என்று இது பற்றி தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டபோது பிறகு யூடியூப்பில் வரும் என்று சொன்னார்கள்.
ஆனால் யூடியூப்பில் வரும் போதும் அந்த காட்சிகள் இல்லை. அது பற்றி தயாரிப்பு நிறுவனத்துடன் கேட்டபோது அந்த காட்சிகளை அப்படியே விட்டு விட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். இதுதான் என்னுடைய கோபத்தை ரொம்பவும் அதிகம் ஆக்கியது. நான் கஷ்டப்பட்டு நடித்த ஒரு நடிகரின் பங்களிப்பில் ஏன் மண்ணை அள்ளி போடுறீங்கன்னு எனக்கு கோபமாக வருகிறது. சினிமாவில் ஹீரோவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது இயல்புதான் என்றாலும் அதற்காக மற்ற கலைஞர்களின் உழைப்பை முழுமையாக மறைத்து விட வேண்டுமா? என்பதுதான் தனது கேள்வி என்று அவர் பேசி உள்ளார்.
சூர்யாவுக்கு அதிக பில்டப்
சூர்யாவுக்கு 1500 ஷார்ட் பில்டப் கொடுத்திருக்கிறார்கள். என்னை டம்மியாக நிற்க வைத்து இருக்கிறார்கள். எனக்கு எந்த கதாபாத்திரத்தையும் கொடுக்க வேண்டாம் ஆனால் நான் நடித்ததை ஏன் மறைக்க வேண்டும்? நான் சுமார் 350 படங்களுக்கு மேல நடித்திருக்கிறேன் இத்தனை வருட அனுபவம் உள்ள எனக்கே இந்த நிலை இப்படி என்றால் புதிதாக சினிமாவுக்கு வருகிற கலைஞர்களின் நிலை என்னவாக இருக்கும்? எனக்கும் இன்னும் வயது இருக்கிறது இன்னும் 100 படங்கள் கூட நடிப்பேன். அதில் என்னுடைய திறமையை வெளிப்படுத்துவேன். ஆனால் என்னை போன்ற கலைஞரை ஏன் இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்று ஆதங்கமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
மேலும் தன்னை நட்சத்திர அந்தஸ்துக்கு கொண்டு சென்ற கேப்டன் பிரபாகரன் படத்தை பற்றி குறிப்பிட்ட அவர் அந்த படத்தில் பணியாற்றிய நடிகர் மற்றும் இயக்குனர்களுடன் தற்போதைய தலைமுறையை ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார். இந்த படத்தில் கிடைத்த அனுபவத்தையும் ஒப்பிட்டு கேள்வி கேட்டு இருக்கிறார். அப்போதைய இயக்குனர்கள் இதுபோல கிடையாது என்று ஆர் ஜே பாலாஜி கடுமையாக விளாசி இருக்கிறார்.
சூர்யாவை தாக்கி பேச்சு
அதோடு சூர்யா பெயரை குறிப்பிடாமல், சில ஹீரோக்கள் அளவுக்கு அதிகமாக சொத்து வாங்கி போட்டு இருக்கிறார்கள். அதை கணக்கு காட்டுவதற்காக அகரம் பவுண்டேஷன் என்று ஒன்றை நடத்தி நல்ல பெயர் வாங்கி விடுகிறார்கள். நாங்க அப்படி எல்லாம் செய்யவில்லை என்று சூர்யாவை தாக்கி பேசியிருக்கிறார். இதுதான் இப்போது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
