மாறன் வர்றாரு.. மியூசிக்கே பின்னி எடுக்குதே.. வேற லெவலுக்கு மாறும் நாம் இருவர் நமக்கு இருவர்!
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் லேட்டஸ்ட் அப்டேட் தான் இப்போ செம வைரலாகியுள்ளது. வேற லெவல் அண்ணா என்று மிர்ச்சி செந்திலை அத்தனை பேரும் பாராட்டித் தள்ளுகின்றனர்.
யாரும் எதிர்பாராத திருப்பங்களுடன் கதை நகர்வதை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு பக்கா சினிமாவுக்கேற்றார் போல இதன் ஸ்கிரிப்ட் நாளுக்கு நாள் கலக்கிக் கொண்டுள்ளது.
ஒரு கொலையை வைத்தே ஒரு மாதத்தை கடத்தி விட்ட நிலையில் இப்போ புது என்ட்ரி கொடுத்து பட்டையை கிளப்பிவிட்டார்கள்.

சஸ்பென்ஸ் தாங்கல
சஸ்பென்ஸ் வைக்கலாம் அதுக்காக இப்படியா ரசிகர்களை புலம்ப வைக்கிறது என பலர் புலம்பி வருகிறார்கள் .அதுவும் ஒரு மாதமாக தொடர்ந்து ஒரே கதைக்களத்தில் புதுப்புது திருப்பத்தை கொண்டு வந்து கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இப்போ யாரும் எதிர்பார்க்காத ஒரு கேரக்டரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் .இதுவரைக்கும் இந்த சீரியலுக்கும் டைட்டிலுக்கும் சம்பந்தமே இல்லையே என்று நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் இப்போ இதுக்காகத்தான் இந்த சீரியலுக்கு இப்படி தலைப்பு வைத்திருக்கிறார்களா என்று கூறிவருகின்றனர்.

இவர் நல்லவரா கெட்டவரா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் தற்போது இரண்டாவது சீசனாக இருந்தாலும் இதற்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட சீசனில் இதில் கதாநாயகனாக நடிக்கும் செந்தில் இரண்டு கேரக்டரில் நடித்திருப்பார். ஆனால் இரண்டாவது சீசனில் மாயன் என்கிற ஒரு கேரக்டரில் மட்டும் தான் இவ்வளவு நாளாக காட்டியிருக்கிறார்கள் .ஆனால் இப்போது மாறன் என்ட்ரி என்று செந்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்.

இன்னும் முடியலயா திருப்பம்
இனி மாறனின் ஆட்டம் ஆரம்பம் என்று இவர் போட்ட போஸ்ட் பார்த்து அப்போ இவருக்கு ஜோடி யாரு என்று ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர் . அதுமட்டுமல்லாமல் முத்துராசுவை கொலை செய்தது யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காத நிலையில் இவரின் புதுவரவு கதையை மாற்றுமா அல்லது கதைக்கு புதுப்பொலிவு கிடைக்குமா என்று ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர் .அதுவும் மாறனின் எபிசோடுகள் எப்போது ஒளிபரப்பாகும் என்று பலர் கமென்ட்ஷ்களில் கேட்டு வருகின்றனர்.

முத்து ராசுவை சுட்டது யாரு
இப்ப இருக்கிற சூழ்நிலையில் முத்துராசுவை கொலை செய்தது காயத்ரி தானா என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் மாறனின் கேரக்டர் உள்ளே வருவதால் இந்த வீட்டிற்குள் மேலும் பிரச்சினைகள் ஏற்படுமா இல்லை இருக்கும் பிரச்சனைகளை இவர் தீர்ப்பாரா என்று பலர் கேட்டு வருகின்றனர் .அதுமட்டுமல்லாமல் மாறனுக்கும் இந்த குடும்பத்திற்கும் என்ன தொடர்பு ஒருவேளை மாயனின் சகோதரனாக தான் மாறன் இருப்பானா ?? ஆனா இவ்வளவு நாளா இந்த கதையில இதை சொல்லவே இல்லையே !!என்று மண்டையை பிய்த்துக்கொண்டு ரசிகர்கள் குழம்புகிறார்கள்.

பாடியை கண்டுபிடிங்க
என்ன இருந்தாலும் சீக்கிரமா முத்துராசுவை கொன்னது யாரு என்று கண்டுபிடித்து கதையை கொஞ்சம் சுவாரசியம் கூட்டுங்கள் என்று கலாய்க்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எத்தனை நாளைக்குத்தான் இவரா அவரா என்று ப்ரோமோ போட்டு வெறுப்பு ஏத்துவீங்க .சீக்கிரத்தில் சொல்லுங்க ஏழு பேரு சுட்டும் முத்து ராசுவின் உடலை இன்னும் கண்டுபிடிக்காத போலீஸ் டெய்லியும் வந்து அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுகிட்டா இருக்காங்க என்று கேள்விகளால் துளைத்து எடுத்து வருகின்றனர். ரசிகர்களின் கேள்வியை பார்த்தால் இது சீரியல் என்பதையே மறந்து விட்டார்கள் போல . இப்படி ஏதாவது புது திருப்பங்கள் வைத்தால் தானே வருடக்கணக்காக சீரியலை ஓட்ட முடியும் என்று பலர் மைண்ட் வாய்ஸ்னு கமெண்டில் தெரிவித்துவிட்டனர்.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications