நீயா நானாவில் குத்தாட்டம் போட்ட இயக்குனர் "மாரி செல்வராஜ்”.. கோபிநாத் செய்த "செயல்”
சென்னை: பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் மாரி செல்வராஜ்.
இவர் சில வருடங்களுக்கு முன்பு நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பிரபலமாக கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது அவர் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளத்தில் இப்போது அதிகமாக பேசப்படும் ஒரு நபராக இயக்குனர் மாரி செல்வராஜ் மாறி இருக்கிறார். காரணம் அவர் சமீபத்தில் "தேவர் மகன்" திரைப்படத்திற்காக கொடுத்த கமெண்ட் தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஆதரவாகவும் பலர் அதற்கு எதிராகவும் பேசி வருகின்றனர்.
ஏற்கனவே மாரி செல்வராஜ் சமீபத்தில் இயக்கி விரைவில் வெளியாக இருக்கும் "மாமன்னன்" திரைப்படம் குறித்தும் அடிக்கடி அப்டேட் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் கலந்து கொண்ட வீடியோ கிளிப்புகள் தற்போது வைரலாகி வருகிறது.
ஒரு இயக்குனராக வெளியே தெரிவதற்கு முன்பு ஒரு துணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போது நீயா நானா நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அந்தப் வார நீயா நானா நிகழ்ச்சியில் "இளம் தலைமுறையினர் ரசிக்கும் நடனங்கள் எது" என்ற வகையில் விவாதம் நடத்தப்பட்டு இருக்கிறது.

அதில் சிறப்பு விருந்தினராக மாரி செல்வராஜ் மற்றும டான்ஸ் மாஸ்டர் சாண்டி போன்றோர் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது "அனேகன்" திரைப்படத்தில் இடம் பெற்ற "டங்காமாரி ஊதாரி" என்ற பாடலுக்கு இரண்டு இளைஞர்கள் டான்ஸ் கொண்டிருக்கின்றனர். அப்போது அதை பார்த்து பாராட்டிய மாறி செல்வராஜ் அவர்களின் டேன்ஸ் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது கோபிநாத் நீங்க இந்த பாட்டுக்கு ஒரு டான்ஸ் போடுங்க என்று மாரி செல்வராஜ் மற்றும் சாண்டி மாஸ்டரை மேடையில் ஏற்ற, இருவரும் அந்த இரண்டு இளைஞர்களோடு டான்ஸ் ஆடுகின்றனர். ஒரு கட்டத்தில் டான்சின் பரவசமான மாரி செல்வராஜ் ஆக்ரோஷமாக டான்ஸ் ஆடி கொண்டிருக்க சேர்ந்து ஆடிக் கொண்டிருந்த சாண்டி மாஸ்டர் கூட தன்னுடைய டான்ஸ்ஸை நிறுத்திவிட்டு இவருடைய டான்ஸை பார்த்து பாராட்டியபடி கை தட்டிக் கொண்டிருக்கின்றனர். அதுபோல கோபிநாத் மாரி செல்வராஜை கட்டிபிடித்து பாராட்டி இருக்கிறார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் பலரும் மாரி செல்வராஜ் டான்ஸை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இவருக்குள் இத்தனை திறமைகள் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும்போது அன்றைய நீயா நானா நிகழ்ச்சியில் அவர் தன்னுடைய தந்தை ஒரு டான்ஸ் கலைஞர் என்றும் கூறியிருக்கிறார்.
திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் ஆடப்படும் "சம்படி ஆட்டம்" கலையை ஆடிக் கொண்டிருந்தாராம். ஆரம்ப காலகட்டத்திலே அந்த மாதிரி ஆடுபவர்களுக்கு மரியாதை இல்லாததால் அந்த டான்ஸை விட்டு விட்டாராம். ஆனால் அந்த ஒரு கலை என்னுடைய உடம்பிலும் இருக்கிறது என்று அன்றைய எபிசோடில் மாரி செல்வராஜ் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vintage Maari ❤️ pic.twitter.com/e45cnYEe83
— பாக்டீரியா (@Bacteria_Offl) June 25, 2023
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications