மாரிமுத்து சூட்டிங் ஸ்பாட்டுல சண்டை போட்டாரு.. கடைசியா நடந்தது இதுதான்.. திருச்செல்வம் எமோஷனல்
சென்னை: மறைந்த நடிகர் மாரிமுத்து பற்றி அவருடைய நினைவுகளை எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பகிர்ந்திருக்கிறார்.
ஆரம்பத்தில் மாரிமுத்து எப்படி எதிர்நீச்சல் சீரியலில் தன்னுடைய நடிப்பை தொடங்கினார் என்பது பற்றியும், அவரோடு அந்த சீரியலில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் இயக்குனர் திருச்செல்வன் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அத்தோடு நடிகர் மாரிமுத்துவின் மறைவிற்குப் பிறகு சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருக்கிறது என்பது பற்றியும் தன்னுடைய வருத்தத்தோடு இயக்குனர் திருச்செல்வம் தெரிவித்து இருக்கிறார்.
யாருக்கு நிலைமை எப்போது எப்படி ஆகும் என்று சொல்ல முடியாது என்று கூறுவார்கள். அது போல இன்று இருப்பார் நாளை இல்லை என்று சொல்வது போல தான் மனித வாழ்க்கை நிலை இல்லாமல் இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் மாரிமுத்து திடீரென்று மரணம் அடைந்தது பல ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நடிகர் மாரிமுத்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெரிய அளவில் புகழை வாங்கி கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல் தான் இந்த சீரியலில் குணசேகரன் கேரக்டரில் மாரிமுத்து நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்து இருந்தார் என்பதுதான் சரியாக இருக்கும். அந்த அளவிற்கு அந்த கேரக்டராகவே ரசிகர்களின் மனதில் பதிந்து கொண்டிருந்தார்.
ஆனால் காலம் அவரை அழைத்து சென்றது. இந்த நிலையில் அவருடைய நினைவுகள் குறித்து இயக்குனர் திருச்செல்வம் சமீபத்தில் பேசியிருக்கிறார். அதில் மாரிமுத்து சார் முதலில் இந்த சீரியலில் நடிக்கும் போது சீரியலில் நான் நடித்தால் எனக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து போய்விடும் என்று பயந்து கொண்டு இருந்தார். பிறகு கதை குறித்து அவரிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசிக் கொண்டிருந்தோம் அப்போது அவருக்கு கதை பிடித்து போய்விட்டது.
ஆனால் பேமெண்ட் விஷயத்தில் சேனல் தரப்பிற்கும் அவருக்கும் சிறு வேறுபாடு இருந்தது. அதனால் பார்ப்போம் என்று நாங்களும் வந்து இருந்தோம். அவரும் பார்த்து சொல்லுங்கள் என்று கூறியிருந்தார். அதற்குப் பிறகு ஒரு வாரம் ஆகி இருந்தது என்னால் அவரை விட முடியவில்லை. அதுபோல அவருக்கும் இந்த சீரியலில் ஒரு பிடிப்பு ஏற்பட்டது. அதனால் பிறகு சில திருத்தங்கள் செய்து அவர் சீரியலில் நடிப்பதற்கு சரி என்று ஒத்துக் கொண்டார்.

ஆரம்பத்தில் சீரியலில் அவர் நடிக்கும் போது சில நடிகர்களோடு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் சரியாக தோளை நிமிர்த்தி நின்று டயலாக் பேசமாட்டேன் என்கிறார்கள் அப்படி பேசவில்லை என்றால் ஒரு ஈர்ப்பு வராது என்று என்னிடம் அடிக்கடி சொல்லி இருக்கிறார். அந்த விஷயத்துக்காக அவர் கோபப்பட்டு அந்த நடிகர்களோடு சண்டையும் போட்டு இருக்கிறார். பிறகு நானும் அந்த நடிகர்களுக்கு புரிய வைத்தேன். அவர்கள் இதற்கு முன்பு நடித்த சீரியலில் அந்த மாதிரி பழக்கப்பட்டு விட்டார்கள். பிறகு நான் சொல்லி புரிய வைத்ததும் அவர்கள் அதற்கு பிறகு சரியாக நடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதற்குப் பிறகு எந்த பிரச்சனையும் இல்லை. மாரிமுத்து சார் இருந்தால் சூட்டிங் ஸ்பாட்டில் பெரிய அளவில் கலகலப்பாக இருக்கும். அவர் எப்போதும் கத்தி பேசிக்கொண்டு இருப்பார். ஆனால் அவருடைய மறைவிற்கு பிறகு சூட்டிங் ஸ்பாட் ரொம்பவே அமைதியாக மாறிவிட்டது. அவர் மறைந்த அடுத்த நாள் சூட்டிங் ஸ்பாட்டில் நான்கு மணி நேரமாக யாருமே எதுவுமே பேசவில்லை. அப்படியே இருந்திருந்தோம். இப்போதும் அவர் அமர்ந்திருந்த இடம் அவர் நின்று பேசிய இடம் குறித்து நாங்கள் தினமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். அவருடைய நினைவுகள் அந்த வீடு முழுக்க இருக்கிறது என்று அந்த பேட்டியில் இயக்குனர் திருச்செல்வம் உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications