ஜாய் கிறிஸ்டில்லா நேற்று கொடுத்த புகார்.. இன்று மாதம்பட்டி ரங்கராஜனின் முதல் மனைவி ஸ்ருதி வெளியிட்ட போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவருடைய இரண்டாவது மனைவி ஜாய் கிறிஸில்டா (Joy Crisilda), மாநில மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. திருமணம் செய்து விட்டு ஏமாற்றி விட்டார் என்ற குற்றச்சாட்டுகளை ஜாய் கிறிஸில்டா சுமத்தியிருக்கும் நிலையில், ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு இப்போது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mathampatti Rangaraj Joy Crisilda Cook with Comali Vijay TV

ஜெய்கிறிஸில்டாவின் அதிர்ச்சி புகார்

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஜெய்கிறிஸில்டாவுக்கு இடையே குடும்பப் பிரச்சனை பூதாகரமாக வெடித்தபோது, ஏற்கனவே குடும்ப நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில், ஜாய் கிறிஸில்டாவுக்கு ஆதரவாக நீதிமன்றம் சில முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது. ஜாயுடன் உள்ள உறவு பற்றி மாதம் பட்டி மறுக்கவில்லை இதனால் ஜாய் மாதம்பட்டி ரங்கராஜன் பற்றி சோசியல் மீடியாவில் பேசுவதை தடுக்க முடியாது என்று நீதிபதி கூறியிருந்தார்.

இந்த நிலையில், ரங்கராஜ் மீது ஜெய்கிறிஸில்டா நேற்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்தது, இந்த விவகாரத்தின் வீரியத்தை அதிகரித்துள்ளது. அதுபோல புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த ஜாய் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அப்போது எனக்கும் என்னுடைய குழந்தைக்கு ரங்கராஜன் தான் பொறுப்பு, என்னுடைய குழந்தைக்கு என்ன நடந்தாலும் அதற்கு அவர் மட்டும்தான் பொறுப்பு என்று அழுத்தமாக சொல்லியிருந்தார். அதோடு உங்களை யாராவது மிரட்டுகிறார்களா என்று கேட்ட கேள்விக்கு அப்படி யாரும் என்னிடம் நேரடியாக பேசவில்லை என்று ஜாய் சொல்லி இருந்தார். அதுபோல மாதம்பட்டி ரங்கராஜன் உங்களைப் போல வேறு பெண்களையும் ஏமாற்றி இருக்கிறார் என்று சொல்கிறீர்களே அது உங்களுக்கு எப்படி தெரிய வந்தது என்று கேட்ட கேள்விக்கு, அந்த பெண்கள் தான் என்னிடம் மெசேஜ் மூலமாக சொன்னார்கள் என்றும் ஜாய் தெரிவித்திருக்கிறார்.

ஸ்ருதியின் சந்தோஷமான பதிவு

இந்த நிலையில் இரண்டாவது மனைவி ரங்கராஜ் மீது மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்த இந்த சூழலில், அவருடைய முதல் மனைவி ஸ்ருதி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் ஸ்ருதி, சந்தோஷமாகப் புன்னகைத்தபடி இருக்கும் ஒரு செல்ஃபியை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், அந்தப் புகைப்படத்தின் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் #friendshipgoals, #happy life (நட்புக்கான இலக்குகள், மகிழ்ச்சியான வாழ்க்கை) போன்ற ஹாஷ்டேகுகளையும் அவர் சேர்த்திருக்கிறார்.

இது பதிலடியா

ஸ்ருதியின் இந்தப் பதிவு சாதாரணமானதாக இருந்தாலும், இது வெளியான நேரம்தான் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ரங்கராஜ் மற்றும் இரண்டாவது மனைவி ஜாய் கிறிஸில்டாவுக்கு இடையே பிரச்சனை பூதாகரமாக வெடித்திருக்கும் இந்தச் சூழலில், ஸ்ருதி தன்னுடைய 'மகிழ்ச்சியான வாழ்க்கையை'ப் பற்றியும், 'நட்புக்கான இலக்குகள்' பற்றியும் பேசியிருப்பது, இந்தச் சண்டைச் சச்சரவுகளில் இருந்து தான் விலகி, மன நிம்மதியுடன் வாழ்வதாக அவர்களுக்குப் பதிலடி கொடுக்கிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அல்லது ரங்கராஜ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நடுவே, முதல் மனைவி ஸ்ருதி இவ்வாறு மகிழ்ச்சியாகப் பதிவிடுவதன் மூலம், மறைமுகமாக ரங்கராஜுக்கு ஆதரவாக நிற்கிறாரா என்றும் சில ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். சிலர், மற்றவர்களின் சண்டையின் போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துக்குப் பார்வையாளர்களை ஈர்க்க ஸ்ருதி இவ்வாறு செய்கிறாரோ என்றும் விமர்சித்துள்ளனர்.

மொத்தத்தில், ஒருபுறம் மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி சட்டப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கும் நிலையில், முதல் மனைவி ஸ்ருதியின் இந்தப் பதிவு, தன்னுடைய நிம்மதியான வாழ்க்கையைப் பறைசாற்றுவதாக இருக்கிறதா அல்லது இந்தச் சர்ச்சைக்கு ஒரு மறைமுகமான பதிலடியா என்று தெரியாமல், ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தத் தனிப்பட்ட விவகாரங்கள் சினிமா வட்டாரத்தில் மேலும் என்னென்ன திருப்பங்களை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+