வயிற்றில் இருக்கும் குழந்தையின் ரிப்போர்ட்டுடன் ஜாய் கிறிஸ்டில்லா போஸ்ட்! மாதம்பட்டி ரங்கராஜன் பதில்?
சென்னை: சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவருடைய இரண்டாவது மனைவி ஜாய் கிறிஸில்டா (Joy Crisilda), மாநில மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ' திருமணம் செய்து தன்னை ஏமாற்றி விட்டதாக குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்த நிலையில், தற்போது ஜாய் கிறிஸில்டா தனது கர்ப்ப காலத்தைப் பற்றிய மிகவும் உருக்கமான ஒரு பதிவைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜாய் கிறிஸில்டாவின் பதிவு
நேற்று (அக்டோபர் 8, 2025) மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரியிடம் ஜாய் கிறிஸில்டா புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து இன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கும் விஷயம் பலரது மனதையும் கலங்க வைத்துள்ளது.
அந்தப் பதிவில் அவர், மருத்துவமனையில் இருக்கும் தனது கர்ப்ப காலப் படத்தை பகிர்ந்து, அதன் மேல் ஆங்கிலத்தில் ஒரு நீண்ட வாசகத்தை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"மருத்துவமனை அறையின் அமைதி எனக்கு வலியைத் தரவில்லை. தன்னுடன் இருப்பதாக உறுதியளித்த ஒருவரின் அமைதிதான் என்னை வதைக்கிறது". "ஒவ்வொரு முறையும் மருத்துவர், 'குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் எங்கே?' என்று கேட்கும் போதும், வார்த்தைக்குப் பதிலாக நான் கண்ணீரை விழுங்குகிறேன்". "ஆனால், என் உள்ளிருக்கும் இந்தக் குட்டி உயிர் எனக்கு ஒரு நம்பிக்கையைத் தந்து, நான் தொடர்ந்து போராட ஒரு காரணத்தையும் கொடுக்கிறது". "ஒரு நாள், இந்தக் குழந்தை, தன் அம்மா ஒருபோதும் சரணடையவில்லை என்பதை அறிந்துகொள்ளும்!" என்று உறுதியுடன் பதிவிட்டுள்ளார்.
மேலும், "இன்னும் சில வாரங்களில் குழந்தை பிறக்கும்" என்று குறிப்பிட்டுள்ள அவர், #karmawillservethemsoon (கர்மா அவர்களுக்கு விரைவில் பதிலளிக்கும்) என்ற ஹாஷ்டேக்கையும் சேர்த்திருக்கிறார். கணவர் மீதும், இந்தச் சூழ்நிலை மீதும் அவருக்கு இருக்கும் ஆத்திரத்தை இது காட்டுகிறது.
முதல் மனைவியின் பதிவு
ஜாய் கிறிஸில்டா புகார் கொடுத்த பரபரப்பு அடங்குவதற்குள், ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதியும் இன்று ஒரு பதிவைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டு, இந்தப் பிரச்சனைக்கு மேலும் ஒரு திருப்பத்தைக் கொடுத்திருந்தார்.
தான் சந்தோஷமாகப் புன்னகைக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதி, அதில் #friendshipgoals, #happylife போன்ற ஹாஷ்டேகுகளைப் பயன்படுத்தியிருந்தார். ஜாய் கிறிஸில்டாவும், ரங்கராஜும் கடுமையான குடும்பச் சண்டை மற்றும் சட்டப் பிரச்சனைகளில் இருக்கும் இந்தச் சூழலில், ஸ்ருதியின் இந்த 'மகிழ்ச்சியான வாழ்க்கை' குறித்த பதிவு, ஜாய் கிறிஸில்டாவின் புகாருக்கு ஒரு மறைமுகப் பதிலடியா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருபக்கம் கண்ணீருடன் ஒரு மனைவி, இன்னொரு பக்கம் புன்னகையுடன் இன்னொரு மனைவி என இரண்டுமே ரங்கராஜின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் நாடகத்தின் உச்சகட்டமாகக் கருதப்படுகிறது.
ஆனால் தொடர்ந்து தன்னுடைய போட்டோ சூட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் மாதம்பட்டி ரங்கராஜன் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருக்கிறார் அதனால் இந்த விவகாரம் குறித்து அவர் என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் பலருக்கு இருக்கிறது.












Click it and Unblock the Notifications