உண்மை தெரிந்து மனம் மாறி கதறி அழுத ஸ்ருதி.. சக்தி சொன்ன கடைசி பதில்.. எதிர்பாராத மௌன ராகம் முடிவு
ஸ்ருதிக்கு கார்த்திக் தன்னுடைய அப்பா இல்லை என்ற உண்மை தெரிந்து விட்டது
சென்னை: மௌனராகம் 2 சீரியலில் மார்ச் எட்டாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
மௌனராகம் சீரியலில் கார்த்திக் தன்னுடைய அப்பா இல்லை என்ற உண்மை ஸ்ருதிக்கு தெரிய வந்த நிலையில் தற்போது சுருதி மனமுடைந்து போயிருக்கிறார்.
தனக்கு தெரிந்த உண்மை சக்திக்கு ஏற்கனவே தெரியும் என்று தெரிந்த ஸ்ருதி மனம் மாறி கதறி அழுகிறார்.
நீ எனக்கு என்னதான் கெடுதல் செய்தாலும் நீ எனக்கு தங்கச்சி அதனால் நான் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சக்தி கூறி இருக்கிறார்.

தெரியவரும் உண்மைகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் முதல் பாகம் முடிந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அடுத்தடுத்த பல உண்மைகள் அனைவருக்கும் தெரிந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியலில் இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்க இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கியிருந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் இதுவரைக்கும் வில்லியாக இருந்து வந்த ஸ்ருதிக்கும் பல உண்மைகள் தெரிந்து கொண்டிருக்கிறது.

வீட்டை விட்டு வெளியேற்றம்
அந்த வகையில் ஸ்ருதி தான் கார்த்திக் கிருஷ்ணாவின் மகள் என்று நம்பிக் கொண்டிருந்த நிலையில் தற்போது டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் கிடைத்திருக்கிறது. அதில் ஸ்ருதிக்கும் கார்த்திக் கிருஷ்ணாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உண்மை தெரிந்ததும் ஸ்ருதி தன்னுடைய அம்மா மற்றும் பாட்டியிடம் கேட்டு சண்டை இட்டு இருக்கிறார். அதற்கு அவர்கள் இருவரும் நடந்த விஷயங்களை பற்றி சொல்ல விரக்தி ஆகி ஸ்ருதி வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

ஸ்ருதிக்கு கிடைத்த அதிர்ச்சி
இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் ஸ்ருதி கடற்கரையில் கோபமாக விரத்தியோடு நடந்து கொண்டிருக்கும்போது பின்னாடியே சக்தி, ஸ்ருதியை கூப்பிட்டபடி ஓடி வருகிறார். அதற்கு ஸ்ருதி என் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று தெரியாமல் நீ பேசாத என்று சொல்ல, அதற்கு என்ன நடந்தது என்று எனக்கு எல்லாமே தெரியும் என்று சக்தி கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியான ஸ்ருதி உனக்கு முன்னாடியே எல்லாமே தெரியுமா என்று கேட்கிறார்.

இப்படி கண்கலங்கலாமா
ஸ்ருதியின் கேள்விக்கு சக்தி ஆமாம் எனக்கு எல்லாமே ஏற்கனவே முதல்ல இருந்தே தெரியும் என்று சொல்ல, தலையைப் பிடித்துக் கொண்டு கதறியழும் ஸ்ருதி நான் உன்னை எவ்வளவோ கஷ்டப்படுத்தி இருக்கிறேன் ஆனால் நீ ஏன் என் மேல இவ்வளவு அன்பாய் இருக்கா என்று கேட்க? ஏன்னா நீ என் தங்கச்சி ஸ்ருதி என்று சக்தி சொல்ல, ஸ்ருதி சக்தியை கட்டிப்பிடித்து கதறி அழுகிறார். தற்போது இந்த பிரமோ நெருடலாக இருந்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதுவரைக்கும் வந்ததில் இந்த பிரமோவை பார்ப்பதை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது என்று சிலர் கூற, சிலர் பிரமோவை பார்த்து நாங்கள் அழுது விட்டோம் என்று ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
-
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications