மெட்டி ஒலி தனமா இவங்க? 10 வருஷத்தில் இத்தனை வேதனையா? காணாமல் போக காரணம் இதுதானா ?
சென்னை: 90ஸ் கிட்ஸ்களில் பேவரைட் சீரியல்களில் ஒன்றான மெட்டிஒலி சீரியலில் தனம் கேரக்டரில் நடித்து பிரபலமடைந்த நடிகை காவேரி பல வருடங்களுக்குப் பிறகு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் பத்து வருடங்களாக தான் சினிமா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்த காரணம் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அத்தோடு உடல் எடை குறைந்து ஆளே மாறி போயிருக்கும் காவிரி அது குறித்த விளக்கத்தையும் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

பொதுவாக 90ஸ் கிட்ஸ்கள் பள்ளி கல்லூரிக்கு போயிட்டு வந்து வீட்டிற்கு வந்ததும் விரும்பி பார்க்கும் ஒரு சீரியல் என்றால் அது மெட்டி ஒலி சீரியலாக தான் இருக்கும். அந்த காலகட்டத்தில் ஆண்களையும் விரும்பி சீரியல் பார்க்க வைத்தது என்றால் அது மெட்டி ஒலி சீரியல்தான். மெட்டிஒலி சீரியலில் அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற பாடல் தெருவில் நடந்து போகும்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் ரிங்காரமாக இருக்கும்.
அதனாலேயே பல நிகழ்ச்சிகளில் கூட இந்த பாடலுக்கு பல குழந்தைகள் டான்ஸ் ஆடி பார்த்திருப்போம். இப்படி இப்போதும் இந்த சீரியல் பற்றி பல நினைவுகள் ரசிகர்களின் மனதில் அசை போட்டுக்கொண்டு தான் இருக்கும். அந்த அளவிற்கு இந்த சீரியலில் ஐந்து பெண்களுக்கும், அப்பாவுக்கும் உள்ள கதையாக அந்த சீரியல் பல ரசிகர்களின் மனதோடு பயணித்தது.
இதில் முதல் பெண்ணாக நடித்தவர் தான் நடிகை காவேரி. தமிழ் சினிமாவில் இவர் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தார். முதல் திரைப்படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்த காவிரி அதற்கு பிறகு பெரிய அளவில் அவருக்கு பிரபலத்தை கொடுத்தது மெட்டி ஒலி சீரியல்தான். அந்த சீரியலுக்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் நடித்த வம்சம் சீரியலிலும் நடித்திருந்தார்.
அதற்குப் பிறகு காவேரி பல வருடங்களாக காணாமல் போயிருந்தார். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு உடல் மெலிந்து அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கும் அவர் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல அதிர்ச்சிகரமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் வம்சம் சீரியல் நடித்து முடித்த கையோடு எங்க அம்மா இறந்துட்டாங்க. அந்த டைம்ல தான் எனக்கு கல்யாணமும் ஆகி இருந்தது. அதனால் நான் ரொம்பவே டிப்ரஷனில் இருந்தேன். அதனாலேயே வீட்டுக்குள் முடங்கி விட்டேன். அதுவரைக்கும் அம்மாவின் கைக்குளையே வளர்ந்த நான் பிறகு பெரிய அளவில் மன உளைச்சலில் இருந்த போது பல ஊரில் மாறி மாறி வசித்து வந்தோம்.
அப்புறம் ஒரு வேலைக்காக தான் சென்னைக்கு வந்தோம். ஆனால் அந்த நேரத்தில் என்னுடைய அண்ணன் இறந்துவிட்டார். அதனால் சில விஷயங்களும் நடந்துவிட்டது. கிட்ட தட்ட ஒன்றரை வருடங்களாக இப்போது சென்னையில் தான் இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. விரைவில் சொந்த ஊருக்கு கிளம்பி விடுவோம். அதோடு எனக்கு தைராய்டு வந்துவிட்டது.
அதனால் அதிகமான மாத்திரை சாப்பிட்டு வந்தேன். அதனால் கொஞ்ச நாளைக்கு முன்னாடி உடல் எடை அதிகமாக அதிகரித்துவிட்டது. பிறகு திடீரென்று மாத்திரையை நிறுத்தி விட்டேன். அதற்குப் பிறகு 8 கிலோ வரை உடல் எடை டக் என்று குறைந்தது விட்டது. இப்போ உடல் எடை அதிகரிக்க வேண்டும். ஆனால் எது செய்தாலும் எடை ஏறவே மாட்டேங்குது. என்னுடைய சமகாலத்து நண்பர்களான விஜய், அஜித் போன்றவர்களோடு நடிப்பதற்கு எனக்கு ரொம்பவே ஆசை ஆனால் இப்போ அவர்களுடன் நடித்தால் நான் அம்மா கேரக்டரில் தான் நடிக்க வேண்டும்.

அதனால் அந்த ஆசையை தள்ளி வைத்து விட்டேன் என்று சிரித்தபடியே சொல்லி, பிறகு சமுத்திரக்கனி, விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, நயன்தாரா போன்றோர் படங்களில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. அதுபோல என்னோடு மெட்டி ஒலி சீரியலில் நடித்த விஜி இறந்த விஷயம் கூட எனக்கு இரண்டு நாள் கழிச்சு தான் தெரிந்தது.
மெட்டிஒலி காயத்ரியா இது..? இந்த வயதிலும் சிலம்பாட்டத்தில் கலக்கல்.. என்ன சொல்லி இருக்காங்க பாருங்க
அந்த நேரத்தில் நானே பெரிய அளவில் டிப்ரசனில் இருந்ததால் போக முடியவில்லை. பத்து வருஷமா வீட்டுக்குள்ள தான் முடங்கி இருக்கிறேன். எனக்கென்று எந்த நண்பர்களும் இல்லை. எந்த நண்பர்களுடனும் நான் இப்போது டச்சில் இல்லை. பத்து வருஷமா யாரும் என் வீட்டுக்கு வந்ததில்லை. நானும் யார் வீட்டுக்கும் போனதும் இல்லை என்று அந்தப் பேட்டியில் நடிகை காவிரி பேசி இருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications