புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மைம் கோபி செய்த செயல்.. வானில் கிடைத்த சந்தோஷம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் ஜெயித்த மைம் கோபி அவர் சொன்னது போலவே இன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை விமானத்தில் அழைத்து சென்று அவர்களுடைய மகிழ்ச்சியை பார்த்து ரசித்திருக்கிறார். அதாவது மைம் கோபி குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தில் இருக்கும்போது நான் இந்த சீசனில் ஜெயித்தால் இந்த பணத்தை எனக்காக பயன்படுத்திக் கொள்ள மாட்டேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து விடுவேன் என்று கூறியிருந்தார். அதுபோல இப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சில உதவிகளை செய்திருக்கிறார். அதுதான் இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான மைம் கோபி அதற்கு முன்பே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கிறார். இவர் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு மைம் கலை மற்றும் நடிப்பு பயிற்சி ஆசிரியராகவும் இருக்கிறார். மேலும் மைம் கலை மூலமாக இவர் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

தன்னுடைய திறமையை வெளியே தெரிய வேண்டும் நான் யார் என்பது முழுமையாக தெரிய வேண்டும் என்பதற்காக குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்த மைம் கோபி அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றிருந்தார். அதோடு இதுவரை முடிவடைந்த சீசனில் முதல் முறையாக மைம் கோபி தான் குக் வித் கோமாளி டைட்டில் வெற்றி பெற்ற ஆண் போட்டியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து அவர் படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். அது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கத்தில் மைம் கோபி வழக்கம் போல சமூக சேவையும் செய்யக்கூடியவர். தன்னால் முடிந்த அளவிற்கு பலருக்கு உதவி செய்து வருகிறார். குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.

அதன் அடிப்படையில் தான் நான் இந்த நிகழ்ச்சிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் அந்த பணத்தை புற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து விடுவேன் என்று கூறியிருந்தார். அது போல இப்போது முதல்முறையாக புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை விமானத்தில் அழைத்து சென்றிருக்கிறார். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார்.
அப்போது இங்கு எல்லோரும் குறையை தான் பார்க்கிறோம் நிறைய பார்க்க மாட்டோம் நிறைய பார்த்தாலே குறை தெரியாது. இதற்கு நிறைய காசு ஆகவில்லை. மனம் இருந்தால் போதும் இப்ப பணம் பெரிதாக தெரியாது. எல்லோரையும் சகோதரர்கள் குடும்பமாக பார்த்தால் பணம் பெரியதாக தெரியாது. உங்களுடைய பிள்ளைகளை தம்பிகளை அழைத்துச் செல்ல பணம் பற்றி யோசிப்பீர்களா இது உதவியே அல்ல என்னுடைய கடமை.

என்னுடைய குடும்பத்தை அழைத்துச் செல்வது எப்படி கடமையோ அது மாதிரி தான் இதுவும் என்னுடைய கடமை என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து குக் வித் கோமாளியில் நடுவராக இருக்கும் செஃப் வெங்கடேஸ் பட் அதுபோல குக் வித் கோமாளியில் கோமாளியாக இருந்த மோனிஷா, நடிகர் சசிகுமார் என பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். எல்லோரும் மைம் கோபியை பாராட்டிக் கொண்டிருந்தனர். இணையத்தில் இந்த வீடியோ பரவி வரும் நிலையில் ரசிகர்களும் மைம் கோபியை பாராட்டி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications