அண்ணா நகர் ஓட்டலில் பிரபல நடிகை டார்ச்சர்? மினு முனீர் மீது பாயும் வன்மம்? டார்கெட் செய்யப்படுகிறாரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரள திரையுலகில் தனக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது என்று ஹேமா கமிட்டியில் புகார் தந்தவர் பிரபல நடிகை மினு முனீர்.. இந்நிலையில, கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, 16 வயது சிறுமிக்கு சினிமா ஆசை காட்டி, சென்னைக்கு அழைத்து வந்து, பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கிய குற்றச்சாட்டில், பிரபல கேரள நடிகை மினு முனீர் கைதாகி விசாரணைக்குள்ளாகி இருக்கிறார்.. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கருத்து தெரிவித்துள்ளார்.

10 வருடங்களுக்கு முன்பு, நடிகை மினு முனீர், 16 வயது சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்து சென்னை திருமங்கலம் லாட்ஜில் தங்க வைத்துள்ளார். 5 பேரிடம் சிறுமியை அறிமுகம் செய்து வைத்தாராம் நடிகை முனீர்.. அப்போது அங்கிருந்த 4 பேரில் 2 பேர், சிறுமியை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை தந்ததாக தெரிகிறது.

Television Minu Muneer chennai Anna nagar

அண்ணா நகர் ஓட்டல்

பிறகு சிறுமி அங்கிருந்து தப்பி கேரளாவுக்கு சென்று, இதை பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்தார். சமீபத்தில் ஹேமா கமிட்டி நியமிக்கப்பட்டதையடுத்து, பலரும் பாலியல் புகார்களை தந்தபோது, பாதிக்கப்பட்ட பெண், (இப்போது 26 வயதாகிறது) நடிகை முனீர் மீது புகாரை தந்துள்ளார்.. இந்த புகாரில்தான் நடிகை தற்போது கைதாகி, போலீஸாரின் பிடியில் உள்ளார்.

கடந்த வருடம் ஹேமா கமிட்டியில், பல நடிகைகள் பாலியல் புகார்களை, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது முன்வைத்தனர். நடிகர் நடிகர் முகேஷ் , மணியன்பிள்ள ராஜூ , இடவேல பாபு , ஜெயசூர்யா என 4 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை மினு முனீர் புகார் அளித்திருந்த நிலையில், இப்போது நடிகை மீதே பாலியல் புகார் திரும்பியிருப்பது சலசலப்பை கூட்டி வருகிறது.

பிரபல நடிகையை துரத்திய நடிகர்

இந்நிலையில், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "ஒரு பிரபலமான நடிகை, ஷூட்டிங் முடித்துவிட்டு, வீட்டுக்குசென்றபோது, அவரை துரத்திக் கொண்டே போன பிரபலமான நடிகர், தவறாக நடந்து கொண்டார்.. இது குறித்த புகார்கள் கிளம்பி, பெரிய பிரச்சனை நடந்தது..

அதனை விசாரிக்க அமைக்கப்பட்டதுதான் இந்த ஹேமா கமிட்டி.. பாலியல் துன்புறுத்தல்கள் /சினிமாவில் பெண்களுக்கு நடக்கிறதா? என்பதை ஆராயவே நீதிபதி ஹேமா தலைமையில் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது..

26 வயது பெண்ணின் புகார்

2 வருடமாக நிறைய ஆய்வுகளை செய்த இந்த ஹேமா கமிட்டி, நேரடி விசாரணை நடத்தியது.. அப்போது தாங்களும் பாலியல் தொல்லை நடந்துள்ளது என்று கூறி 25-க்கும் மேற்பட்ட நடிகைகள் தங்களது வாக்குமூலங்களையும் தெரிவித்திருந்தனர்.. அதில் ஒரு நடிகைதான் மினு முனீர்,.

இந்த புகாரை மினுர் தந்தபோதே இவரை அனைவரும் ரொம்ப துணிச்சலான பெண் என்றார்கள்.. ஆனால், இந்த மினு முனீர் நடிகை மீதே 26 வயது பெண் ஒருவர் புகார் தந்துள்ளார்.. 10 வருடங்களுக்கு முன்பு தனக்கு 16 வயதிருக்கும்போது, முனீர் தன்னை சினிமா வாய்ப்புக்காக சென்னைக்கு அழைத்து சென்றதாகவும், சென்னை அண்ணாநகரில் தங்க வைத்தபோது, அங்கிருந்த 4 பேர் தனக்கு பாலியல் துன்புறுத்தல்களை தந்ததாகவும் புகாரில் கூறியிருந்தார்..

அந்த புகாரின்பேரில் மினு முனீர் சென்னை திருமங்கலம் போலீசாரால் கைதாகி விசாரணைக்குள்ளாகி உள்ளார்..

ஏதோ மர்மமாக உள்ளது

ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமி, 10 ஆண்டு காலம் ஏன் காத்திருந்தார்? இதே ஹேமா கமிட்டி 2 வருடங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டபோதே தன்னுடைய புகாரை இப்பெண் தந்திருக்கலாமே? எனவே இதற்குள் வேறு விவகாரம் இருப்பதாக தெரிகிறது. இதனைதான் மினு முனீரை சார்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஏதோ மர்மம் உள்ளது.

முகேஷ் உள்ளிட்ட 3 பிரபலங்கள் மீது மினு முனீர் பாலியல் புகார் தந்தபோது, அன்று பாதிக்கப்பட்ட 16 வயது ஏன் அமைதியாக இருந்தார்? மினு முனீரால் பாதிக்கப்பட்டவள் நான்தானே? என்று அந்த பெண் முதல்நபராக வந்து புகார் தந்திருக்கலாமே?

ஹேமா கமிட்டில் 25-க்கும் மேற்பட்ட நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்திருந்த நிலையில், ஏன் 20-க்கும் மேற்பட்டோரின் புகார்களை பதிவு செய்யவில்லை? ஏன் புகாராக கொண்டு போகவில்லை? இந்த 25 நடிகைகளும் புகார் சொல்லியிருந்தது செல்வாக்கான நபர்கள் மீதுதான்..

பதிவு செய்யப்படாத புகார்கள்

ஒருவேளை, புகார்களை பதிவு செய்ய வேண்டாம் என்று மிரட்டல் வந்ததா? அல்லது பணம் பாய்ந்ததா? அல்லது சமரசம் பேசப்பட்டுவிட்டதா? அல்லது காலில் விழுந்து கெஞ்சினார்களா?

நடிகைகள் புகார்களை தந்தால் அவர்களுக்கு என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் என்பதற்கு உதாரணம்தான் இவையெல்லாம்.. நீதியரசரிடம் புகார் கொண்டு சென்றால், அந்த புகாரை பதிவுசெய்யவும் நடிகைகள் தயாராக இருக்க வேண்டும். அல்லது நடிகைகள் புகார் சொல்ல வரும்போதே, புகாராக வாங்கிவிட வேண்டும்.. இதனால் பின்வாங்கவும் முடியாது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+