8 வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிறந்த நாளில் மிர்ச்சி செந்தில்- ஸ்ரீஜா புகைப்படம் வெளியிட்டு உருக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் முதல் பாகத்தில் நடித்து பிரபலமான மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா தன்னுடைய குழந்தையின் முதல் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றனர். இந்த தம்பதிகளுக்கு திருமணத்திற்கு பிறகு எட்டு வருடங்களுக்கு பிறகு தான் இந்த குழந்தை பிறந்திருக்கிறார்.
இந்த நிலையில் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை மற்றும் அவருடைய பெயரையும் முதல் முறையாக ரசிகர்களிடம் இந்த தம்பதி பகிர்ந்து இருக்கின்றனர். பிறந்தநாள் சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டிருந்தாலும் இன்று தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிர்ச்சி செந்தில் அந்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக பிரபலமான ஸ்ரீஜா அதற்குப் பிறகு செந்திலோடு மாப்பிள்ளை என்ற சீரியலில் மட்டும் நடித்துவிட்டு பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த நிலையில் தன்னுடைய மகனின் பிறந்த நாளில் அவர் தன்னுடைய மகனை கொஞ்சி விளையாடிய புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாக அதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களையும் குழந்தைக்கு ஆசீர்வாதங்களையும் தெரிவிக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சி சீரியலை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. இந்த சீரியல் பல சீசன்களாக தொடர்ந்து வந்தாலும் முதல் பாகத்தில் நடித்த செந்தில் மற்றும் ஸ்ரீஜா அதிகமான ரசிகர்கள் மனம் கவர்ந்த ஜோடியாக ஏற்றுக் கொண்டனர்.
இந்த சீரியலில் இவர்கள் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு செந்தில் சீரியல்களில் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வந்திருந்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் பெரிய அளவில் இவருக்கு பிரபலத்தை கொடுக்காத நிலையில் இப்போது மீண்டும் சின்ன திரையில் அடி எடுத்து வைத்திருக்கிறார்.

ஆனால் ஸ்ரீஜா எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த நிலையில் சில வருடங்கள் கழித்து மாப்பிள்ளை என்ற சீரியலில் செந்திலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த சீரியலுக்கு பிறகு ஸ்ரீஜா எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் தான் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட செந்தில் மற்றும் ஸ்ரீஜா தம்பதிக்கு எட்டு வருடங்களுக்குப் பிறகு கடந்த வருடத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

செந்தில் இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மகன் பிறந்தநாளை கடந்த வாரத்தில் பிரம்மாண்டமாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். அப்போது சின்னத்திரையில் இருந்து அண்ணா சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதோடு ஸ்ரீஜா மற்றும் செந்தில் தம்பதியினரின் குடும்பத்தினரும் நண்பர்களும் இந்த பங்க்ஷனில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த புகைப்படங்களை இன்று செந்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு அந்த புகைப்படங்களுக்கு ஒரு அழகான கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதாவது "எங்கள் மகன் ஸ்ரீ வல்லபதேவ்வின் முதலாவது பிறந்தநாள். எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஒரு சிறிய சந்திப்பு நடத்தினோம்" என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல் அந்த அழகிய புகைப்படங்களுக்கு டிக் டிக் டிக் திரைப்படத்தில் இடம் பெற்ற "குறும்பா" என்ற பாடல் எடிட் செய்து பயன்படுத்தி இருக்கிறார். இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பிறந்தநாள் பங்க்ஷனில் ஸ்ரீஜா மற்றும் மிர்ச்சி செந்தில் அவருடைய குழந்தை என எல்லோருமே ஒரே வண்ணத்தில் உடைய அணிந்து வண்ண வண்ண பலூன், குட்டி குட்டி பொம்மைகளோடு அலங்காரத்தோடு இருக்கும் இடத்தில் வைத்து விதவிதமாக புகைப்படங்களை எடுத்து இருக்கின்றனர்.
அதிலும் பல வருடம் கழித்து பிறந்த தன்னுடைய செல்ல மகனின் புகைப்படத்தை முதல்முறையாக மிர்ச்சி செந்தில் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கும் நிலையில் அந்த குழந்தைக்கு ரசிகர்கள் ஆசிர்வாதங்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications