ஓட ஓட தூரம் குறையல, ஆக மொத்தம் ஒன்னும் புரியல! நின்னு அடிங்க ஜெயிக்கலாம்! அதற்கு இதை ஃபாலோ பண்ணுங்க
எல்லா நேரமும் நம்முடைய முயற்சி வெற்றி பெறாது.ஆனால் அதில் தோல்வி ஏற்பட்டாலும் துவண்டு போகாமல் அடுத்த முயற்சியை மட்டும் நாம் தொடங்கி விட வேண்டும்.
சென்னை: வாழ்க்கையில் இன்ப துன்பங்களை கடந்து தான் அன்றாடம் நகரும்.
இந்நிலையில் இன்பங்களை முன்னிறுத்தி துன்பங்களை தூசி தட்டி நகர்ந்து விடுங்கள்.
என்னதான் முயற்சி செய்தாலும் அது எல்லாமே ஃபெயிலியர் ஆகிறதே என்று வருத்தம் சிறிதும் மனதில் எட்டிப் பார்க்காமல் அடுத்தது என்ன செய்யலாம், அதுவும் புதுமையாக செய்ய வேண்டும் என்ற சிந்தனையை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே.

நின்னு அடிக்கணும்
அப்பப்பா, என்ன பிரச்சனை எனக்கு , அவ்ளோ சுலபமா நகர முடியாது சொல்றிங்களா, அப்போ ஒடுங்க நிக்காம ஒடுங்க. கலைஞர் அவர்களே பராசத்தி படத்தில் சிவாஜியை ஓடத்தான் விட்டார் " ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் " ஆக திருப்பி நின்று தடுத்திருக்க வேண்டும் என்பதே அதன் முடிவாகும். சினிமா பாடல்களில் கூட 'ஓட ஓட தூரம் குறையல.. ' தான் வருதுங்க. ஆக பிரச்சனைகள் வரும் , அதை நின்று சரி செய்து பாருங்கள். தூரம் குறையலாம் , வாழ்கை மலரலாம்.

இது உங்கள் வாழ்க்கை
சுற்றியிருப்பவர்களை அறிந்தே வாழ வேண்டும் எனில் அது அவர்களது வாழ்க்கை ஆகி விடும். இது உங்கள் வாழ்க்கை , அதன் மேடு பள்ளங்கள் நீங்கள் மட்டுமே அறிந்திருக்க முடியும். அடுத்தவர் என்ன சொல்லுவார், சொந்தபந்தம் முன்னிலையில் எப்படி தலை காட்டுவது என்பதை தள்ளி வையுங்கள்.நாம் ஒரு தோல்வி ஏற்பட்டால் அதை நினைத்து பயப்படுவதை விட, இனி நான் தோல்வி அடைந்து விட்டேன் என்று எப்படி அடுத்தவர்களிடம் கூறுவேன்? இதை கேட்டு சொந்த பந்தங்கள் என்னவெல்லாம் கேள்வி கேட்பார்களோ? அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ? இத்தனை முறை முயற்சி செய்தும் இதுவும் உனக்கு கிடைக்கவில்லையா? என்று ஒரு ஏளன பார்வை பார்ப்பார்களே, அதில் நான் எப்படி மீண்டு வருவேன்? என்றெல்லாம் யோசிக்காதீர்கள். இது இல்லன்னா என்னால் முடியும் அடுத்தது ஜெயிக்க என்ற ஒரு வார்த்தையை மட்டும் மனதிற்குள் வைத்து முகத்தில் வெளிப்படுத்துங்கள். கேள்வி கேட்பவர்களை தூரமாக வையுங்கள்.

பாசிட்டிவ் சிந்தனை வேண்டும்
ஒரு பிரச்சனை என்றால் பரவாயில்லை , அடுத்த பிரச்னையும் துரத்துதே என்று நினைக்கிறீர்களா? அப்போ நிதானம் கண்டிப்பா அவசியம்ங்க. எந்த எடத்துல சருக்குதுனு முதல்ல பாருங்க. அத சரி பண்ண ஒரு யூகத்தை வழிவகுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தான் நின்று போராடவேண்டும். துன்பங்களை பிரச்சனைகளை தூரமாக வைத்து விடுங்கள்.பாசிட்டிவ் சிந்தனைகளை மனதிற்குள் ஏற்றுக் கொண்டாலே நாம் எங்கே தவறு செய்தோம் என்பதை கண்டுபிடித்து விடலாம். தவறு நாம் தான் செய்திருக்கிறோம் என்பதை முழுமையாக நமது மனதை ஒத்துக்கொள்ள வையுங்கள். அப்போது தான் அந்த தவறு நம்முடைய வாழ்க்கையில் மீண்டும் வராது. அடுத்தடுத்த பிரச்சனை உங்களை துரத்திக் கொண்டே இருக்கிறது என்றால் உங்கள் மனதையும் பக்குவப்படுத்தி நீங்கள் மற்றவர்களை விட சிறந்தவர் என்பதை நீங்கள் மட்டும் அல்ல உலகமே புரிந்து கொள்ளும் நாள் விரைவில் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

மனதிற்கு பிடித்ததை செய்யுங்கள்
சில இடங்களில் உங்களது அமைதி பெரிய ஆயுதமாக கூட மாறலாம். சில நேரங்களில் உங்கள் ரசனைக்கேற்ற செயலை செய்வதால் உங்கள் கவலை மறந்து மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அதன் பிறகு பாருங்கள் உங்கள் பிரச்சனைகள் உங்களை விட்டு ஒரு அடி தள்ளியே நிற்கும்.அதுவே உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

துன்பம் கடுகு அளவு தான்
நம்மை விட கஷ்டப்படுபவர்களை மனதில் அடிக்கடி எண்ணிக் கொள்ளுங்கள். அவர்கள் இந்த சூழ்நிலையிலும் இப்படி ஜெயித்து வருகிறார்கள் என்றால் நம்மால் ஏன் முடியாது என்பதை மட்டும் அடிக்கடி கேட்டுக் கொண்டிருங்கள். உங்கள் கவலை எல்லாம் இவ்வளவுதானா? என மாறிவிடும். "இன்பத்தை மலையென எண்ணி துன்பத்தை கடுகாய் ஓரங்கட்டுங்கள்". ஓடாமல் நின்று முயற்சி செய்து பாருங்கள். நீங்களும் ஜெய்த்துவிடலாம்.இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications