தேசிய விருது வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர்! இவருக்கு இந்த விருது கொடுக்கணும்னு ஏன் எல்லாரும் சொல்றாங்க? சூரி பதிவு
சென்னை: தமிழ் திரையுலகின் மிகச் சிறந்த கலைஞர்களில் ஒருவரான நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்-க்கு 2023-ம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைச்சிருக்கு. அவர் ஹரீஷ் கல்யாணுடன் நடித்த பார்க்கிங் படத்துக்காக இந்த விருதை வாங்கி இருக்கிறார். இந்த செய்தி கேட்டதும் நம்ம மக்கள் எல்லாரும், "அட இவருக்குத் தான் இந்த விருது கொடுக்கணும், இது ரொம்பச் சரியான தேர்வு"னு கொண்டாடிட்டு இருக்காங்க. இந்த விருது ஒரு நாள்ல கிடைச்சது இல்ல. பல வருட உழைப்புக்கான அங்கீகாரம்.

நவரச நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்
எம்.எஸ்.பாஸ்கரை பத்தி சொல்லணும்னா, அவர் ஒரு நடிப்பு ஜாம்பவான். நாடகக் கலைஞரான அவர், 1987-ம் ஆண்டு வெளியான திருமதி ஒரு வெகுமதி படத்துலதான் முதல் முதலா தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானாரு. ஆரம்பத்துல சின்னச் சின்ன வேடங்கள்லதான் நடிச்சிட்டு வந்தாரு. ஆனா, 2004-ல் வெளிவந்த எங்கள் அண்ணா படம்தான் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையா அமைஞ்சது.
அந்த படத்துக்குப் பிறகு நகைச்சுவை நடிகரா பல படத்துல அவர் கலக்கி எடுத்திருப்பாரு. அவர் காமெடி பண்றதுகூட ரொம்ப இயல்பா இருக்கும். சிவாஜி, தசாவதாரம், அழகிய தமிழ்மகன் எனப் பல படங்கள்ல அவருடைய டைமிங் காமெடி ரொம்ப பிரபலம். அவர் வெறும் காமெடி நடிகர் மட்டும் இல்லை. வில்லன், குணச்சித்திரம்னு எந்த வேஷம் கொடுத்தாலும், அதுல இறங்கி நடிப்பாரு. அந்த வரிசையில், சமீப காலமா அவர் நடிச்ச படங்கள்ல அவருடைய நடிப்பு வேற லெவல்ல இருக்கும். சமீபத்தில் வெளியான பார்க்கிங், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களில் எல்லாம் நடித்திருப்பார். இந்த மாதிரி ஒரு உணர்ச்சிப்பூர்வமான கலைஞனுக்கு இந்த தேசிய விருது ரொம்பவும் பொருத்தமானது.
கஷ்டமும் தன்னம்பிக்கை
எம்.எஸ்.பாஸ்கர்க்கு விருது கிடைச்சதும், அவருக்கு வாழ்த்து சொல்லி நடிகர் சூரி ஒரு உருக்கமான பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருந்தாரு. "கஷ்டங்களும் தியாகங்களும் நிறைந்த பல ஆண்டுகளின் உழைப்பின் பலன் இன்று தேசிய விருதாக மலர்ந்துள்ளது. இவரது பயணம் எனக்கு ஒரு பெரிய பாடமாகவும் ஊக்கமாகவும் உள்ளது. இதே துறையில் பணிபுரிந்து, இத்தகைய சிறந்த கலைஞரை கொண்டாடுவதில் பெருமை கொள்கிறேன்" என்று சூரி சொன்னது பலருடைய மனதைத் தொட்டது.
சூரி ஏன் இப்படிப் பேசினாருன்னு உங்களுக்குத் தெரியுமா? ஏன்னா, அவர் தன் வாழ்வுல நிறையக் கஷ்டப்பட்டவர். அவர் முதல் படத்துல காமெடி நடிகரா வரணும்னா கூட ரொம்பக் கஷ்டப்பட்டாரு. வெண்ணிலா கபடிக்குழு படத்துல பரோட்டா காமெடிதான் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையா அமைஞ்சுது. அதன் பிறகு சின்னச் சின்ன வேடங்கள்ல நடிச்சு, இப்போ விடுதலை போன்ற படங்கள்ல ஹீரோவாகவே நடிச்சிட்டு இருக்காரு. அதனால ஒரு கலைஞனின் கஷ்டம் இன்னொரு கலைஞனுக்குத்தான் தெரியும்.
இந்த தேசிய விருது, எம்.எஸ்.பாஸ்கர் சாருடைய நடிப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். அவர் சினிமா, நாடகம், டப்பிங் என பல துறைகள்ல சாதிச்சிருக்காரு. இந்த விருது தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த ஒரு பெருமை தான். அதுபோல நேற்று விருது வாங்கிய எம்எஸ் பாஸ்கர் இன்று என்னுடைய மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் மற்றும் நடிகர் சிவாஜி கணேசன் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களுடைய திருஉருவப்படத்திற்கு முன்பு தான் வாங்கிய விருதை அர்ப்பணித்து அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications