நயன்தாரா- மீனா பிரச்சனைக்கு காரணம், அந்த நடிகை எடுத்த செல்பி! விழாவில் நடந்த சம்பவம்.. பிரபலம் ஓபன்
சென்னை: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கான பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது நயன்தாரா மீனாவை இன்சல்ட் செய்துவிட்டார் என்ற செய்திகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதுபோல மீனா பகிர்ந்த இன்ஸ்டாகிராம் போஸ்டில் நயன்தாராவிற்கு பதிலடி என்றும் பலர் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு என்ன நடந்தது என்பதை குறித்து பிரபலம் ஒருவர் பேசியிருக்கிறார்.
சில வருடங்களாகவே நயன்தாரா பற்றிய செய்திகள் தான் அதிகமாக இணையத்தில் அடிபட்டு கொண்டே இருக்கிறது. நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு அவர் அதிகமான சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார் அவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை என்றாலும் நயன்தாராவிற்கு டிமாண்ட் இன்னும் சரியவில்லை.

அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை
தென் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் நயன்தாரா இருந்து வருகிறார். அதுபோல சினிமாவில் மட்டுமல்லாமல் பிசினஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இன்று தன்னுடைய பிரமாண்டமான வீட்டை ஸ்டுடியோவாக மாற்றி இருக்கிறார். அதற்காக பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
வீடு இப்போ ஸ்டூடியோ
ஏழாயிரம் சதுர அடி கொண்ட வீட்டை ஸ்டுடியோவாக மாற்றியிருக்கும் நயன்தாராவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மேடையில் அவமானம்
அப்போது நயன்தாரா மீனாவை இன்சல்ட் செய்துவிட்டார், அவரிடம் முகம் கொடுத்து கூட சரியாக பேசவில்லை என்று சில செய்திகள் இணையத்தில் வைரலாகி வந்தது. இது குறித்து ஆர்ஜே ஷா தன்னுடைய யூ டியூப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நயன்தாராவிருக்கும் மீனாவிற்கும் பிரச்சனை நயன்தாரா மீனாவை அவமானப்படுத்திவிட்டார் என்று செய்திகள் பரவி வருகிறது. ஆனால் அதற்கு முக்கிய காரணம் நடிகை ரெஜினா தான் என்று கூறியிருக்கிறார்.
முதல் மரியாதை
அதாவது நயன்தாரா பூஜையின் போது கேரவனுக்கு வந்து தான் ரெடி ஆகிக் கொண்டிருந்தாராம். அந்த நேரத்தில் டைம் ஆனதும் பட குழுவினர்கள் ரெஜினாவும் இந்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் இருப்பதால் அவரை முதலில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் அவரை முதலில் மேடைக்கு கூப்பிட்டு இருக்கிறார்கள்.

வருத்தப்பட்டார்
நயன்தாரா கிளம்பி வருவதற்கு முன்பு ரெஜினா மேடைக்கு வந்து இருக்கிறார். அதுபோல குஷ்பூ மீனா என பலரும் வந்திருக்கிறார்கள். அது நயன்தாராவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று ஆர் ஜே ஷா கூறியிருக்கிறார். அதோடு மேடையில் எல்லோருக்கும் பொன்னாடை போடும்போது நயன்தாரா தானே இந்த திரைப்படத்தின் கதாநாயகி அதனால் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று நயன்தாரா மற்றும் அவருடைய குழுவினர்கள் எதிர்பார்த்ததாகவும் ஆனால் அங்கு மீனா, குஷ்பூ, ரெஜினா என எல்லா நடிகைகளுக்கும் பொன்னாடை போர்த்தியதுவும் நயன்தாரா குழுவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது குறித்து படக் குழுவினர்களிடம் பேசி இருக்கிறார்கள்.
செல்பியால் வந்த வினை
அது மட்டுமல்லாமல் மேடையில் குஷ்பூ தன்னுடைய போனை கொடுத்து ரெஜினாவிடம் செல்பி எடுக்க சொல்லி இருக்கிறார். ரெஜினா, நயன்தாரா, மீனா, குஷ்பூ என நான்கு பேரும் இருக்கிற மாதிரி ஒரு செல்பி போட்டோ எடுத்திருந்தார். இதுவும் நயன்தாராவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக படக்குழுவினர்களிடம் பேசப்பட்டதாக ஆர் ஜே ஷா கூறியிருக்கிறார்.

ஏமாற்றம்
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாகவும் முக்கியமான கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருக்கும் நிலையில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதது நயன்தாராவிற்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம். அதனால் கூட அவருடைய முகத்தில் அந்த மாற்றம் தெரிந்திருக்கலாம் என்று கூறி இருக்கிறார்.
தேவையில்லாத பயம்
அதுபோல நயன்தாரா ராஜா ராணி திரைப்படத்திற்கு முன்புவரைக்கும் எல்லா நடிகைகளோடும் மிங்கில் ஆகும் வகையில் ஸ்வீட் ஆன பெர்சனாக தான் இருந்தாராம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு தான் மாறிவிட்டார் நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மை ஏமாற்றி விடுவார்களோ? நாம் ஏமாந்து விடுவோமோ என்ற ஒரு பயத்தோடு மற்றவர்களிடம் பழகுகிறார். அதனாலேயே அவர் செய்வது ஆப்டிடியூட் காட்டுவது போல இருக்கிறது அதனால் அவர் பற்றி அதிகமான நெகட்டிவ் கமாண்டுகள் இப்போது வந்து கொண்டிருக்கிறது என்று நயன்தாராவிடம் பழகியவர்கள் கூறி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications