இது ராஜ்கிரண் வேலை தான்! பிரியாவை பிரிந்த காரணம் குறித்து முனீஸ்ராஜா எமோஷனல்.. அந்தப் பிரச்சனை தானா?
சென்னை: நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா கடந்த 2022 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகரான முனீஸ் ராஜாவை வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் அந்த நேரத்தில் பெரிய அளவில் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆனால் இப்போது ப்ரியா தான் முனீஸ்ராஜாவை பிரிந்து விட்டேன் என்று ராஜ்கிரணிடம் மன்னிப்பு கேட்டபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் பிரியா எதனால் முனீஸ் ராஜாவை பிரிந்தார் என்ற கேள்வி இணையத்தில் அதிகமாக எழுந்து வந்த நிலையில் இது குறித்து முனீஸ் ராஜா பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து ரசிகர்கள் இணையத்தில் அதிகமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் மூலமாக பிரபலமான நடிகர் முனீஸ் ராஜாவும் பிரபல நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியாவும் காதலித்து வந்திருந்த நிலையில் இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தாங்கள் திருமணம் செய்த செய்தியை வீடியோவாக வெளியிட்டு இருந்த நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நிலையில் நடிகர் ராஜ்கிரண் பிரியா என்னுடைய மகள் கிடையாது அவர் வளர்ப்பு மகள் தான். ஆனால் என்னுடைய வளர்ப்பு மகள் பிரியாவை அந்த சீரியல் நடிகர் திருமணம் செய்தது நகைக்காகவும் பணத்திற்காகவும் தான். இனி எந்த இடத்திலையும் அந்த சீரியல் நடிகர் என்னுடைய பெயரை பயன்படுத்தக்கூடாது என்று ஒரு பெரிய பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது குறித்து முனீஸ் ராஜா நான் உண்மையாக பிரியாவை காதலித்தேன். அதனால் தான் இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும் திருமணம் செய்து இருக்கிறேன். இவர்கள் முன்பு நாங்கள் நன்றாக வாழ்ந்து காட்டுவோம் என்று கூறியிருந்தார்.
அதுபோல தன்னுடைய மனைவிக்காக தான் ஒரு வீடு கட்டிக் கொண்டிருப்பதாகவும் விரைவில் அவருக்கு சொந்தமாக ஒரு பிசினஸ் செய்ய வழிவகை செய்து கொடுப்பதாகவும் கூட பேசியிருந்தார். அதற்குப் பிறகு ஒரு சில மாதங்களாக இவர்களுடைய பிரச்சனை பெரிய அளவில் இல்லாமல் இருந்த நிலையில் திடீரென்று பிரியாவின் அம்மாவும் ராஜ்கிரனின் மனைவியான என்பவர் போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தார்.
அப்போது பிரியா தரப்பில் என்னுடைய அப்பாவும் அம்மாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில் தான் என்னுடைய அம்மா நான் சிறு குழந்தையாக இருக்கும்போது என்னை கூட்டிக்கொண்டு ராஜ்கிரண் சாரோட வாழ தொடங்கினார். அப்போது என்னுடைய தந்தை எனக்கு போட்டிருந்த நகைகளையும் அவர்தான் வைத்திருந்தார். இப்போது அவர் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார் ஆனால் எனக்கு என்னுடைய தந்தை தந்த நகைகள் வேண்டும் என்று கூறியிருந்தார்.
அப்போது காவல்துறை தரப்பிலிருந்து இரண்டு தரப்பினர்களும் ஒருவரை ஒருவர் விமர்சிக்க கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்ட பிறகு சில மாதங்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த நிலையில் நேற்று திடீரென்று பிரியா ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் தான் முனீஸ்ராஜாவை பிரிந்து விட்டேன். அதுவும் சில மாதங்களுக்கு முன்பே எங்கள் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டுவிட்டது.
அதற்குப் பிறகு நான் கஷ்டத்தில் இருக்கும்போது என்னுடைய வளர்ப்பு தந்தை தான் எனக்கு சில உதவிகளை செய்திருக்கிறார். நான் என்னுடைய திருமணத்தால் என் வளர்ப்பு தந்தையை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன். என்னை மன்னிச்சிடுங்க டாடி.... என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார். இது இணையத்தில் அதிகமாக பரவி வந்த நிலையில் இது குறித்து முனீஸ் ராஜாவிடம் பிரபல பத்திரிக்கையில் இருந்து பேசி இருக்கின்றனர்.
அப்போது முனீஸ் ராஜா இது ராஜ்கிரணின் வேலை தான். எதையும் இப்போது சொல்வதற்கு இல்லை. நடப்பது நடக்கட்டும் என்று எமோஷனலாக பேசியிருந்தாராம். இது குறித்து அந்த பத்திரிகையில் செய்தி வந்ததும் இணையத்தில் அதிகமானோர் இது பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications