காரில் பெண்ணை கடத்தி கல்யாணம் பண்ண நடிகர் முரளி.. அந்த நடிகை மீது ஆசையா? டேனியல் பாலாஜி செம: பிரபலம்
சென்னை: பிரபல நடிகர் முரளி தன்மையான குணம் கொண்டவர், மிகவும் நல்லவர், அனைவருக்கும் மரியாதை தந்து பேசக்கூடிய மனிதர் என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.. அத்துடன், நடிகர் டேனியல் பாலாஜிக்கு, நடிகர் முரளி சினிமா வாய்ப்புகளுக்கு உதவி செய்யாதது ஏன் என்பது குறித்தும் தன்னுடைய கருத்தை சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
Realone Media யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "நடிகர் முரளியின் தீவிர ரசிகர் ஒருவர் "கடவுள் முரளி வாழ்க" என்று சுவரெல்லாம் எழுதி கொண்டேயிருந்தார்.. சென்னை வளரசவாக்கம் பகுதியில் உளள சுவற்றில் எழுதப்பட்டிருந்ததை நானே பலமுறை பார்த்திருக்கிறேன்.

முரளியின் அப்பா கன்னடத்தில் பிரபலமான டைரக்டர்.. தன்னுடைய அப்பாவிடமே அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்து பணியாற்றினார். பிறகு அப்பாவின் படத்திலேயே முரளி நடிக்க துவங்கினார்.. அந்த நேரம் பார்த்து, கே.பாலச்சந்தர் தயாரிப்பில் பூவிலங்கு என்று அமீர்ஜான் டைரக்ஷனில் படம் தயாராகி கொண்டிருந்தது. கன்னட படத்தில் முரளியை பார்த்ததுமே, அமீர்ஜானுக்கு பிடித்துப்போய்விட்டது. அப்படித்தான் பூவிலங்கு என்ற படத்தில் அறிமுகமானார்.
முரளிக்கு நடந்த திருமணம்
பெங்களூரில் காலேஜில் படித்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை, முரளி காதலித்து கொண்டிருந்தார். ஆனால், பெற்றோர்கள் தரப்பில் இவர்களது திருமணத்துக்கு சம்மதம் கிடைக்கவில்லை. ஒருநாள் திடீரென காரிலேயே அந்த பெண்ணை கடத்தி வந்து, இங்கு முறைப்படி திருமணம் செய்து கொண்டார்..
எஸ்பிபி-யும் இப்படித்தான் மனைவியை கடத்தி வந்து திருமணம் செய்தார். எஸ்பிபி தம்பதியினர் இருவரும் பிராமணர்கள் என்றாலும், கோத்திரம் இருவருக்கும் மாறுபட்டது.. இதனால் திருமணத்துக்கு தடை ஏற்படவும், நண்பர்கள் உதவியுடன் மனைவியை கடத்தி வந்து முறைப்படி திருமணம் செய்தார் எஸ்பிபி.
ரிஸ்க் எடுத்து திருமணம்
அதுபோலவே முரளியும், தன்னுடைய காதலியை கடத்தி வந்துதான் திருமணம் செய்தார்.. வேறொரு வழியாக சென்றால், அகப்பட்டுக் கொள்வோம் என்று, கோவா வழியாக காரில் சுற்றிக்கொண்டுவந்துள்ளனர். இவர்கள் திருமணத்துக்கு பிறகு, 2 குடும்பத்திலும் தம்பதியை ஏற்றுக் கொண்டனர். முரளியும் திருமணத்துக்கு பிறகு, வளசரவாக்கத்தில் வீடு வாங்கி கட்டி, மனைவியை சிறப்பாக வாழ வைத்தார்.
காதல் - மதுப்பழக்கம்
மது அருந்திவிட்டால் நிறைய பேர் இயல்பையே மறந்துவிடுவார்கள்.. மணிக்குயில் பட ஷுட்டிங்கில் சிவரஞ்சனியை காதலிக்க துவங்கிவிட்டார்.. இத்தனைக்கும் முரளிக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்துவிட்டார்கள். ஆனால், சிவரஞ்சனி அந்த காதலை நிராகரித்துவிட்டார். அந்த நேரத்தில், முரளி நிறைய மது அருந்தி, ஷூட்டிங்கில் சில இடர்பாடுகளும் ஏற்பட்டன. புதுபுது ஹீரோக்கள் வரும்போது, முரளிக்கான படவாய்ப்புகளும் ஒருகட்டத்தில் குறைந்து போனது. டேனியல் பாலாஜி முரளியின் தம்பிதான் என்றாலும், அவரை கை தூக்கிவிடவிவில்லை.. அஜித், தன்னுடைய மச்சான் ரிச்சர்டுக்கும் கை கொடுக்கவில்லை.. விஜய் தன்னுடைய தம்பி விக்ராந்த்துக்கும் கை தூக்கிவிடவில்லை. தங்கள் குடும்பத்தினருக்கு உதவி செய்தால், அதையும் சிலர் விமர்சிப்பார்கள் என்பதால், உதவிகளை செய்யாமல் இருந்திருக்கலாம் .. ஆனால், முரளி மிகவும் நல்லவர், தன்மையான குணம் கொண்டவர் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications