இசையமைப்பாளர் கணேஷூக்கு வந்த பார்சல்.. சங்கர் கணேஷ் ஏன் கை கிளவுஸ் போட்டிருக்கார் தெரியுமா: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல இசையமைப்பாளர்கள் சங்கர் - கணேஷ்.. இதில் கணேஷுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. இதுகுறித்து அவர் மகனும் நடிகருமான ஸ்ரீகணேஷ் கூறும்போது, "ஏற்கெனவே இதய பிரச்சினை இருந்தது. டாக்டர்கள் பாடக்கூடாது என்று சொல்லியும், முதல்வர் ஸ்டாலினை அப்பாவுக்குப் பிடிக்கும் என்பதால் திமுகவின் முப்பெரும் விழாவுக்கான பாடல் ஒத்திகைக்காக ஸ்டூடியோ சென்றார். அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நுரையீரலில் நீர் கோர்த்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்" என்றார். இந்நிலையில், பத்திரிகையாளர் சேகுவேரா சங்கர் கணேஷ் பற்றி பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.

King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து இசையமைத்தபிறகு, எம்எஸ் விஸ்வநாதன் மட்டும் தனியாக இசையமைத்து கொண்டிருந்தார்..

shankar ganesh music director Ganesh

இளையராஜா வரும்காலகட்டத்துக்கு முன்பே சங்கர் கணேஷ் வந்துவிட்டார்.. 90களிலிருந்து இளையராஜா உச்சத்தில் இருந்தாலும், 80-90 காலகட்டங்களில் சங்கர் கணேஷும் உச்சத்தில் இருந்தார். எம்எஸ்விக்கு பிறகு, எம்ஜிஆர் படங்களுக்கும் இசையமைத்தவர்.. எம்ஜிஆருக்கு இவரை மிகவும் பிடிக்கும்..

எம்ஜிஆருக்கு நெருக்கமான கணேஷ்

சங்கர்-கணேஷ் என்பவர்கள் இரட்டையர்கள்.. தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர் பெயர் கணேஷ்.. சங்கர் இறந்துவிட்டார்..

விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையராக இருந்தாலும் விஸ்வநாதனை பலருக்கும் தெரியும்.. அதுபோல சங்கர் - கணேஷ் இரட்டையராக இருந்தாலும், சங்கரைவிட கணேஷைதான் அதிகம் பேருக்கு தெரியும். இசையமைப்பாளர்கள் சினிமாவில் நடிப்பது மிகவும் குறைவு.. அன்றைய காலத்தில் சினிமாவில் நடித்த இசையமைப்பாளர் கணேஷ்.. ஒத்தையடி பாதையிலே உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவருக்கு பிறகுதான் மலேசியா வாசுதேவன் சினிமாவில் நடித்தார்.

பார்சலில் வந்த வெடிகுண்டு

ஆங்கில எழுத்தை வைத்து பேக்கிரவுண்ட் மியூசிக் போட்டவர் கணேஷ்.. இளையராஜா பாடல் எப்படி தனித்துவமாக தெரிகிறதோ அதுபோல, சங்கர் கணேஷ் பாடல்களும் , இளையராஜா பாடல்களை போலவே இருக்கும்..

பல வருடங்களுக்கு முன்பு, விபத்து ஒன்று நடந்தது.. சதித் திட்டத்துடன் குண்டுவெடிப்பு ஒன்று நடத்தப்பட்டது.. கொரியரில் டேப்ரிக்கார்டு பார்சல் ஒன்று வந்துள்ளது.. அந்த பார்சலை வாங்கிய சங்கர் கணேஷ், டேப் ரிக்கார்டு ஆன் செய்துள்ளார்.. அப்போதுதான் சங்கர் கணேஷ்
குண்டுவெடித்து படுகாயமடைந்தார்..

இதைக்கேட்டு அதிர்ந்த எம்ஜிஆர், உடனடியாக சங்கர் கணேஷூக்கு உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.. அருகிலிருந்தே கண்ணும் கருத்துமாக சங்கர் கணேஷை கவனித்து கொண்டார்.. எனினும், இந்த குண்டுவெடிப்பால் சங்கர் கணேஷின் விரல்கள் துண்டிக்கப்பட்டன.. அதை மறைப்பதற்காகவே கையில் கிளவுஸ் போட்டிருக்கிறார்..

துண்டிக்கப்பட்ட விரல்கள்

கண்கள், உடல் முழுவதும் இந்த வெடியால் பாதிக்கப்பட்டது.. எனினும், டேப் ரிக்கார்டரை ஆன் செய்ததால், கைகளில்தான் மிகப்பெரிய அளவில் விபத்து ஏற்பட்டது. இப்படி பாம் வைத்து கொல்லும் அளவுக்கு துணிந்திருக்கிறார்கள் என்றால், கணேஷ் உயிருடன் இருக்கவே கூடாது என்றுதான் நினைத்திருக்கிறார்கள்..

ஆனால், யார் செய்த சதி என்று தெரியவில்லை.. ஒன்று சங்கர் கணேஷால் சம்பந்தப்பட்டவர்கள் மனதளவில் காயப்பட்டிருக்க வேண்டும் அல்லது தொழில் போட்டி இருந்திருக்க வேண்டும். சங்கர் இறந்ததும், இளையராஜாவின் அசுர வளர்ச்சியும் சேர்ந்து, கணேஷ் சினிமாவிலிருந்தே ஒதுங்கும்படியாகிவிட்டது.. இளையராஜாவுக்கு பாரதிராஜா, வைரமுத்து, எஸ்பிபி என்று மிகப்பெரிய குழு வெற்றிகரமாக அமைந்துவிட்டது.

சங்கர் கணேஷ் உடல்நிலை

மேலும் தனித்துவமான இசை என்று இல்லை.. சீனியர் இசையமைப்பாளர்கள் போல இசையிருந்ததும் அவருக்கு பெரிதளவு வாய்ப்பு வராமல் போக காரணமாகிவிட்டது. எப்போதுமே இரட்டை இசையமைப்பாளர்கள் நிலைப்பதில்லை. எம்எஸ்வியும் அப்படித்தான்.

இப்போது சிகிச்சையில் சங்கர் கணேஷ் உள்ளார். வயது மூப்பு காரணமாக உடல் பாதிப்பு வருவது சகஜம்தான்.. அதுக்காக கவலைக்கிடம் என்பது போல செய்திகள் இல்லை..
நல்லபடியாக சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்துவிடுவார்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+