சுருள் சுருளான தலைமுடி... கூட யாரு முத்து மாமா வா!! ஜோடியா திருமதி ஹிட்லரை பாக்க வராங்க!
சென்னை : ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியல் முடிவடைந்த பிறகு மீண்டும் ஜோடியாக திருமதி ஹிட்லரை பார்க்க வந்திருக்கும் முத்து மாமா வெண்ணிலா ஜோடி, இதை பார்த்த ரசிகர்கள் ஆரத்தி எடுக்க ஆரம்பித்து விட்டனர்.
மாடர்ன் உடையில் நம்ம வெண்ணிலா மனதினை கொள்ளை கொள்கிறாரே என்று அவருடைய ரசிகர்கள் சந்தோசத்தில் பறக்கின்றனர்.
மீண்டும் ஜோடியாக திருமதி ஹிட்லர் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் நட்சத்திரா, ஸ்ரீ ஜோடிக்கு வரவேற்புகள் பலமாகத்தான் இருக்கிறது.

இந்த வாரம் செம மாஸ் தான்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் சீரியல் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தோடு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பொதுவாக சீரியல்கள் என்றாலே அழுகாச்சி சீன்களும், அடுத்தவர் குடும்பத்தை எப்படி கெடுக்கலாம் என்று பக்கா பிளான் போட்டுக் கொடுக்கும் நிகழ்ச்சியாக தான் இருந்துகொண்டிருக்கும். ஆனால் இந்த சீரியல் இதற்கு எல்லாம் மாற்றாக இருக்கிறது. ஜாலியான கேரக்டராக அந்த சீரியலில் ஹாசினி கேரக்டரில் கீர்த்தனா பொதுவால் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக அமித் பார்கவ், அபினவ் ஜனார்த்தனன் என்றும் ஷாட்டாக ஏஜே என்றும் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் எப்போதுமே எலியும், பூனையுமாக சண்டை போட்டுக்கொண்டு இருப்பதை பார்க்கும்போது ஜாலியாக இருந்துகொண்டிருக்கிறது.

ஜெனிலியாவையே தோற்கடித்து விடுவார் போல
என்னதான் இவருடைய ஜோடிப்பொருத்தம் அனைவருக்கும் பிடித்திருந்தாலும் ஏஜேவின் வீட்டுக்குள்ளே இருக்கும் அவருடைய மருமகள்கள் ஹாசினியை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்றி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிளான் செய்து கொண்டிருந்தாலும் கடைசியில் அது எல்லாமே பிளாப்பாக முடிந்துவிடுகிறது. ஹாசினி தனக்கே உரிய துடுப்பு தனத்துடன் எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் ஏஜே வை வம்பு இழுப்பதிலேயே குறியாக இருக்கிறார். அதுவும் தற்போது ஏஜே மீது இவருக்கு வந்து இருக்கும் காதலை இவர் புரிய வைப்பதற்காக செய்யும் செயல்களெலலாம் கடைசியில் காமெடி ஆகிக்கொண்டிருக்கிறது. ஹாசினி யோட காதலை ஏஜே புரிந்து கொள்வாரா? அல்லது ஹாசினியின் வீட்டைவிட்டு ஏஜே வின் மருமகள்கள் வெளியேற்றி விடுவார்களா என்று இந்த சீரியல் கதைக்களம் போய்க் கொண்டிருந்தாலும் அதிரடியாக ஆனால் பலருக்கும் போரடிக்காமல் சென்று கொண்டிருக்கிறது.

கலக்கலான மாமியார்
இந்த சீரியலில் ஏஜேவின் அம்மாவாக அம்பிகா நடித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய நடிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் மோசம் என்று சொல்ல முடியாத அளவில் தான் இந்த சீரியலின் கதை இருக்கிறது. அம்பிகாவின் ஆசை மருமகள் இந்த வீட்டில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஹாஷினி யோடு அடிக்கடி பிளான் போட்டு ஏஜேவை அம்பிகாவும் தன்னுடைய பங்குக்கு ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டு விடுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் ஏஜே மாட்டிக்கொண்டு முழிப்பதை பார்க்கும்போது கொஞ்சம் பாவமாகத்தான் இருக்கிறது. அமித் தனக்கே உரிய க்யூட்டான நடிப்பை இந்த சீரியலில் அழகாக வெளியே காட்டிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் இதேபோலத்தான் கொஞ்சம் பாசம் கலந்த திமிர் தனத்தோடு பிரியா பவானி சங்கரை பாடாய் படுத்திக் கொண்டிருந்தார். தற்போது அதே போல இந்த சீரியலிலும் தன்னுடைய நடிப்பை அழகாய் வெளிக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

என்னவா இருக்கும்??
இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே காதல் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சேட்டைகள் செய்து கொண்டிருந்தாலும் தற்போது இந்த சீரியலில் இவர்களுக்குள் புதிதாக ஒரு ஜோடி களமிறங்குகிறது. அது வேறு யாரும் இல்லை, யாரடி நீ மோகினி சீரியலின் ஜோடிகளான நட்சத்திராவும் ஸ்ரீ யும் தான். இவர்கள் இருவரும் இந்த சீரியலில் என்ன மாதிரி கேரக்டரில் அறிமுகமாக போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர். ஏற்கனவே யாரடி நீ மோகினி சீரியல் இப்போது தான் முடிவடைந்து இருக்கிறது. இருந்தாலும், இந்த சீரியலை தொடர்ந்து பல வருடங்களாக பார்த்து ரசித்த ரசிகர்கள் ரொம்பவே மிஸ் பண்ணி கொண்டிருந்தனர். அதனால் மீண்டும் இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்து விட்டார்கள் போல. ஆனாலும் தற்போது வெண்ணிலா மார்டன் உலகில் புதிய ஸ்டைலில் சும்மா பட்டையை கிளப்பியிருக்கிறார். இவர்களின் வரவினால் ஹிட்லரின் வாழ்க்கையில் வசந்தம் வருமா? அல்லது இவர்களும் தங்கள் பங்குக்கு பிரச்சினை கிளப்ப போகிறார்களா என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும். அதற்காகத்தான் தற்போது ரசிகர்களும் வெயிட்டிங்கில் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications